Tag Archive: அம்பை

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3

இரு கைகளையும் தூக்கி ஆர்ப்பரித்தபடி செருகளத்தின் முகப்பு நோக்கி ஓடிய அம்பையைத் தொடர்ந்து இருபக்கமும் அம்பிகையும் அம்பாலிகையும் சென்றனர். அவர்களின் குரல் கேட்டு அங்கே துயின்றுகிடந்த போர்வீரர்கள் அனைவரும் எழுந்தனர். ஒற்றைச்சரடால் கோக்கப்பட்ட பாவைகள் என ஒருவரால் ஒருவர் தூக்கப்பட்டு எழுந்து படைக்கலங்களைத் தூக்கி ஆட்டி போர்க்கூச்சலெழுப்பியபடி அவளுடன் பெருகிச்சென்றனர். துறுத்த கனல்விழிகளும் இளித்த வெண்பற்களும் பெருகிச்சுழலும் கைகளுமாக ஆழுலகத் தெய்வங்கள் அவர்களுடன் ஊடுகலந்து கொந்தளித்தன. கன்னங்கரு நிறத்தில் ஒரு நதி அலையடித்துச் சரிவிறங்குவதுபோல அப்படை முன்னால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112750/

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-2

பாண்டவப் படைகளின் நடுவினூடாக காசிநாட்டு இளவரசி அம்பை கூந்தல் எழுந்து நீண்டு பறக்க பெருங்குரலெழுப்பியபடி ஓடினாள். ஒவ்வொரு ஆயிரத்தவர் குழுவுக்கும் இருவர் என காவலர் சிறிய மரமேடைமேல் வேலுடன் விழித்து அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு அக்ஷௌகிணியின் தொடக்கத்திலும் சிறு காவலரணில் எழுவர் தாழாப் படைக்கலங்களுடன் இருந்தனர். எவரும் அவளை காணவில்லை. பெருவெள்ளம் அகன்ற பின் சேற்றில் பரவிக் கிடக்கும் சருகுகளும் சுள்ளிகளும் தடிகளும்போல பாண்டவப் படை நிலம்படிந்து துயின்றுகொண்டிருந்தது. இரவிலெழுந்த நீர்வெம்மை மிக்க காற்று அவர்களின்மேல் அசையாது நின்றிருக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112713/

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-16

சிகண்டியின் விழிகள் கூர்கொண்டு இளைய யாதவர்மேல் நிலைத்திருந்தன. அவர் பேசும்போது இளைய யாதவரைக் கடந்து அப்பால்சென்று பேசுவதுபோல் தோன்றியது. “யாதவரே, எக்கணமும் எழுவேன், செயலாற்றுவேன் என்னும் இறுதிப்புள்ளியில் நூறு ஆண்டுகளாக நின்றிருக்கிறது என் வாழ்க்கை, மலைவிளிம்பில் காலமிலாது நின்றிருக்கும் பாறை என. இப்புள்ளி நீண்டு முடிந்து என் வாழ்வென்றே ஆகிவிடுமென்றால் என் பிறவிக்கு என்ன பொருள்? நான் கொண்ட வஞ்சினமும், நோன்பும் இம்மண்ணில் எதன்பொருட்டு எழுந்தன?” என்றார். “அவற்றை பொருள்கொள்ளச் செய்யவேண்டுமென்றால் நான் பீஷ்மரை எதிர்கொள்ளவேண்டும். கொல்லவேண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108096/

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-11

இளைய யாதவர் பீஷ்மரை “வருக, பிதாமகரே” என்று அழைத்துக்கொண்டு முன்னால் நடந்தார். தாடியைக் கசக்கியபடி தயங்கி நின்றிருந்த பீஷ்மர் பின்னர் தொடர்ந்துசென்றார். அவர்கள் இருண்ட முற்றத்தில் இறங்கி மரங்களினூடாக மெல்லிய தடமாகத் தெரிந்த ஒற்றையடிப்பாதையில் நடந்தனர். இளைய யாதவர் திரும்பவோ சொல்லெடுக்கவோ செய்யாமல் நேர்கொண்ட நோக்குடன் செல்ல பீஷ்மர் அவ்வப்போது நின்று அந்த இடத்தை கூர்ந்தபின் தொடர்ந்தார். அவர்களின் காலடியோசைகள் சூழ்ந்திருந்த இருண்ட மரக்குவைகளில் பலவாறாக எதிரொலித்து உடன் பலர் தொடர்வதுபோல் செவிமயக்கு கூட்டின. கோமதியின் கரையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107830/

வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–7

பகுதி இரண்டு : பெருநோன்பு – 1 அஸ்தினபுரியின் மேற்குக்கோட்டைவாயிலுக்கு அப்பால் செம்மண்ணாலான தேர்ச்சாலைக்கு இரு பக்கமும் விரிந்த குறுங்காட்டிற்குள் பிரிந்து சென்ற சிறுபாதையில் ஏழு சேடியரும் காவலுக்கு பதினெட்டு வில்லவர்களும் கரிய ஆடையணிந்த நிமித்திகர்குலத்துப் பூசகர் மூவரும் சூழ கையில் பூசனைத் தட்டுகளுடன் பானுமதியும் அசலையும் நடந்தனர். முதலில் சென்ற காவலன் ஒரு சிறுமேட்டின்மேல் ஏறி நின்று கொம்பொலி எழுப்பினான். செவிகூர்ந்த பின் வருக என பிறருக்கு கைகாட்டினான். அவர்கள் நடந்தபோது சருகுகள் நொறுங்கும் ஒலியும் கற்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104550/

