Tag Archive: அரிஷ்டநேமி

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 50

பகுதி ஐந்து : தேரோட்டி – 15 ரைவத மலையின் பின்பக்கமாக சென்ற செம்மண் பாதை, சுட்டுவிரல் தொட்டு நீட்டிய செங்காவிக்கோடு போல கரும்பாறைகளைச் சுற்றியும் செம்மலைச்சரிவுகளில் இறங்கியும் வளைந்தேறியும் சென்றது. இருபக்கமும் முட்கள் செறிந்து சாம்பல் நிறம் கொண்டு நின்ற செடிகள் பகைமையுடன் சிலிர்த்திருந்தன. உச்சிப்பாறைகளின் மேல் வரையாடுகளின் நிரை ஒன்று மெல்லிய தும்மலோசை எழுப்பியபடி கடந்து சென்றது. காலையில் அவ்வழி சென்ற அருகப் படிவர்களின் காலடிகள் செம்மண் புழுதியில் படிந்து அப்போதும் அழியாமல் எஞ்சியிருந்தன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80326

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 49

பகுதி ஐந்து : தேரோட்டி – 14 விருந்தினர் இல்லமாக இளைய யாதவருக்கு அளிக்கப்பட்டிருந்தது ரைவதமலையில் இருந்தவற்றிலேயே பெரிய இல்லம். ஆனால் துவாரகையின் மாளிகையுடன் ஒப்பிடுகையில் அதை சிறிய குடில் என்றே சொல்லவேண்டும் என அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். அதன் வாயிலில் நின்ற ஏவலன் தலைவணங்கினான். இளைய யாதவர் இயல்பாக “உள்ளே வருக” என்றபின் நுழைந்து குறடுகளை காலாலேயே உதறிவிட்டு துள்ளி மஞ்சத்தில் விழுந்து மல்லாந்து படுத்து ஒரு தலையணையை எடுத்து மார்பின்மேல் வைத்துக்கொண்டார். அவரிடம் எப்போதுமிருக்கும் அந்தச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80305

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 48

பகுதி ஐந்து : தேரோட்டி – 13 இளைய யாதவருடன் அரண்மனையிலிருந்து பிரிந்துசென்ற இடைநாழியில் நடக்கையில் அர்ஜுனன் அவர் சுபத்திரையைப் பற்றி பேசுவார் என எதிர்பார்த்தான். ஆனால் அவர் சொல்லவேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டதாக தோன்றியது. அத்தருணத்தில் அது மிகச்சிறிய, பொருளற்ற செயலென தோன்றியது. உடனே ஓர் எண்ணம் வந்தது. அரசியலுக்காகத்தான் அந்த மணம் என்றால் ஏன் நகுலனோ சகதேவனோ சுபத்திரையை கைகொள்ளக் கூடாது? அவளுடைய வயதும் அவர்களுக்குத்தான் பொருத்தமானது. அதையே சொல்லலாம் என அவன் எண்ணியபோது இளைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80290

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 47

பகுதி ஐந்து : தேரோட்டி – 12 ரைவதமலை உச்சியில் அமைந்த அரண்மனைக்குச் செல்லும் உருளைப்பாறைப் படிக்கட்டால் ஆன பாதையின் இரு புறங்களிலும் பிரிந்து சென்று நூற்றுக்கணக்கான கொடிவழிப் பாதைகள் ஒவ்வொன்றும் ஓர் அருகர் ஆலயத்தையோ அடிகள் பொறிக்கப்பட்ட ஊழ்கப்பாறையையோ சென்றடைந்தன. அருகர் ஆலயங்கள் கற்பாறைகளை அடுக்கி மேலே மரப்பட்டைக்கூரையுடன் அமைக்கப்பட்டிருந்தன. கூம்புவடிவக்கூரையின் முகப்பில் அந்த அருகருக்குரிய அடையாளம் பொறிக்கப்பட்ட வெண்கொடி பறந்தது. அருகர்அடிகள் அமைந்த பாறைகளின் அருகே சுவஸ்திகம் பொறிக்கப்பட்ட கொடிகள் பறந்தன. அருகே அப்பாறையிலேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80271

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 31

பகுதி ஆறு : தீச்சாரல் [ 5 ] நீலநிறமான மரவுரியாடையும் பனைத்தாலங்களால் செய்த நகைகளும் அணிந்த சியாமநாகினியை அரண்மனை வைத்தியர்தான் கூட்டிவந்தார். அவள் தன் முன் வந்து தலைவணங்காமல் நின்றதைக் கண்டு சத்யவதி சற்று எரிச்சல் கொண்டாலும் அதை அடக்கி “அமைச்சர் அனைத்தையும் கூறியிருப்பாரென்று நினைக்கிறேன்” என்றாள். சியாமநாகினி “ஆம்” என்றாள். “நான் விரும்புவதுபோல அனைத்தும் நடந்தால் நீ கேட்பதைவிட இருமடங்கு பரிசுகள் கொடுக்கிறேன்” என்றாள் சத்யவதி . “நான் நினைப்பதில் ஒரு பகுதியை மட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44674

» Newer posts