Tag Archive: அம்மாவின் இடம்

அம்மா – கடிதங்கள்

அன்பின் ஜெ.எம்., அம்மாவின் இடம் அழகான பதிவு. ‘அம்மா’வின் அன்புக்கு ஓய்வு தேவையில்லைதான். ஆனால் ‘அம்மா’ என்ற அடையாளத்துடன் அவள் சுமக்கும் பொறுப்புக்களிலிருந்து சற்று ஓய்வு அல்லது அவற்றிலிருந்து ஒரு மாற்று அவளுக்குத் தேவை என்பதும் அம்மாவாகத் தன் கடமைகளை முடித்த பிறகாவது தன் தனிப்பட்ட ஆர்வங்களுக்கு அவள் வடிகால் தந்து கொள்ளட்டுமே என்பதும் நம்மில் பலருக்கும் தோன்றுவதே இல்லை. இறக்கும்வரை அவள் ‘அம்மா’ மட்டுமே…அவளும் ஒரு தனி மனுஷி என்ற எண்ணம் கிஞ்சித்தும் எழுவதே இல்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26406

அம்மாவின் இடம்

உண்மைத்தமிழன் என்ற பதிவர் எழுதிய இந்தக்கட்டுரையை வாசித்தேன். புனைவு கலக்காத நேரடியான பதிவு என்பதனாலேயே ஒரு வாழ்க்கையின் சித்திரம் கண்முன்னால் வந்தது. அம்மா, அண்ணா, அக்காக்கள் – ஒரு பையன். அந்தப்பையனின் நடத்தை மிகவும் அதிகப்படியானது. பிறிதொரு பண்பாட்டில் அதை பெரிய குற்றமாகவேகூட எடுத்துக்கொள்வார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் அந்தவயதில் அது இயல்பானதே என்றுதான் சொல்வார்கள். கிட்டத்தட்ட இதேவகையான பதிவைத்தான் ராஜ்கௌதமனின் சுயசரிதைத்தன்மை கொண்ட நாவலான ‘சிலுவைராஜ் சரித்திரம்’ முன்வைக்கிறது. சிலுவை அவன் அம்மாவை நடத்தும் விதம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26263