Tag Archive: அம்மையப்பம்

அம்மையப்பம் – கடிதம்

அம்மையப்பம் [புதிய சிறுகதை] அன்பின் ஜெ, நலம்தானே? ”அம்மையப்பம்” மறுபடி படித்தேன். முதல்முறை 2013-ல் தளத்தில் வெளியான போது படித்தபோதே பச்சென்று மனதுக்குள் ஒட்டியிருந்தது. வெண்கடல் தொகுப்பில் எனக்குப் பிடித்த முதல் கதை. இரண்டாவதும் மூன்றாவதும் முறையே வெறும்முள்ளும், கைதிகளும். நண்பர் ஒருவருக்கு சமீபத்தில் அம்மையப்பத்தை ‘கண்டிப்பாகப் படிக்கவேண்டிய மிக நல்ல கதை’ என்று பரிந்துரைத்தபோது, படித்துவிட்டு “உனக்கு ஏன் இந்தக் கதை பிடித்திருந்தது?” எனக் கேட்டார். எனக்கு நானே மறுபடி கேட்டுக்கொள்வதற்காகவும், அவருக்கு பதில்சொல்ல கோர்த்துக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128330

அம்மையப்பம்- கடிதம்

  அம்மையப்பம் [புதிய சிறுகதை] அன்பின் ஜெ,   நலம்தானே?   ”அம்மையப்பம்” மறுபடி படித்தேன். முதல்முறை 2013-ல் தளத்தில் வெளியான போது படித்தபோதே பச்சென்று மனதுக்குள் ஒட்டியிருந்தது. வெண்கடல் தொகுப்பில் எனக்குப் பிடித்த முதல் கதை. இரண்டாவதும் மூன்றாவதும் முறையே வெறும்முள்ளும், கைதிகளும்.   நண்பர் ஒருவருக்கு சமீபத்தில் அம்மையப்பத்தை ‘கண்டிப்பாகப் படிக்கவேண்டிய மிக நல்ல கதை’ என்று பரிந்துரைத்தபோது, படித்துவிட்டு “உனக்கு ஏன் இந்தக் கதை பிடித்திருந்தது?” எனக் கேட்டார். எனக்கு நானே மறுபடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129734

அம்மையப்பம் -கடிதம்

அன்புள்ள ஜெ , அம்மையப்பம் பற்றி எவ்வளவு சிறந்த தொழில் நுட்ப வடிவமும் வெகு சீக்கிரத்திலேயே அதன் வசீகரத்தை இழந்து விடும் ,(எனக்கு காந்தி பாரிசில் கண்ட ஈபிள் டவரைப் பற்றி எழுதியிருந்தது ஞாபகம் வருகிறது) .கலையில் அதன் படைப்பாளி எப்படியோ அதனுள் உயிரைக் கொண்டுவந்து விடுகிறான்,அதற்காக அவன் மற்ற அனைத்திலும் தோல்வி அடைவதுதான் சோகம், என்ன செய்வது காளி மார்பில் வைத்து அமுதூட்டுவதில்லை,காலடியில் கிடத்தியே அமுதூட்டுவேன் என்கிறாள். எந்தஅளவு அவன் சமூகத்தின் முன் கோமாளியாகப் பார்க்கப் படுகிறானோ அந்த அளவு கலை அவனை நெருங்கும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35640

அம்மையப்பம் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் வெண்கடல் simply brilliant. வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தேன் இந்தக் கதையைப் பற்றி.. இன்று காலை என் கணவரிடம் உங்கள் கதையைச் சொன்னேன். வாசிக்கும் பழக்கம் இல்லாதவர். பொருளாதாரம்தான் அவரின் விருப்பம். எனக்கு நேர் எதிர். ஆனால் நான் சொன்னால் கதைகளைக் கேட்பார். அவரால் இந்தக் கதையை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் நான் பட்ட வலி அது. அவர் பார்த்த வலி அது.ப்ரசவ வலியை விட கொடுமையான வலி அது ஜெயமோகன். ப்ரசவ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35316

அம்மையப்பம், நிம்மதி – கடிதங்கள்

அன்புள்ள ஜெ, கோவையில் பேசும்போது கல்பற்றா சொன்னார், “கவிதையில் ஒரு wit இருக்கவேண்டும்” இதைக் கேட்ட பிறகு வாசிப்பவற்றில் எல்லாம் ‘wit’ ஐ தேடிக்கொண்டிருக்கிறேன். அவரது ‘நிம்மதி’யை வாசித்த போது, படைப்பில் உள்ள ‘wit’ ஐ ரசித்துக் கொண்டிருக்கும்போதே காலடியில் உலகம் நழுவி நம் நிம்மதியை தொலைக்கும் கணங்களே கவிதைக் கணங்கள் என்று கண்டுகொண்டேன். என்ன மாதிரியான ஒரு கவிதை!! புன்னகைக்க வைத்து சாகடிக்கும் ஒரு கவிஞன் !! — ஸ்ரீனிவாசன் அன்புள்ள ஸ்ரீனிவாசன், கல்பற்றா நாராயணனின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34937

