Tag Archive: அரிஷ்டநேமி

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 63

பகுதி ஐந்து : தேரோட்டி – 28 பெருஞ்சாலையை அடைந்து இருபுறமும் கூடிநின்ற மக்களின் வாழ்த்தொலிகளும் மலர்சொரிதலும் சேர்ந்து பின்னிய வான் மூடிய பெருந்திரையை கிழித்து சுப்ரதீபம் சென்று கொண்டிருந்தது. செல்லச்செல்ல அதன் விரைவு கூடிக்கூடி வந்தது.  பெருங்காற்றிலாடும் அடிமரங்களை காண்பது போலிருந்தது அதன் கால்களின் அசைவு. துதிக்கை நிலத்தை தொட்டுத் தொட்டு பின் தள்ளுவதாக பட்டது. எங்கோ எவரோ “விண்ணூர்ந்து ஏகும் அருகர்” என்று கூவினார். அவ்வொரு சொல் எழுவதற்கென்றே அங்கு கூடியிருந்த அனைவருடைய அகங்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80756

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 62

பகுதி ஐந்து : தேரோட்டி – 27 சீரான காலடிகளுடன் தென்மேற்குத் திசை நோக்கி சுப்ரதீபம் சென்று கொண்டிருந்தது. அவர்களுக்குப் பின்னால் அது வந்த வழி மக்கள்கூட்டத்தால் மூடப்பட்டது. அவர்களின் பின்னால் உள்ளக்கிளர்ச்சி கொண்ட மக்கள் ஓசையிட்டபடி தொடர்ந்து வருவதைக் கண்ட அர்ஜுனன் “எவரும் தொடரக்கூடாது. நின்ற இடத்திலேயே அனைவரும் நிற்க வேண்டும்” என்று ஆணையிட்டான். படைத்தலைவன் “ஆணை” என்றபின் தன் கைகளை அலைத்து வீசி “எவரும் தொடராமல் பார்த்துக் கொள்ளுங்கள்! ஆணை மீறி தொடர்பவர்களை வீழ்த்துங்கள்!” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80751

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 61

பகுதி ஐந்து : தேரோட்டி – 26 முகில்கள் தீப்பற்றிக் கொண்டது போல் வானக் கருமைக்குள் செம்மை படர்ந்தது. கீழ்வானில் எழுந்த விடிவெள்ளி உள்ளங்கையில் எடுத்து வைக்கப்பட்ட நீர்த்துளி போல் ஒளிவிட்டுக் கொண்டிருந்தது. சாலையின் இருபுறமும் உடல் நிறைத்து தலைகளென செறிந்த மக்கள் அவரை நோக்கி ”சௌரபுரத்து சுடர் வாழ்க! மணமங்கலம் கொள்ளும் மன்னவர் வாழ்க!” என்று வாழ்த்தினர். சாலையின் மறு எல்லையில் காத்து நின்றிருந்த வீரர்கள் அவரை எதிர்கொண்டழைத்தனர். மையஅரண்மனையின் வடக்குத் திசையில் இருந்தது சுப்ரதீபத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80743

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 60

பகுதி ஐந்து : தேரோட்டி – 25 காவல்மாடங்களில் அமைந்த பெருமுரசுகள் புலரியை அறிவித்ததுமே துவாரகையின் அனைத்து இல்லங்களிலிருந்தும் எழுந்த மக்களின் ஓசை அலையென பெருகி எழுந்து வந்து அரண்மனையின் தாழ்வாரங்களையும் உள்ளறைகளையும் முழங்க வைத்தது. இரவு முழுக்க துயில் மறந்து இருந்த நகரத்தில் நாணலில் தீ பற்றிக்கொண்டது போல ஆயிரக்கணக்கான சுடர்கள் கொளுத்தப்பட்டு செவ்வொளி பரந்தது. அனைத்து ஆலயங்களின் மணிகளும் சங்குகளும் முழங்கத்தொடங்கின. நீராடி சிவக்குறி அணிந்து தன் மாளிகை விட்டிறங்கி வந்த அர்ஜுனனைக் காத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80696

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 58

பகுதி ஐந்து : தேரோட்டி – 23 அர்ஜுனன் துவாரகையை அடைவதற்கு முன்னரே நகரம் மணவிழவுக்கென அணிக்கோலம் கொண்டிருந்தது. அதன் மாபெரும் தோரணவாயில் பொன்மூங்கில்களில் கட்டப்பட்ட கொடிகளாலும் இருபுறமும் செறிந்த செம்பட்டு சித்திரத்தூண்களாலும் பாவட்டாக்களாலும் பரிவட்டங்களாலும் மலர்க்காடு என வண்ணம் கொண்டிருந்தது. அவர்கள் அணுகும் செய்தியை முன்னரே சென்ற புரவித் தூதன் கொடியை அசைத்து தெரிவித்ததும் தோரண வாயிலுக்கு இருமருங்குமிருந்த காவல்மாடத்துக்கு மேல் இருந்த பெருமுரசுகள் முழங்க தொடங்கின. கொம்புகள் உடன் எழுந்து பெருங்களிற்றுநிரையென பிளிறலோசை எழுப்பின. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80629

