Tag Archive: அயோத்திதாசர்

இந்திய அறிவியல் எங்கே?

அன்புள்ள ஜெ, அயோத்திதாசர் எனும் முதற்சிந்தனையாளர்  கட்டுரை தீவிரமாக சிந்திக்க வைத்தது. அயோத்திதாசர் ஒரு தலித் சிந்தனையாளர் என்று தான் கேள்விப்பட்டிருந்தேன். அவரின் அறிவாளுமை இவ்வளவு பெரியது என நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். மரபிலிருந்து விலகிய நாம் மீண்டும் அதனுடன் தொடர்பு கொள்ளத் தங்களின் கட்டுரை ஒரு தெளிவான முன்வரைவை அளித்தது. மரபான ஞானத்தில் இருந்து நாம் துண்டிக்கப்பட்டது, துரதிஷ்டவசமாக   அதை உணராமலேயே இருப்பது ஒரு பெரும் சாபக்கேடு. நம்முடைய கோயில்களில் உள்ள கட்டிட நுட்பத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19636

அயோத்திதாசர், கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு, நான் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன். உங்களைப்பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருந்தாலும் எதையுமே வாசித்தது கிடையாது. உங்களைப்பற்றி எல்லாரும் சொன்னதுதான் காரணம். நீங்கள் சாதிவெறி உடையவர் என்றார்கள். இந்துத்துவா கொள்கை எனக்குப் பிடிக்காது. ஆகவே படிக்கவில்லை. விடுதலைச்சிறுத்தைகள் சார்பிலே திருமா ஐயா படம் போட்டு உங்கள் போஸ்டரை மாட்டுத்தாவணியிலே பார்த்துக் கூட்டத்துக்கு வந்தேன். நீங்கள் அயோத்திதாசரைப்பற்றிப் பேசியதைக் கேட்டேன். நான் தமிழாசிரியராகப் பணியாற்றிவருகிறேன். அயோத்திதாசரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதிகமாகத் தெரியாது. உங்கள் உரை பிரமிப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19639

அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்- 7

    மாற்றுமொழிபும் பௌத்தமும்     தலித்தியம் பௌத்தம் சார்ந்த என்னுடைய சிந்தனைகளை வடிவமைத்ததில் நண்பர் பிரேமுடனான விவாதங்களுக்குப் பெரும் பங்குண்டு. அதை இத்தருணத்திலே பதிவுசெய்ய விழைகிறேன். 1999ல் குற்றாலத்தில் கலாப்ரியா நடத்திய பதிவுகள் இலக்கியப்பட்டறையில் அவரை நான் சந்தித்த முதல்நாளில் ஒரு பொது விவாதம் ஏற்பட்டது. நம்முடைய முற்போக்கு- பின் நவீனத்துவச் சிந்தனைகளைப்பற்றி நான் மிகக் கடுமையான ஓர் அவநம்பிக்கையை அன்று சொன்னேன். அவர்கள் மேல் நான் சொன்ன குற்றச்சாட்டுகள் மூன்று. ஒன்று, அவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19272

அயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்- 6

அயோத்திதாச பண்டிதரின் உரைகள் இந்தியமரபில் பொதுவாக ஓர் அறிஞனின் செயல்பாடு என்பது இரண்டு வகைப்பட்டதாக இருப்பதைக் காணலாம். ஒன்று உரை எழுதுதல்.  இன்னொன்று புராணம் எழுதுதல். நீண்ட மரபுள்ள ஒரு பண்பாட்டின் இரு இயல்பான அம்சங்கள் இவை.  உரை,செவ்வியல் மரபைக் கையாள்வது, புராணம்,நாட்டார் மரபைச் செவ்வியலாக்குவது. இரண்டுமே ஒன்றையொன்று நிரப்பும் செயல்பாடுகள். அயோத்திதாச பண்டிதருக்கு முந்தைய அறிஞர்களில் பெரும்பாலானவர்கள் இவ்விரண்டையும்தான் செய்திருக்கிறார்கள். ஏன் என்பது முக்கியமான வினா. இங்கே மரபு பிரம்மாண்டமாகப் பின்னால் எழுந்து நிற்கிறது. நீ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18504

அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-5

  அயோத்திதாசரின் பார்வையின் தனித்தன்மை ஒரு உவமை சொல்லலாம். ஒரு தட்டில் பாதி இட்லிகளை இட்லிஉப்புமா ஆக்கி, அந்த உப்புமாவைத் திரும்ப இட்லியாக்கி , அதையும் அந்தத் தட்டில் மிச்சமிருந்த இட்லியையும் ஒப்பிட்டால் எப்படி இருக்கும்? தெரியவில்லை. இட்லி உப்புமாவுக்கு நாக்கு பழகிப்போனவர்களுக்கு இரண்டாவது வடிவம் இன்னும் சுவையாகக்கூட இருக்கும். அயோத்திதாசரின் பௌத்தம் பற்றிய கருத்துக்களையும் தமிழகத்தில் அவருடைய சமகாலத்தில் பிறர் பௌத்தம் பற்றி எழுதியவற்றையும் இப்படித்தான் ஒப்பிடத்தோன்றுகிறது. தமிழகத்தில்  பௌத்தம் பற்றி எழுதியவர்கள் ஏற்கனவே சொன்னதுபோல ஐரோப்பிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18295

அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-4

வேருள்ள ஆய்வுமுறைமை பத்து வருடங்களுக்கு முன்னால் நான் கேரள சிந்தனையாளர் எம்.கங்காதரனிடம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு,சாஸ்தாவைப்பற்றிச் சென்றது. சாஸ்தா என இன்று அழைக்கப்படும் இந்து தெய்வம் பல்வேறு வடிவங்களில் கேரளத்தில் உள்ளது. சபரிமலை அய்யப்பன்கூட ஒரு சாஸ்தாதான். இன்று, எண்பதுகளுக்குப் பின் படிப்படியாக, எல்லா சாஸ்தாக்களுமே அய்யப்பன்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். நாகர்கோயில் நகருக்குள்ளேயே இருபது வெவ்வேறு சாஸ்தாக்கள் உள்ளனர். பூதம் வணங்கும் கண்டன் சாஸ்தா, எங்கோடி கண்டன் சாஸ்தா என. வரலாற்றாய்வாளனுக்குப் பலவகையான சிக்கல்களை அளிக்கும் தெய்வம் இது. ஒன்று, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18214

பண்டிதர்-கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ நீங்கள் இப்போது சொல்லும் இந்த டிரையாங்கிளை முன்னர் சொல்லியிருக்கிறீர்களா? தளையசிங்கம், எஸ் என் நாகராஜன், அயோத்திதாசர் பற்றி? எங்கேயாவது எஸ்.என்.நாகராஜனைப்பற்றிப் பேசியிருக்கிறீர்களா? சாமிநாதன் கெ அன்புள்ள சாமிநாதன் இதை உண்மையில் நீங்கள் அல்லவா தேடிக்கண்டுகொள்ள வேண்டும்? ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் தான் இந்த மூன்றுபேரையும் சேர்த்து முன்வைக்க ஆரம்பித்தேன், 2000த்தில். எஸ்.என்.நாகராஜன் பற்றி இதுவரை நான்கு சிறு கட்டுரைகள்  எழுதியிருக்கிறேன். மிக விரிவாகப் பல இடங்களில் மேற்கோளும் காட்டியிருக்கிறேன். ஆம், பேசப்பேச சில இடங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18767

அயோத்திதாசர் என்ற முதற்சிந்தனையாளர்-3

[தொடர்ச்சி] இன்றைய சிந்தனைகளின் எல்லைகள். நான் விஷ்ணுபுரம் நாவலுக்கான ஆய்வுகளைச் செய்துகொண்டிருந்தபோது பாலக்காடு அருகே ஒரு மரபான பண்டிதரைச் சந்திக்கச்சென்றேன். அந்நாவலில் அவைதிக சிந்தனைகளை அழுத்தம்கொடுத்துப் பேசியிருப்பது வாசிப்பவர்களுக்குத் தெரியும். அது சம்பந்தமான பலரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அந்த அறிஞர் வைதிக மரபான பூர்வமீமாம்ச முறைமையைச் சேர்ந்தவர். நான் ஏற்கனவே அந்தத் தளத்தில் கணிசமாக வாசித்திருந்தேன். ஆர்தர் ஆவலோன்,  எஸ்.என்.தாஸ்குப்தா, கெ.தாமோதரன், அகேகானந்த பாரதி, தேவிபிரசாத் சட்டோபாத்யாய என. பல அறிஞர்களிடம் நேரடித் தொடர்பும் இருந்தது. ஆச்சரியமென்னவென்றால் நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18159

அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்- 7

மாற்றுமொழிபும் பௌத்தமும் தலித்தியம் பௌத்தம் சார்ந்த என்னுடைய சிந்தனைகளை வடிவமைத்ததில் நண்பர் பிரேமுடனான விவாதங்களுக்குப் பெரும் பங்குண்டு. அதை இத்தருணத்திலே பதிவுசெய்ய விழைகிறேன். 1999ல் குற்றாலத்தில் கலாப்ரியா நடத்திய பதிவுகள் இலக்கியப்பட்டறையில்  அவரை நான் சந்தித்த முதல்நாளில் ஒரு பொது விவாதம் ஏற்பட்டது. நம்முடைய முற்போக்கு- பின் நவீனத்துவச் சிந்தனைகளைப்பற்றி நான் மிகக் கடுமையான ஓர் அவநம்பிக்கையை அன்று சொன்னேன். அவர்கள் மேல் நான் சொன்ன குற்றச்சாட்டுகள் மூன்று, ஒன்று அவர்கள் அடிப்படையில் நடைமுறைத் தளத்திலேயே தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18621

அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-2

அயோத்திதாசரும் நானும் [தொடர்ச்சி] நாராயண குருவைப்ப்பற்றிய தொகைநூலை எழுதிய பி.கெ.பாலகிருஷ்ணன் அதில் ஒரு கட்டுரையில் ஆவேசமாகக் கேட்கிறார். வருடம் தோறும் வர்க்கலை நகரில் நாராயண குருவின் நினைவுநாளின்போது அங்கேவந்து பேருரை ஆற்றாத பிரபலங்களே இல்லை.  அந்த உரைகளில் அவர்கள் நாராயணகுருவை யுகநிர்மாண சிந்தனையாளர் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களின் பிற உரைகளில் சுயசரிதைகளில் எங்காவது நாராயணகுருவை மேற்கோள் காட்டியிருக்கிறார்களா, அவர் தங்களை பாதித்ததைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்களா என்று பார்த்தால் ஏமாற்றம்தான் உருவாகும். அப்படியானால் அவர்கள் சொன்ன சொற்களுக்கு என்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18154

Older posts «

» Newer posts