Tag Archive: அருகர்களின் பாதை

பயணம் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்: நலம் தானே? உங்களது விஷ்ணுபுரம் நாவல் வாசிப்பரங்கு நடந்து முடிந்தது குறித்துக் கேள்விப்பட்டுக் கொஞ்சம் பொறாமையாக இருந்தது. நான் வருகிற ஜூலை 15 தேதியில் இருந்து ஆகஸ்டு 13 ஆம் தேதி வரை இந்தியா வர உள்ளேன். அதுவும், குழந்தைகள்/மனைவி இல்லாமல். இன்னும் சில நாட்கள் தள்ளி இந்த வாசிப்பரங்கு இருந்திருந்தால் அவசியம் வந்திருப்பேன்! சரி, இந்த முறை பங்கேற்க முடியாமல் போய் விட்டது. உங்களது அருகர்களின் பாதையைப் படித்ததில் இருந்து அவசியம் இந்தியாவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28711

ஓணம்பாக்கம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபத்தில் சென்று வந்த ஓணம்பாக்கம் என்ற ஊரை பற்றியும், அங்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஓணம்பாக்கம் மதுராந்தகம் வட்டம், செய்யூரில் இருந்து, 6 கி மீ தொலைவில் மேல்மருவத்தூர் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது. இங்குள்ள குரத்திமலையிலும் கூசமலையிலும் சமண படுக்கைகளும், பிம்பங்களும் இருப்பதை கேள்விப்பட்டு, அங்கு சென்றேன். பாலாஜி என்ற MCA படிக்கும் மாணவரின் உதவியோடு குரத்திமலையில், இரண்டு இடங்களில் படுக்கைகள் இருப்பதை கண்டறிந்தேன். மலைக்கு கிழக்கே இருக்கும் ஐந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27487

வாவிகள்

அன்புள்ள ஜெ, நலமாகயிருப்பீர்கள் என நம்புகிறேன். தங்களின் அருகர்களின் பாதை பயணத்தின்போது எடுக்கப்பட்ட வாவிகளின் புகைப்படங்கள் போல வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள நடைவாவி தண்ணீர் குளங்களின் அருமையான புகைப்படங்களை இந்த இணைப்பில் காணலாம். மொத்தம் நான்கு பக்கங்களுள்ளன. இந்தமுறையும் ஊட்டி சந்திப்பிற்கு என்னால் வர இயலாது, ஜெ. கூட்டம் எப்பொழுதும் போல சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள். அன்புடன் தங்கவேல்

Permanent link to this article: https://www.jeyamohan.in/27483

விளாங்காடு விச்சூர்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபத்தில் சென்னை வாழ் சமணர்களுடன், சென்னையைச் சுற்றி உள்ள சமணக் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. விளாங்காடுபாக்கம், சென்னை புழல் தாலுகாவில் உள்ள சிறு கிராமம். இங்குள்ள சமணக் கோவிலில், இந்த ஊருக்கு அருகில் உள்ள ஊர்களில் (பெரவள்ளூர், மெதவாயில், வல்லூர்) கிடைத்த பழங்கால சமணச் சிலைகள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. சம்பத் ஐயர் என்ற சமணரின் முயற்சியால், 1934 ஆம் ஆண்டு, இக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் உள்ள மூலவரின் சிலையும் இந்த ஊரிலே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26989

இனிமேலும் ஆரிய-திராவிட வாதம் பேசலாமா?

எங்கள் சமண இந்தியப் பயணத்தில் லோத்தல், டோலவீரா நகரங்களுக்கும் சென்றிருந்தோம். அந்த விவரணையில் எப்படி சரஸ்வதி கரையில் உருவான ஒரு பெரிய நாகரீகம் காலப்போக்கில் அழிந்தது என்பதை விவரித்திருந்தேன். ஆரிய -திராவிடவாதம் என்பது மொகஞ்சதாரோ ஹரப்பா என்னும் இரு நகரங்கள் மட்டுமே அகழ்வாய்வில் கிடைத்தபோது அதற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ஒரு ஊகம் மட்டுமே. இன்று நூற்றுக்கணக்கான அதேகாலகட்டத்து , அதே நாகரீகம் கொண்ட நகரங்கள் அகழ்வுசெய்யப்பட்டுவிட்ட நிலையில் ஆரியர்படையெடுப்பு என்ற வாதம், ஆரிய திராவிட இனப்பிரிவினைக்கோட்பாடு அர்த்தமற்றதாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26295

அருகர்களின் பாதை – டைம்ஸ் ஆப் இண்டியாவில்

இன்றைய டைம்ஸ் ஆப் இண்டியாவில் நாங்கள் சென்ற அருகர்களின் பாதை பயணம் குறித்த கட்டுரை வெளியாகி உள்ளது .

Permanent link to this article: https://www.jeyamohan.in/26211

பயணம் – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், நலம் தானே? உங்களை ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன் ஹூஸ்டனில் சந்தித்த போது உங்களது ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் படித்திருந்தேன் (விஷ்ணுபுரம் – நண்பர் சண்முகத்தின் நல்ல ஆலோசனை). அதைப் படித்து முடித்த பிரமிப்பு நீங்குவதற்குள்ளாகவே உங்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது நல்ல அதிருஷ்டம் என்றே சொல்ல வேண்டும். அதிகம் தமிழில் படிக்காமல் இருந்த நான், அந்தச் சந்திப்புக்குப் பிறகு உங்களது அனைத்துப் புத்தகங்களையும் (ஏறக்குறைய – கொற்றவை தவிர்த்து) ஒருமுறையாவது படித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25499

அருகர்களின் பாதை – ஓர் அனுபவம்

உண்மையில் சொல்லித்தீராத அனுபவமாகவே எனக்கு இருக்கிறது. இப்படி ஆரம்பிக்கவா..? நாற்பத்தைந்திற்கும் மேற்பட்ட பயண இலக்குகள், நூற்றுக்கும் மேற்பட்ட புராதனச்சின்னங்கள், முப்பது நாட்கள், 8800 கிலோமீட்டர்கள், ஒரு பயணம். ஒரு முறை கண்ட வழியோரக் காட்சிகள், பின்னர் பார்க்க நேராமல் அந்தத் தருணத்திற்கு மட்டுமேயாகி, அமரத்துவம் பெற்றன. கணம் தோறும் மாறும் காட்சிகள். அள்ளிப்பருக முயன்ற இரு கண்கள், அவற்றின் இயலாமை கூறி பின்வாங்க, என் சிறுமையை நான் உணர்ந்து தனிமையில் நின்ற மண்டபங்கள், என்னைக் கண்டு, ஏன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25212

திருப்பான்மலை, ஊரணித்தாங்கல், நெகநூர்ப்பட்டி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் அருகர்களின் பாதை பயணக்கட்டுரைகள் தினமும் படித்து வருகிறேன். ஏன் உங்கள் பயணத்தில் தமிழ்நாட்டை விட்டு விட்டீர்கள்? சமீபத்தில் சென்று வந்த திருப்பான்மலை, ஊரணித்தாங்கல், நெகநூர்ப்பட்டி பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். திருப்பான்மலை, ஆற்காட்டில் இருந்து தென்கிழக்காக 7 கி மீ தொலைவில் இருக்கும் ஒரு பாறைக்குன்று ஆகும். இதைப் பஞ்சபாண்டவர் மலை என்றும் அழைக்கிறார்கள். மலைக்குக் கீழே உள்ள குடைவரையில் ஏழு அறைகள் காணப்படுகின்றன. குடைவறைக்கு மேலே தேய்ந்த நிலையில் ஒரு சமண …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24438