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 57

பகுதி ஐந்து : தேரோட்டி – 22 சீரான காலடிகளுடன் கலையாத ஒழுக்காக யாதவர்கள் சோலைக்குள் புகுந்து கொண்டிருந்தனர். அவர்களது காலடிகளின் ஓசை சோலையெங்கும் எதிரொலித்தது. கலைந்து எழுந்த பறவைகள் குட்டைமரங்களின் இலைப்பரப்புக்கு மேலே கலைந்து ஒலித்துக்கொண்டிருந்தன. யாதவர்கள் ஒருவர் தோளை ஒருவர் பற்றியிருந்தனர். தளர்ந்து நடந்த சிலரை இளைஞர் பிடித்துக்கொண்டனர். எங்கும் அந்த அணி உடைவதற்கான அசைவு தெரியவில்லை. அர்ஜுனன் நீள்மூச்சுவிட்டான். ஒன்றுமில்லை, வெறும் அச்சம் இது, அனைவரும் சீராகவே செல்கிறார்கள், அனைத்தும் முறைப்படியே உள்ளன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80532

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 56

பகுதி ஐந்து : தேரோட்டி – 21 ரைவத மலையிலிருந்து ஒருநாள் பயணத்தொலைவில்தான் துவாரகை இருந்தது. முட்புதர்க் குவைகள் விரிந்த அரைப்பாலை நிலம் கோடையில் பகல்பயணத்திற்கு உகந்ததல்ல என்பதனால்தான் மேலும் ஓர் இரவு தேவைப்பட்டது. ரைவத மலையிலிருந்து பாலைவனத் தொடக்கத்தை அடைந்ததுமே உஜ்ஜயினி நோக்கி செல்லும் யாதவர்கள் பிறரிடம் விடைபெற்று பிரிந்தனர். துவாரகையிலிருந்து வந்தவர்களே எண்ணிக்கையில் மிகுதி என்பதனால் ஒவ்வொரு சிறுகுழு உஜ்ஜயினிக்காக வடகிழக்கு நோக்கி திரும்பும்போதும் பெருங்குரல்கள் எழுந்து நெடுந்தொலைவிற்கு வானில் பறந்து சென்றன. உஜ்ஜயினி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80523

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 55

பகுதி ஐந்து : தேரோட்டி – 20 அரிஷ்டநேமி தங்கியிருந்த பாறைப்பிளவை நோக்கி செல்லும்போது அர்ஜுனன் தனது காலடியோசை சூழ்ந்திருந்த மலைப்பாறைகளில் பட்டு பெருகி எழுவதை அறிந்தான். பலநூறு உறுதியான காலடிகள் அக்குகைவாயில் நோக்கி சென்று கொண்டிருப்பது போல. அவ்வோசை கேட்டு முட்புதர்களிலிருந்து சிறகடித்தெழுந்த பறவைகள் வானில் சுழன்று படபடத்தன. கீழே பரவியிருந்த கூர்முட்களில் அச்சிறகுகளின் நிழல்கள் படிந்து கிழிபட்டுச் செல்வதை கண்டான். காலையொளியில் அவற்றின் நிழல்கள் சரிந்து நீண்டிருக்க முட்கள் மேலும் கூர்நீட்சி கொண்டிருந்தன. அவனுக்கு வலப்பக்கம் எழுந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80490

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 54

பகுதி ஐந்து : தேரோட்டி – 19 இளைய யாதவரும் ஸ்ரீதமரும் அறைவிட்டு அகன்றபின் வாயிலை மூடி மெல்ல அசைந்த திரையை சிலகணங்கள் அர்ஜுனனும் சுபத்திரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் அர்ஜுனன் திரும்பி சுபத்திரையிடம் “போர்க்கலை கற்பதில் இளவரசிக்கு ஆர்வம் உண்டா?” என்றான். எத்தனை எளிதாக முற்றிலும் பொருட்டில்லாத ஒன்றை பேசி உரையாடலை தொடங்கமுடிகிறது என வியந்தான். ஆனால் எளிய மனிதர்கள் கூட அதை அன்றாடம் செய்து கொண்டிருக்கிறார்கள். “எனக்கு விற்கலையில் மட்டும் ஆர்வமில்லை” என்றாள் சுபத்திரை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80425

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 52

பகுதி ஐந்து : தேரோட்டி – 17 ரைவத மலையின் அடிவாரத்தில் இருந்து பெருகி மேலெழுந்த யாதவர்களின் கூட்டம் பெருவெள்ளமொன்று மலையை நிரப்பி மேலெழுந்து கொண்டிருப்பது போல் தோற்றமளித்தது. சருகுகளும் செத்தைகளும் நுரைக்குமிழிகளும் அலைகளுமென அது பெருகி வர அதன் விளிம்புவட்டம் குறுகிக்குறுகி மலைமுடி நோக்கி சென்றது. அவர்கள் எழுப்பிய பேரோசை எதிரொலிக்க மலைப்பாறைகள் அனைத்தும் யானைகளென எருமைகளென பன்றிகளென பெருச்சாளிகளென உயிர்கொண்டு ஓசையிடத் தொடங்கின. எக்கணமும் அவை பாய்ந்து எழுந்து பூசல் கொள்ளுமென்று தோன்றியது. அர்ஜுனன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80374

Older posts «