Tag Archive: அயன் ராண்ட்

புகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன்

[அயன் ராண்ட்] அயன் ராண்டின் கருத்துப்படி புகைப்படம் கலை ஆகாது, ஏனெனில் அது முற்றிலும் தன்மொழி சார்ந்து மட்டுமே இயங்குவதில்லை, ஓவியத்தை போல. மாறாக அது புற உலகை சார்ந்து இயங்குகின்றது என்பது அவரது கூற்று. . [கிரீன் பெர்க்] இந்த சிந்தனைக்கு வித்திட்டவர் கிளெமென்ட் க்ரீன்பேர்க் ( Clement Greenberg ) என்பவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, இரண்டு பிரச்சினைகளை கலைஞர்கள் எதிர்கொள்ள நேரிட்டது . ஓன்று அதுவரை ஓவியம் செய்து வந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41086

அயன் ராண்ட் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ நான் இதை மிகப் பணிவாகத்தான் எழுதுகிறேன்.  ஒரு விவாதமாக அல்ல. நீங்கள் ayn rand ஐ முழுதாக அலசாததாகவே  எண்ணுகிறேன். மற்ற விஷயங்களில் உள்ள நடு நிலை இதில் இல்லாமல் போனது போலத் தோன்றுகிறது. தயவு செய்து சோர்வு கொள்ளாமல் predetermined notion அல்லாமல் படிக்க வேண்டுகிறேன், என் கருத்து premise 1: ஒரு விஷயத்தை சிலர் / பலர் படித்து ஆனால் தவறாக உபயோகித்தால் அந்த விஷயம் தவறாகாது. உதாரணம் : கீதை (நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16779

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், இந்த கட்டுரை படித்த பிறகு நான் மிகவும் திருப்தி அடைந்தேன். முன்பு அயன் ராண்ட் ன் we the living படித்துவிட்டு அவர் எழுத்து மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டிருந்தேன். பல வருடங்கள் கழித்து சமீபத்தில், fountain head படித்தேன். மிகுந்த ஏமாற்றமாய் இருந்தது. எனக்கு சமீபத்திய பயம் ஒன்று உண்டு. நான் எழுத்துக்களை முன்முடிவு செய்கிறேன் அதுதான் படைப்பின் மீதான எனது வாசிப்பை குறைக்கிறது அல்லது சலிப்புறச் செய்கிறது என்று. ஆனால் அதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8446

அயன் ரான்ட்,மேலும் கடிதங்கள்

ஜெயமோகன், “இந்நிலையில் நம் சூழலில் எப்போதும் நிகழும் ஒன்று உண்டு. தகவல்பிழைகளைக் கண்டடைந்து அதன் அடிப்படையில் விவாதத்தை முன்னெடுப்பது. ஒரு கட்டுரையை கூர்ந்து கவ,னித்து தகவல்பிழை ஒன்றை கண்டுபிடித்து ‘இதைக்கூட தெரியாமல் எழுதிய இவனெல்லாம் பேசலாமா’ என்ற தோரணையில் எழுதப்படும் கட்டுரைகளை நாம் சர்வசாதாரணமாக தமிழில் காணலாம். சமயங்களில் அது தட்டச்சுப்பிழையாகவோ அல்லது வாசகரின் புரிதல்பிழையாகவோ இருக்கும். ஒரு கட்டுரையின் தகவல்பிழை ஒருபோதும் அதன் மையமான வாதத்தை நிராகரிக்க காரணமாகாது என்பது எல்லா விவாதங்களிலும் உள்ள அடிப்படைவிதி” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3477

அயன் ரான்ட் கடிதங்கள்

அன்புள்ள ஜெ, அயன் ராண்டின் சிந்தனைகள் அவ்வளவு எளிமையானவை அல்ல. சுயநலத்தை பற்றிய அவரது கருத்துக்கள் மிக தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளன். மனிதநேயத்தையும், தர்ம‌ சிந்தனையையும் அவர் மறுக்கவில்லை / வெறுக்கவில்லை. ஆனால் மனிதனேயம் ‘மட்டுமே’ அறம் என்பதை அவ்ர் ஏற்பதில்லை. உற்பத்தியை பெருக்கும், தொழில்முனைவோரின் அடிப்படை அறங்களே உலகில் மிக மிக முக்கியமான அறம் என்பதே அவர் கோட்பாடு. தொழில் முனைவோர்களின் ஊக்கம், உழைப்பு மற்றும் லாபநோக்கங்களே நம் உலகை மாற்றி, வறுமையை பல மடங்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3467