பெண்களின் நகரம்

வெண்முகில்நகரம் தொடங்கும்போது வழக்கம்போல ஒரு மெல்லிய கதைக்கட்டுமானமே உள்ளத்தில் இருந்தது. இது பிரயாகையின் தொடர்ச்சி போன்ற நாவல். திரௌபதியின் குணச்சித்திரம் முழுமையடைவதை காட்டுவது. பிரயாகையில் திரௌபதி பிறப்பதற்கான முகாந்திரமும் அவள் இளமையும் அவளுடைய திருமணமும் சொல்லப்பட்டிருக்கின்றன. வெண்முகில்நகரம் அவளுடைய ஆளுமை முதிர்ச்சியடைந்து, அவளுடைய மிகப்பெரிய கனவாக இந்திரப்பிரஸ்தம் எழுவதுவரை செல்கிறது. ஆனால் வழக்கம்போல எழுதும்போது நாற்புறமும் விரிந்துசென்று மெல்ல ஒருங்கிணைந்து வடிவம்கொண்டது வெண்முகில்நகரம். இன்று இது பாஞ்சாலியின் கதைமட்டும் அல்ல, கூடவே அஸ்தினபுரிக்கு வந்துசேரும் இளவரசிகளின் கதை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74661/

நாடகங்கள்

நண்பர் ஆர்வி அவரது சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் நாடகங்களைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். நாடகங்களைப்பற்றிய அவரது கருத்துக்களுடன் பல நாடகங்களுக்கான காட்சி,வரிவடிவ இணைப்புகளையும் அளித்திருக்கிறார். முக்கியமான தொகுப்பு என்னைப்பொறுத்தவரை தமிழ் மேடையில் நான் பார்த்த பெரும்பாலான நாடகங்கள் என்னை ஈர்க்கவில்லை. அவற்றிலிருந்த பயிற்சியின்மை என்னைப்படுத்தியது. சோ, எஸ்வி.சேகர், ஞாநி, ந.முத்துசாமி, பிரளயன் நாடகங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். என் பிரச்சினையாகவும் இருக்கலாம் ஆனால் வாசிப்பில் பல நாடகங்கள் எனக்கு முக்கியமானவை என்று பட்டன. இந்திராபார்த்தசாரதியின் மழை, போர்வை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73750/

அம்பையின் பேட்டி

ஆர்.வி அவரது இணையதளத்தில் அம்பையின் பேட்டி என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ‘சிவசங்கரி மாதிரி சிலர் இலக்கியம் படைக்க முயற்சி செய்திருந்தாலும், லக்ஷ்மி மாதிரி சிலர் ஒரு காலத்தின் தேவையை பூர்த்தி செய்திருந்தாலும், “பெண்” எழுத்தாளர்களை நான் அனேகமாக நிராகரிக்கிறேன்’ என்று சொல்கிறார் பெண்எழுத்தாளர்களின் எழுத்தின் தரம் பற்றிய விவாதத்தில் ‘எங்க என்னையும் முற்போக்குன்னு சொல்லு’ என்றவகை எதிர்வினைகள்தான் அதிகம். ஆர்வி அவரது கருத்தைச் சொல்லி மண்டகப்படியை எதிர்பார்க்கிறார். அதை அவரது நண்பர்களும் நண்பிகளுமே அளிப்பார்கள் என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57503/

அம்பை

தி இண்டு நாளிதழில் அம்பை எழுதிய தரமற்ற ஓர் எதிர்வினைக்கு எதிராக நான் அளித்த பதில் என் தளத்தில் வெளியாகியிருக்கிறது. அதையொட்டி சில கடிதங்கள் வந்தன. இணையத்தின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று எந்த ஒரு விவாதத்திலும் இலக்கியத்துக்கும் அறிவுச்செயல்பாட்டுக்கும் முற்றிலும் புதியவர்கள் உள்ளே வருவது. விவாதங்கள் வழியாகவே பலர் இலக்கியம் மற்றும் அறிவுச்செயல்பாடுகளுக்கு அறிமுகமாகிறார்கள். விவாதங்களை வெறும் வம்புமீதான ஆர்வம் காரணமாக கவனித்து எதையாவது எதிர்வினைசெய்துவிட்டு விலகிவிடுபவர்களே பெரும்பாலானவர்கள். அனால மிகச்சிலர் தொடர்ந்து வாசிக்கக்கூடியவர்கள். முதல்வகையினரை நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56885/

பெண்வெறுப்பும் அம்பையும்- ஹிந்துவுக்கு எழுதப்பட்ட கடிதம்

ஆசிரியருக்கு, என்னுடைய படத்துடன் அம்பை எழுதிய ஒரு கட்டுரை தமிழ் ஹிந்து தளத்தில் வெளிவந்துள்ளது. தனிப்பட்டமுறையில் என்னை இழிவுசெய்யக்கூடிய நோக்கம் கொண்ட கட்டுரை அது. அதில் சில குறிப்பிட்ட எழுத்தாளர்கள் நடந்துகொண்ட முறை பற்றி எந்த வித ஆதாரமும் இல்லாத வரிகள் பல உள்ளன. அவையெல்லாம் என்னைக்குறிப்பவை என்னும் பொருள்வரும்படி அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது,வெளியிடப்பட்டுள்ளது. சென்ற இருபத்தைந்தாண்டுக்காலமாக எழுதிவரும் நான் எந்த ஒரு தருணத்திலும் எந்த ஒரு பெண் எழுத்தாளரையும் தனிப்பட்டமுறையில் விமர்சித்ததில்லை. நேரிலோ, கடிதங்களிலோ, தொலைபேசியிலோ. எவரிடமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56830/

Older posts «