கதைகள்-கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன், உங்கள் ‘நிலம்’ சிறுகதையைப் படித்தேன். சேவுகப்பெருமாளைப் படிக்கும்போது தல்ஸ்தாய் எழுதிய How Much Land Does A Man Need? என்ற சிறுகதை ஞாபகத்திற்க்கு வந்தது. முடிவில் சருகுகளுடன் படுத்துக்கொண்டிருக்கும் பண்டாரம் தல்ஸ்தாயின் பிம்பம் போலவே பட்டது. ஒரு நீதிக்கதையின் எளிமை இருந்தும், கதை யதார்த்தத்தில் புதைந்திருப்பது கலையின் உச்ச லட்சியங்களில் ஒன்று. அதைத் தொட்டதற்காக என் பாராட்டுகள். – விஜய் கௌசிக் நீங்கள் ஒரு ஆசாரி. சொற்களை எழுத்துக்களைப் பல விதமாக செதுக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34661

அம்மையப்பம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ, இன்று காலை ஒரு நண்பரைப்பார்க்க மதுரையில் ஒரு தொழிலகத்துக்குச் சென்றிருந்தேன், அது எந்திரங்கள் மூலம் மர வேலைப்பாடுகள் செய்யபடும் தொழிலகம். எனது சிறிய வயதில் எனது தாத்தா மர வேலைப்பாடுகள் செய்வதை அருகிலிருந்து மணிக்கணக்கில் ஆர்வத்துடன் பார்த்ததுண்டு. அதில் பயன்படும் உளி, ரசமட்டம் போன்ற பல கருவிகளை ஆச்சர்யமாகப் பார்ப்பதுண்டு. மரத்தில் ஒட்டைபோடும் கருவியில் கயிறு இழுப்பது போன்ற சிறு உதவிகளும் செய்ததுண்டு. உற்சாகமாகப் பேசிக்கொண்டு வேலை செய்யும் அவருடன் இருப்பது மிக சந்தோஷமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34592

அம்மையப்பம்- கடிதங்கள்

கதை ஆரம்பித்த சில வரிகளிலேயே ஓட்ட போட்ட இட்லிக்கு சண்டைபோட்ட நினைவுகளோடு கதைக்குள் நுழைந்தேன். அப்பாவுக்கும் , ஆசாரிக்கும் இடையே வரும் உரையாடல் அனைத்தும் அருமை, இப்போதேல்லாம் குமரித் தமிழ் மிகவும் பிடிக்கிறது, அப்போதே ஆசாரி சிறப்பாக ஏதோ செய்யப்போகிறார் என்று தெரிந்து விடுகிறது, சென்ற முறை மதுரை வந்திருந்தபோது, புதிதாகக் கட்டிய ஒரு கோவிலில் காளி சிவன் நெஞ்சில் கால் வைத்திருக்கும் ஒரு பிரம்மாண்ட சிலையை முதல் முறையாகப் பார்த்து உடல் சிலிர்த்தேன், எனக்கு உடனே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34571

அம்மையப்பம் [புதிய சிறுகதை]

  அம்மா இட்லிஎடுப்பதைப்பார்க்க எனக்குப்பிடிக்கும். இட்லிக்குட்டுவம் ஒருமாதிரி விம்மிப் பொருமி பெருமூச்சுவிடுவதுபோலிருக்கும். செம்பிப்பசு பிரசவத்துக்கு நின்றபோது இப்படித்தான் தெரிந்தது. அதன் வைக்கோல்நிறம் நன்றாக சிவந்துவிட்டதுபோல. அதன் வயிறோ விலாவோ வெடித்துத் திறந்துவிடும் என்பதுபோல. அதன் செம்புல்சருமம் மீதிருந்து ஆவி கிளம்பியது. தலையைத் தாழ்த்தி அது பெருமூச்சுவிட்டது. காலின் குளம்பால் தரையை தட் தட் என்று அடித்தது. சற்றுநேரத்தில் சூடான வெந்நீர் அதன் பின்பக்கத்தைத் திறந்துகொண்டு பீரிட்டது. மெல்லிய படலத்தால் சுற்றப்பட்ட வெள்ளைநிறமான கன்றுக்குட்டி உள்ளிருந்து சலவைக்காரியின் மூட்டை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34342