Tag Archive: அயோத்திதாசர்

தமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு

அன்புள்ள ஜெ, அண்மையில் ஷௌக்கத்தின் ‘ஹிமாலயம்’ வாசித்து முடித்தேன். மனதிற்கு நெருக்கமான நூல். அதில் “மதம் ஏதானாலும் மனிதன் நன்றாக இருந்தால் போதும்” எனும் நாராயண குருவின் வரி மனதை ஆழமாக தொந்தரவு செய்தது. நாராயண குரு என்றல்ல காலனிய காலகட்டத்து இந்திய ஆன்மீக மரபுகள் அனைத்தின் பொதுவான கவலை இதுவாகவே இருந்திருக்கும் எனத் தோன்றியது. வள்ளலார், அய்யா வைகுண்டர் என தமிழக மெய்ஞான மரபுகளுடன் சேர்த்து இவ்வரியை விரித்துக்கொள்ள முடியும். பஞ்சத்திலும் பாராமுகத்திலும் மறந்து போகும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119191

தலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

யூஜின் அயனெஸ்கோ எழுதிய காண்டாமிருகம் என்ற பிரெஞ்சு நாடகம் புகழ்பெற்றது [ Rhinoceros –   Eugène Ionesco]. எண்பதுகளில் அந்நாடகத்தின் மலையாளத் தழுவலை நான் திருவனந்தபுரத்தில் மேடையில் முதல் முறையாகப் பார்த்தேன்.பிற்காலத்தில் திரைப்படத்தில் புகழ்பெற்ற கிருஷ்ணன்குட்டிநாயர் அதில் சிறப்பாக நடித்திருந்தார். அதில் ஒரு காட்சி வரும். மேடையில் சிலர் பேசிக்கொண்டிருப்பார்கள். குடையை இடுக்கி, வேட்டியை மடித்துக்கட்டி, வெற்றிலைபாக்குக்கடை முன்னால் நின்று சாவகாசமாகக் குதப்பியபடி பீடி பிடித்தபடி கேரள கூட்டணி அரசியலை அலசிக்கொண்டிருப்பார்கள். ஒரு பெரிய காண்டாமிருகம் அவர்கள்நடுவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20835

புராணமும் கதைகளும்- கடிதம்

அன்பு ஜெயமோகன், அயோத்திதாசரின் மாற்றுப்புராண அழகியல் குறித்து நீங்கள் பேசியதைக் கேட்டேன். புராணங்களைக் குப்பைகள் பிதற்றல்கள் என குற்றஞ்சாட்டும் சிந்தனையாளர்கள் அவ்வுரையைப் புரிந்து கொள்வது மிகக்கடினம். ஏனென்றால், அவர்கள் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டவர்கள். மேலும், இது இப்படித்தான் என உறுதியாக வரலாற்றை முன்வைப்பவரகள். வரலாறுகள் எழுதப்படுபவர்களின் சார்பின்றி அமையாது என்பதை வசதியாக மறந்து விடுகிறவர்களும் கூட. புராணங்களை புளுகுமூட்டைகள் என்றும், அவை குறிப்பிட்ட வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த வந்தவை என்றும் தொடர்முழக்கமிடுபவர்கள் அது ஒரு இலக்கிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70668

அயோத்திதாசரின் மாற்றுப்புராண அழகியல்

இந்தியாவின் பண்பாட்டின் நெடுங்கால உறைநிலை கலங்கி புரண்ட ஒரு காலகட்டம் என்று பதினெட்டாம் நூற்றாண்டைச் சொல்லலாம். இங்கே இருந்த புராணமரபை வெளியே நின்று பார்க்கக்கூடிய ஒரு பார்வையை ஐரோப்பியர்கள் நமக்களித்தனர். அக்காலகட்டத்தில் ஐரோப்பிய தாக்கத்துடன் இந்தியச்சூழலில் எழுந்துவந்த நவீனச் சிந்தனையாளர்கள் அனைவரிடமும் புராணங்களை நிராகரிக்கக் கூடிய குரலை நாம் பார்க்கமுடியும். உதாரணமாக சுப்ரமணிய பாரதி புராணங்களைப்பற்றிச் சொல்லும்போது கடலினைத் தாண்டும் குரங்கும்–வெங் கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும், வடமலை தாழ்ந்ததனாலே–தெற்கில் வந்து சமன்செய்யும் குட்டை முனியும் நதியி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68373

தி ஹிண்டு செய்தி

Iyothee Thass’s works are weapons for liberation, says Jeyamohan Spirituality functions through images, it does not require tradition or history or life, the language of spirituality is images, we have not understood spirituality within a historical context, we have concern for economics, and for politics but disregard spiritualism, said renowned writer Jeyamohan.

