Tag Archive: அம்மை

அம்மை

வேளிமலை அடிவாரத்திலிருந்துதான் எங்களுக்குப் பால்வருகிறது. அங்கே எருமை ஒரு நல்ல உற்பத்திக்கருவி. நிறையப்புல். நிறையத்தண்ணீர். நிறையக் காற்று. ஆகவே பொதுவாக எருமைகள் மெருகுடன் இருக்கும். கண்களில் வண்டு ஒளிவிடும். நடக்கச்சென்றபோது எருமையுடன் சென்ற ஏசுவடியான் “செத்த சவமே. உனக்க ஆமக்கன் வாறாண்ணு பாக்குதியா? காலுவச்சு நடந்துவாடி“ என எருமையை வசைபாடுவதைக் கண்டேன். அது வால்சுழற்றி சாணிகழித்துவிட்டு கொம்புசரிய தலைசுழற்றி என்னை நோக்கியது. “ஆளாரு? தெரியலியே?” என்று எருமைமொழியில் கேட்டது. “நடக்காது இல்லியா?” என்றேன். “ஆமா சார். எருமை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84913