Tag Archive: அரவிந்த்

சீர்மை (4) – அரவிந்த்

[ஐந்து] த்ரேயா இறந்தபின் அடுத்த இரண்டாண்டுகளுக்கு அலைகளற்ற கடலில் மிதக்கும் தெப்பம்போல் வீற்றிருந்தேன். உப்புநீர் என்னை வருடி, என்மேல் தவழ்ந்து, என்னுடலை மெல்ல கரைத்தபடி இருந்தது. அமைதியின் அந்தக் கருவறையில் நீந்தினேன். தனிமையுள் பெருந்தனிமையாக அங்கு துயில் கொண்டிருந்தேன். நண்பர்களெல்லாம் நான் இன்னும் மீளாத் துயரத்தில் இருப்பதாக எண்ணி ஆறுதல் சொல்லியபடி இருந்தார்கள். அவர்களுக்கு நான் சொல்லி புரியவைக்க முயலவில்லை, இது அவள் எனக்களித்த ஆசி என. இது வெறும் பிரிவு ஏக்கம் அல்ல என. அவள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40494

சீர்மை (3) – அரவிந்த்

[நான்கு] இரும்புக் கதவுகளை மெல்ல அடைத்துவிட்டு கிடங்கில் இருந்து வெளியே வந்தேன். அதுவரை பின்தொடர்ந்து வந்த காலடியோசை திடீரென்று மறைந்தது. கொட்டகையின் இருள் தலைசுற்றலை உண்டாக்கியது. திசை மறந்து ஒருகணம் ஸ்தம்பித்து நின்றேன். கண் இமையின் எதிரொளி சிறு பிம்பங்களாக  சுழன்று வந்தன. கைகளை விரித்து சுவரை தொட்டபடி வெளியே வந்தேன். தெருமுகப்பை அடைந்ததும் வெயில் முகத்தில் அறைந்தது. டாஹோ ஏரி நிறமின்றி வெளிறி காட்சியளித்தது. வாய் கசக்கவே, காறிக்காறித் துப்பியபடி நடந்து சென்றேன். எதிரே விளையாடிக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40492

சீர்மை (2) – அரவிந்த்

[மூன்று] [தொடர்ச்சி] தட்டச்சுப் பொறியின் ஓசை சுவரரெங்கும் பட்டு எதிரொலித்தது. வலப்பக்கம் கண்ணாடி ஜன்னலுக்கு அப்பால் பசிபிக் பெருங்கடல் நுரைத்துப் பொங்கியது. தூரத்தில் ம்யூர் காடுகளின் வானுயர் மரங்கள் தங்கள் செந்நிற நிழலைக் கிளை பரப்பி மௌனித்திருந்தன. முதுகுக்குப் பின் அறையின் ஒருபக்க சுவரை மறைத்தபடி புத்தக அலமாரி. அதன் அருகே கடற்குழு ஒன்று எடுத்த நாட்டில்லஸின் ஆளுயரப் புகைப்படம். மேஜையின் நேரெதிரே இருபதடி தூரத்தில் தேக்கு மரத்திலான நிழற்குடையில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த அகல் விளக்கின் தீபம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40490

11. சீர்மை (1) – அரவிந்த்

[மீண்டும் புதியவர்களின் கதைகள்] [ஒன்று] இடது தோள்பட்டையில் கடும் வலியெடுக்க முழித்துக் கொண்டேன். நேற்றிரவு ஒருக்களித்து சாய்ந்தபடி அப்படியே தூங்கிவிட்டேன் போல. நெடுநேரம். சிறு அசைவு கூட அன்றி. இப்போது தசை எங்கும் பெருவலி. இமை நரம்புகள் அதிர்ந்ததிர்ந்து அடங்கின. ஒற்றைத் தலைவலியும் சற்று நேரத்தில் ஆரம்பமாகிவிடும் என்று அதற்கு அர்த்தம். கட்டிலின் மறுகோடியில் இருந்து சீரான மூச்சுக்காற்று என் பின்கழுத்தில் படிந்தபடி இருந்தது. புரண்டுபடுத்தால் தோள்வலி கொஞ்சம் குறையும்தான். ஆனால் த்ரேயா எழுந்துவிடுவாள். அவள் முழிப்பதற்குள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40485

அரவிந்த்

தன்னைப்பற்றி பெயர்: அரவிந்த் கருணாகரன் சொந்த ஊர்: நல்லிபாளையம், நாமக்கல் மாவட்டம். பள்ளி, கல்லூரியில் படித்தது எல்லாம் சென்னையில். பிறகு கணிப்பொறித்துறையில் சில ஆண்டுகள் வேலை பார்த்தேன். இப்போது மேற்படிப்பிற்காக பாஸ்டனில். இளங்கலை முடிக்கும் வரை சினிமா, கிரிக்கெட் தவிர வேறெதிலும் பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. வேலைக்கு போக ஆரம்பித்த பிறகே படிக்க ஆரம்பித்தேன். என் மாமா (பாலா) மற்றும் அக்கா (விஜி) நல்ல வாசகர்கள். அவர்கள் எனக்கு நிறைய எழுத்தாளர்களை, புத்தகங்களை அறிமுகம் செய்தார்கள். அதிலிருந்தே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40476

வேஷம், சோபானம்- விமர்சனம் -அரவிந்த்

வேஷம் பிரகாஷின் “வேஷம்” சிறுகதைகளுக்கே உரிய செறிவானதொரு வாசிப்பு அனுபவத்தை தந்தது. சூழல் சார்ந்த விவரிப்புகளை ஆசிரியர் கடகடவென சொல்லியபடி தாண்டிப்போவதில்லை என்பதால் கதை நம்முன் அழகாக விரிகிறது. திருவிழா நடக்கும் அந்த வெளியை, அதில் கலந்துகொள்ளும் மக்கள்திரளை, அவர்களது மனநிலையை எல்லாம் தேவைக்கேற்ப நன்றாக விவரித்திருக்கிறார். இந்தக் கதைக்கு பலவிதமான வாசிப்புகள் வரும் என்று நான் ஊகித்தேன். அது போலவே நடந்தது. கடிதம் எழுதிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான வாசிப்பை முன்வைத்திருக்கிறார்கள். அது இந்தக்கதையின் வெற்றிதான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38416