Tag Archive: அரவிந்தர்

வெண்டி டானிகரும் இந்தியாவும்

வணக்கம் தற்போது வென்டி டானிகரின் “இந்துக்கள் :ஒரு மாற்று வரலாறு” (The Hindus : AnAlternative History) என்ற நூலை பெங்குவின் பதிப்பகம்திரும்பபெற்றிருப்பது சரியான முடிவா?உண்மையில் அந்த புத்தகம் காட்டும் வரலாறு என்ன? மிகுந்த வேலைகளுக்கிடையில் இருக்கிறீர்கள் என அறிவேன். இருந்தும் பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் தனி கட்டுரையாக பதிவுசெய்தால் சிறப்பு செ. நிஜந்தன் அன்புள்ள நிஜந்தன், நான் அந்நூலை வாசிக்கவில்லை. அதைப்பற்றிய ஒரு மதிப்புரையை மட்டுமே வாசித்தேன். அந்நூலை முழுக்க வாசித்துப்பார்க்கும் மனநிலையிலும் இல்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/46489/

சராசரிகள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, உங்களது பல கட்டுரைகளில் “சராசரி(கள்)” மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். அதற்கு உங்கள் அளவுகோல் என்ன? ஒவ்வொரு முறை அந்த வார்த்தையைப் பார்க்கும்போதும் நானும் அதில் ஒருவன்தான் என்னும் ஐயம் வலுக்கிறது. ஒரு கல்லூரியில் ஆசிரியனாகவும், உங்கள் எழுத்தை கடந்த ஏழு வருடங்களாக வாசிப்பவன் என்பதைத் தாண்டி உருப்படியாக நான் எதுவும் செய்ததில்லை. இப்படிக்கு, எந்த ஒரு தனித்தன்மையும் இல்லாத உங்கள் வாசகன் கௌரிஷ் அன்புள்ள கௌரிஷ், நீங்கள் சராசரியா அல்லவா என்பது நீங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36990/

அரவிந்தர்- இந்தியஞானம்

அன்புள்ள ஜெ, அந்த குகைப்பயணம் எப்பேற்பட்ட ஒரு பேரனுவத்தை அனைவருக்கும் அளித்திருக்கும் என்று உணர முடிகிறது. கிருஷ்ணனின் அவதானிப்பு நுட்பமானது. திருமந்திரத்தின் ஒரு பாடலை நினைவில் எழ வைத்தது – ஒளியும் இருளும் ஒருக்காலும் தீரா ஒளியுளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும் ஒளியிருள் கண்டகண் போல வேறாயுள ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே. இந்திய ஞானம் பற்றிய அழகிய குறும்படம்.. முழுதும் ஸ்ரீஅரவிந்தரின் வாசகங்களின் அடிப்படையில் உருவாக்கப் பட்டிருக்கிறது, சாந்தமும் இனிமையும் ததும்பும் விஷுவல்கள், ஒலிக்கோவைகள். கண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34482/

இந்தியஞானம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, சிந்திப்பவர்களுக்கான சிறப்பு வாசல் வாசித்தேன். நவீன மனம் கொண்டவர்களுக்கான, ‘ இந்து ஞானம் ஓர் எளிய அறிமுகம்’ என்ற நூல் இந்தத் தலைமுறையினரில் பெரும்பாலானவர்களுக்கு ஓர் அரிய பரிசாகவே இருக்கும். இந்து ஞானம் பற்றிய அறிமுகம் என்னும் மகத்தான பணியை நீங்களும் அயராது ஆற்றி வருகிறீர்கள், அந்தச் செயல்கள் மூலம் உங்கள் மீது குத்தப்படும் அபத்தமான மதவாத முத்திரைகளைப் பொருட்படுத்தாது. நான் தங்கள் எழுத்துக்களிலிருந்து இந்து ஞானம் குறித்த, குறிப்பாக வேதாந்தம் பற்றிய தெளிவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30393/

கார்ல் சகனும் அரவிந்தரும்

இன்று உங்கள் தளத்தில் ஒரு கட்டுரையில் காணப்பட்ட ஒரு சுட்டியில் இருந்து கார்ல் சாகன் கட்டுரைக்குச் சென்று படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் பத்தி எனக்கு அரவிந்தரின் சாவித்திரியை நினைவுபடுத்தியது: ‘ஆனால் கிறித்தவத்தின் மனிதாபிமான தத்துவ எல்லைக்கு மேல் நகர கார்ல் சகனால் முடியவில்லை என்பது உண்மையில் புரிந்துகொள்ளச் சிரமமான ஒன்று. நாவல் எல்லியில் குவிந்து அவள் கண்டடைந்த இறுதி தரிசனத்தை அடைந்து முழுமை பெறுகிறது. அது கிறிஸ்துவின் மனிதநேயம் மட்டும்தான் – தொடும்போது அது அதுவரை நாவல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22670/