Tag Archive: அருட்செல்வப்பேரரசன்

ஹரிவம்சம் தொடக்கம் – அருட்செல்வப் பேரரசன்

முழு மகாபாரத மொழியாக்கத்திற்குப் பின் அருட்செல்வப் பேரரசன் இன்னொரு பெரும்பணியை இன்று முதல் தொடங்கியிருக்கிறார். ஹரிவம்ச புராணத்தின் முழுமையான மொழியாக்கம். ஹரிவம்சம் மகாபாரதத்தின் பின்னொட்டு என்று கருதப்படுகிறது.16,374 பாடல்கள் கொண்ட பெருநூல் இது. பாகவதம். ஹரிவம்சம் இரண்டுமே கிருஷ்ணனின் வரலாற்றை, அதாவது மகாபாரதத்தில் கூறப்படாதவற்றை கூற பின்னர் உருவாக்கப்பட்டவை.   ஹரிவம்சம், இந்துக்களின் பெருந் தீர்க்கதரிசியுடைய வாழ்க்கையையும், குடும்பத்தையும் சொல்கிறது. எனவே, இத்தகைய ஒரு படைப்பின் ஆங்கில மொழியாக்கம் பொதுமக்களின் வரவேற்பை நிச்சயம் பெறும் என நம்புகிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129759

‘அரசன் பாரதம்’ பாராட்டுவிழா

  முழு மஹாபாரதம் -அரசன் – இணையதளம் கோவைக்கு மீண்டும் மீண்டும் சென்றுகொண்டிருக்கிறேன். கோவை என்பது ஒரு மையம்தான். ஈரோடு நாமக்கல் கரூர் சேலம் உள்ளிட்ட கொங்கு வட்டாரம்தான் அது. திருச்சி பாண்டிச்சேரி சென்னை என பல ஊர்களிலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தார்கள். நான் காலை 8 மணிக்கு சென்று சேர்ந்தேன், ரயில் ஒருமணிநேரம் தாமதம். ரயில்நிலையத்திற்கு நண்பர்கள் வந்திருந்தனர். ராஜாநிவாஸ் மாளிகைக்குச் சென்றபோது அங்கே  ஏற்கனவே பத்துநண்பர்கள் வந்திருந்தனர். காலையிலேயே ‘அரங்கம்’ கூடிவிட்டது. எப்போதுமே நண்பர் கூடுகைகள் வேடிக்கைப் பேச்சும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129680

அருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…

எதைத் தேடினாலும் இணையத்தில் எளிதாகக் கிடைக்கும் இன்றைய நிலையில் இப்பணியைச் செய்து முடிக்க ஏழு ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. அந்தக் காலத்தில், கணினி இல்லாமல் பிரதிகளைத் தேடி நகரங்கள் தோறும் நூலகம் நூலகமாக அலைந்து திரிந்து நம் முன்னோர்கள் பட்ட பாட்டை எண்ணிப் பார்க்கிறேன். அவர்கள் அனைவரும் எந்த நோக்கத்திற்காக அவ்வளவு இன்னல்களுக்கிடையிலும் மஹாபாரதத்தை மொழிபெயர்த்தனரோ கிட்டத்தட்ட அதே நோக்கத்திற்காகவே நானும் இப்பணியைச் செய்யத் தொடங்கினேன். அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களில் சொற்ப அளவைக்கூட அனுபவிக்காத எனக்கே சில இழப்புகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129516

முழுமகாபாரதம் நிறைவு

கிஸாரி மோகன் கங்குலியின் முழுமகாபாரதத்தையும் நாள் தோறும் என மொழியாக்கம் செய்து இணையத்தில் வெளியிடும் பணியை ஜனவரி 9 2013ல் தொடங்கினார் அருட்செல்வப் பேரரசன். அப்பெரும்பணியை இப்போது முடித்திருக்கிறார். சோர்வில்லாமல் தொடர்ச்சியாக இதைச் செய்து முடித்திருக்கிறார். எளிமையான நேரடி மொழி. எவரும் வாசிக்கும் படியான ஒழுக்குள்ள உரைநடை. தமிழுக்கு இது ஓர் அருங்கொடை. விரைவிலேயே இது நூல் வடிவில் அமேசானிலும் அச்சிலும் வெளிவரவேண்டும். அருட்செல்வப் பேரரசன் அவர்களை மனமாரத் தழுவிக்கொள்கிறேன் முழு மஹாபாரதம் -அரசன் ==================== கங்கூலி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129449

வியாசபாரதமும் வெண்முரசும்

  மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, பன்னிரு படைக்களம் படித்துக் கொண்டிருந்தேன்… ஜராசந்தன் வதம் முடிய படித்த போது, எவ்வளவு தகவல்களை இவர் தருகிறார்… இவ்வளவில் பாதி தகவலாவது கங்குலியின் பதிப்பில் திரட்ட முடியுமா என்று திரும்பவும் மஹாபாரதத்தின் சபாபர்வம் கோப்புகளைக் கண்டேன். வியப்படைந்தேன். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சின்ன குறிப்புகளையும் நீங்கள் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள்… உதாரணத்திற்கு கிருஷ்ணனும், பீமார்ஜுனர்களும் மகதத்தின் கடைவீதிகளில் நடந்தது; பெரு முரசுகள், மற்போர், ஜராசந்த வதம் முடிந்ததும் சகதேவனைச் சந்திப்பது என அனைத்திலும் உள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87889