அயன் ரான்ட்,ஒருகடிதமும் சில சிந்தனைகளும்

அயன் ராண்ட் குறித்த என்னுடைய கட்டுரைக்கு வந்த ஒரு  கடிதம் என்னை மிகவும் சிந்திக்கச் செய்தது. இப்போது அமெரிக்காவில்,நியூயார்க்கில்,  இருக்கிறேன். ஊரில் இருந்திருந்தால் இக்கடிதத்தை பொருட்படுத்தியிருக்க மாட்டேன். நானல்ல,  எந்த ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் பொருட்படுத்தி பதில் சொல்லத்தக்க கடிதம் அல்ல இது. ஆனால் இங்கே அமெரிக்க கல்விமுறை பற்றி மேலும் மேலும் உற்சாகமாக இங்குள்ள நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். மேலும் இக்கடிதம் வந்தநாளில் நான்  எம் ஐ டி – ஹாவார்ட் சென்றிருந்தேன். இங்குள்ள கல்விமுறை போதனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3464

அயன் ரான்ட் -4

  அயன் ராண்ட் கலைக்கலஞ்சியம் என்ற ஒரு நூலை அமெரிக்க நூலகத்தில் பார்த்த நினைவிருக்கிறது. அயன் ராண்டின் கொள்கைகளை பிரச்சாரம்செய்வதற்கான ஆய்வுமையத்தால் வெளியிடப்பட்டது அது. அயன் ராண்ட் பல்வேறு விஷயங்களைப் பற்றி சொன்ன கருத்துக்கள் அதில் அகரவரிசையில் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவரது நோக்கின் மையச்சரடு என்பது அவராலேயே புறவயவாதம் என்று வகுத்துரைக்கப்பட்டது. இந்தபூமியில் உள்ள எல்லா சிந்தனைகளையும் இரண்டாகப் பிரிக்கலாம் என்பது அயன் ரான்டின் வாதம். ஒன்று, பூமியை நமக்குப் பயன்படுத்திக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உரிய சிந்தனைகள் அடங்கியது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3414

அயன் ராண்ட் – 3

நான் ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் இருந்தபோது பேரா.காசிநாதனைச் சந்தித்தேன். என்னை அவர் ஒருநாள்முழுக்க காரில் வெளியே அழைத்துச்சென்று மெல்பர்ன் நகருக்கு வெளியே உள்ள சிற்றூர்களைக் காட்டினார். இலங்கையில் தத்துவத்தில் ஆசிரியராக பணியாற்றிய காசிநாதன் அவர்கள் லண்டனில் தத்துவம் பயின்றவர். அவர் பயிலும்காலத்தில் தத்துவத்தில் பெரும் பரவசத்தை உருவாக்கிய ஆளுமை விட்கென்ஸ்டீன். காசிநாதன் அவர்கள் விட்கென்ஸ்டீன்னின் தத்துவத்தில் உயராய்வு செய்தார். கடந்த முப்பது வருடங்களாக அவருக்கு விட்கென்ஸ்டீன்தான் ஆய்வுப்பொருளாக இருக்கிறார். நாங்கள் ஒரு கிராமத்துப் புத்தகக் கடைக்குச் சென்றிருந்தோம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3411

அயன் ராண்ட் 2

அயன் ராண்ட் பற்றி தமிழில் எதுவும் எழுதப்பட்டதில்லை என்றே நினைக்கிறேன். சிற்றிதழ் சார்ந்த இலக்கிய உலகம் அவரைபொருட்படுத்தவில்லை. காரணம் க.நா.சு அவரை இடதுகையால் ஒதுக்கிவிட்டார்.  எங்கோ ஒரு கட்டுரையில் க.நா.சு ‘அரைவேக்காடு எழுத்து’ என்று அயன் ராண்ட் பற்றி சொல்லியிருக்கிறார். நவீன ஐரோப்பிய எழுத்தாளர்களை ஆதர்சமாகக் கொண்ட, அவ்வகையில் எளிய மக்களை அவர்களின் மொழியிலேயே முன்வைக்கும் கலைப்படைப்புகள் உருவாகவேண்டுமென வலியுறுத்திய, க.நா.சுவுக்கு அயன் ராண்ட் கடுப்பைக் கொடுத்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் அயன் ராண்ட் சுந்தர ராமசாமியில் ஆழமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3407

அயன் ராண்ட் 1

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம்,நலம்தானே. அயன் ராண்டின் கொள்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவரது ·பௌண்டன் ஹெட் [Fountainhead]மற்றும் அட்லஸ் ஷ்ரக்ட் [Atlas shrugged]  பற்றி பேசினீர்களென்றால் நன்றாக இருக்கும். அன்புடன் ரவி பி.கு. நான் உங்களை 2006ல் மதுரை புத்தகச்சந்தையில் சந்தித்தபின் வீட்டுக்கு வந்து பார்த்திருக்கிறேன் அன்புள்ள ரவி, மன்னிக்கவும், எனக்கு உங்கள் பெயருடன் முகம் நினைவுக்கு வரவில்லை. நெடுநாளாகிவிடது. நேரில்பார்த்தால் தெரிந்திருக்கலாம். ஆஸ்திரேலியாவில் நான் இருக்கும்போது உங்கள் கடிதம் வந்தது. மிகவும் தாமதமாக பதில் எழுதுகிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3405