Permanent link to this article: https://www.jeyamohan.in/32959

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-3

அயோத்திதாசர் உருவாக்கிய வரலாற்றெழுத்தின் அடிப்படையான கூறுகள் என்னென்ன? அவற்றை என் அவதானிப்பில் நான் இவ்வாறு வகுத்துக்கொள்வேன். அயோத்திதாசர் அவர்களின் இந்திரர்தேசத்து சரித்திரத்தில் நாம் காணும் முதன்மையான அம்சம் அதன் மாற்று வரலாற்றுத் தரிசனம். அதை எழுதப்பட்ட வரலாற்றின் தலைகீழாக்கம் என்று ராஜ்கௌதமன் போன்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த தலைகீழாக்கம் அயோத்திதாசர் அவர்களால் கண்டடையப்பட்ட ஒன்றல்ல. அது ஏற்கனவே இங்கே இருப்பதன் நவீன வடிவம்தான். தலைகீழாக்கம் எப்போதுமே நம் மரபில் இருந்துகொண்டிருக்கிறது. ஒரு தொன்மக்கதை. இக்கதை நிகழும் காலகட்டத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32825

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு- 2

நான் அயோத்திதாசரை வாசித்த நாட்களில் அவரது முக்கியத்துவம் ஏதும் என்னை வந்தடையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவரது ஒட்டுமொத்த எழுத்துக்களில் இருந்து ஒவ்வொரு தளத்திலும் அவரது கருத்து என்ன என்பதை தனித்தனியாக தொகுத்து அளிக்காத வரை எந்த பொதுவாசகரும் அவரது கருத்துநிலைகளை எளிதில் புரிந்துகொள்ளவும் முடியாது. அந்நாட்களில் நானும் எம்.வேதசகாயகுமாரும் இணைந்தே அயோத்திதாசர் நூல்களை வாசித்தோம். அவர் அனேகமாக தினமும் மாலை என் வீட்டுக்கு வருவார். நெடுநேரம் எங்கள் வாசிப்புகளை பகிர்ந்துகொள்வோம் அக்காலகட்டத்தில் அயோத்திதாசர் சமணம் பௌத்தம் இரண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32823

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-1

இளம் வயதில் நான் கேட்டுப்பிரமித்த மேடைப்பேச்சாளர் என்றால் கேரள சிந்தனையாளரும் மார்க்ஸியருமான பேராசிரியர் எம்.என். விஜயன்தான். கண்ணனூரில் அவரை நான் ஒருமுறை நேரிலும் சந்தித்திருக்கிறேன். விஜயன் ஒருமுறை சொன்னார் ‘மிக அதிகமான புல் தின்று மிகக் கொஞ்சமாக பால் கொடுக்கும் ஒரு பசுதான் அழகியல் என்பது’ மாடு வளர்த்தவர்களுக்கு இந்த வரி இன்னும் புரியும். மாடு பகலெல்லாம் மேய்ந்துகொண்டே இருக்கிறது. மாலையில் கைகளைக்க புல் பறித்து, கழுத்தொடிய புல் கொண்டுவந்து போட்டால் அதை அரைமணிநேரத்தில் தின்று முடித்துவிடுகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32821

வாழும் கணங்கள்-கடிதங்கள்

இன்று என் தலைவர், சி.கே.ரங்கநாதன் அழைத்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு. முகமன் முடிந்ததும், ஒரு பத்து நிமிடம் யானை டாக்டரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். துல்லியமான சித்தரிப்புக்களோடு, ஒரு மாபெரும் வாழ்க்கை அனுபவத்தைக் கதையில் அடக்கியிருந்ததை மிகவும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார். ஜெயமோகன் என் நண்பர் என்று சொல்லிக் கொண்டேன் – தனது வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார். தமிழார்வம் உள்ளவர். ஜேஜே சூரியோதயம் ஓவியத்தை பற்றிச் சொல்கையில், கலைப் படிப்புக்களைக் காண இடைவெளி தேவை – சிலசமயம் காலம், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20616

அயோத்தி தாசர்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் , அயோத்திதாசர் உரை என்னளவில் மிக முக்கியமானது.சாதி சார்ந்த வேற்றுமை என்னை சிறு வயதிலிருந்து சங்கடப்படுத்திய ஒன்று. இது மாற வேண்டும் என விரும்பினேன் . உங்கள் எழுத்துக்களை வாசிப்பதற்கு முன்பு சாதி என்பது  இந்து மதத்தினால் நிறுவப்பட்ட கட்டமைப்பு என நினைத்திருந்தேன் . அதன் காரணமாக இந்து மதம் மீது வருத்தமும் இருந்தது .இது சார்ந்து தேடிய போதுதான் எனக்கு விஷ்ணுபுரம் கிடைத்தது . பிறகு என் எண்ணங்கள் மாறின .இப்போது தாழ்த்தப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20610

Older posts «