Tag Archive: அம்பேத்கார்

தமிழ்ஹிந்து

தமிழ் ஹிந்து நான் விரும்பி வாசிக்கும் இணையதளங்களில் ஒன்று. அதில் ம.வெங்கடேசன் எழுதிவந்த ‘புரட்சியாளர் அம்பேத்கார் மதம் மாறியது ஏன்?’ என்ற கட்டுரை சமீபத்தில் நான் வாசித்த முக்கியமான கட்டுரைகளில் ஒன்று. இந்த அளவுக்கு விரிவான தரவுகளுடன் அரசியல்தளத்தில் எவரும் எழுதுவதில்லை என்பதே உண்மை. இங்கே ஒரு தார்மீகக்கோபத்தை பாவனைசெய்துகொண்டாலே போதும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. நம் அரசியல் அக்கப்போர்க்காரர்களால் அக்கட்டுரையை ஆதாரபூர்வமாக எதிர்கொள்ள முடியாதென்பதையே அதற்கு எதிராக வந்த மௌனம் காட்டியது. அதேபோல இப்போது வெங்கடேசன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26272

அம்பேத்கார்-காந்தி

டாக்டர் அம்பேத்கார் பற்றி இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜப்பார் பட்டேல் எடுத்த திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இப்படம் காந்தியைக் கிட்டத்தட்ட தலித்துக்களின் எதிரி என்று, பொய்யான தகவல்களின் அடிப்படையில், வெறுப்பு உமிழும் கோணத்தில் சித்தரிக்கிறது என்றார்கள்.  சாவித்ரி கண்ணன் ஒரு கட்டுரையில் இதை விவாதிக்கிறார். பார்க்க டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார் திரைப்படம் ஏற்கனவே பகத்சிங் பற்றி வெளிவந்த திரைப்படம் ஒன்று காந்தியைப்பற்றி மிக எதிர்மறையாகச் சித்தரித்தது.  காந்தி பகத்சிங்கைக் காப்பாற்ற எதுவுமே செய்யவில்லை என்றும் மாறாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10718

காந்தியும் சாதியும் 2

[நீட்சி] காந்தியின் காலகட்டத்தில் அறிவுஜீவிகள் சாதியமைப்பை உதறிவிட்டு ஐரோப்பாவில் இருந்ததுபோல வர்க்க அமைப்பை கொண்டுவரலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தார்கள். நேருகூட சாதி அமைப்பு பழையது, வர்க்க அமைப்பே நவீனமானது தவிர்க்கமுடியாதது என்று எண்ணினார். ஆனால் காந்தி அதை ஏற்கவில்லை. வர்க்க அமைப்புக்குச் சாதியமைப்பு எவ்வளவோ மேல் என்றார். காந்தியின் நோக்கில், வர்க்க அமைப்பு மக்களை தனியர்களாக்குகிறது. சாதியமைப்பு மனிதர்களுக்கு அளிக்கும் இயல்பான குழுத்தன்மையும் அதன் பாதுகாப்பும் இல்லாமல் ஆகிறது. பொருளாதார அளவீடு மட்டுமே மனிதர்களை மதிப்பிட பயன்படுவதனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/14112

காந்தியும் தலித் அரசியலும் – 7

  October 9, 2009 – 12:03 am                                     7.  இரு நாயகர்கள் காந்தியையும் அம்பேத்காரையும் ஒப்பிட்டு குறைவாகவே ஆய்வுகள் வந்துள்ளன. பெரும்பாலான ஆய்வுகள் ஏதேனும் ஒருபக்கம் சாய்ந்தவை, மறுபக்கத்தை காண மறுப்பவை. சமீபகாலமாக மறுபக்கத்தை வசைபாடக்கூடிய ஆய்வுகள் அதிகமாக வந்துகோண்டிருக்கின்றன. காந்திதான் அதன் களப்பலி. அரசியல் உள்நோக்கத்தை தவிர்த்துப் பார்த்தால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4367

காந்தியும் தலித் அரசியலும் – 6

6. இறந்தகாலத்தை மாற்றி எழுதுதல்   தலித்துக்கள் இன்று ஓர் அரசியல் சக்தியாக திரள்வதற்கு அச்சமூகத்தின் உள்ளே உள்ள பலநூறு சாதி ஏற்றத்தாழ்வுகளும் பேதங்களுமே காரணமாக இருக்கின்றன. அத்துடன் அரசியலில் இன்று உருவாகியிருக்கும் ஊழல் என்ற மாபெரும் தொற்றுநோய். ஆகவே அவர்கள் எண்ணும் இலக்குகள் வெகுதூரத்திலேயே உள்ளன.   தங்கள் இன்றைய நிலைக்குக் காரணமாக இறந்தகாலத்தில் வந்து நழுவிய ஒரு வாய்ப்பைச் சொல்லி ஆறுதல் செய்துகொள்வதற்காகவே பூனா ஒப்பந்தம் இன்று மிகைப்படுத்தப்படுகிறது. அந்த நோக்கத்துக்காக மொத்த இறந்தகாலமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4363

காந்தியும் தலித் அரசியலும் – 5

காந்தியும் தலித் அரசியலும் 5 October 7, 2009 – 12:02 am5. உரிமை என்னும் அதிகாரச் சமநிலை     தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமை குறித்து இன்று உருவாக்கப்படும் பிரமைகளில் கடைசியானது இந்திய தலித்துக்களின் வாழ்க்கையில் ஒட்டுமொத்த மறுமலர்ச்சியை உருவாக்கி அவர்களை எங்கோ கொண்டுபோயிருக்கக் கூடிய ஒரு மாபெரும் திட்டம் அது என்பதாகும். அதை காந்தி கெடுத்ததனாலேயே இன்றும் தாழ்த்தப்பட்டவர்கள் கீழ்நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் படும் எல்லா துயரங்களுக்கும் காரணம் காந்தியே என்று சொல்ல அதுவே அடிப்படை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4354

காந்தியும் அம்பேத்காரும்

 அன்புள்ள ஜெயமோகன், டி.ஆர்.நாகராஜ் அவரது ‘எரியும் பாதங்கள்’ நூலில் சொல்வார் – ‘ வரலாற்றின் மயக்கும் வசீகரம் என்னவென்றால் அது பாதி கோணமே முழுமையான கோணம் என்று நம்மை நம்ப வைத்து செயல்படுவதற்கான உணர்வெழுச்சியை அளிக்கிறது என்பதே.  முழுமையான பார்வைக்காக காத்திருக்கும் ஒருவர் செயல்படப்போவதேயில்லை. வரலாற்றில் குதிக்கப்போவதுமில்லை. இங்கேதான் வரலாற்றின் விடுதலை வாய்ப்புகள் உள்ளன. பாபா சாகேப் அவர்களும் பாபுவும் அத்தகைய படைப்பூக்கம் கொண்ட பொறுமையின்மையுடன் வரலாற்றில் குதித்தனர். மோதிகொண்டனர். படைப்பூக்கம் கொண்ட பொறுமையின்மை அடைந்தவர்களுக்கு மகாசமாதிநிலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2745

கடிதங்கள் [ஜெயமோகன் – கார்த்திக் ராமசாமி]

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கும், மற்ற திண்ணை வாசகர்களுக்கும், கார்த்திகேயனாகிய (திண்ணை வாசகன்) நான், நினைத்தது எனக்கும், எழுத்தாளர் திரு.ஜெயமோகனுக்கும் நடந்த கடித விவாதங்களை எல்லோருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று. ஜெயமோகன் அதிக நேரம் எடுத்துக் கொண்டு மிகவும் சிரத்தையுடன் எனக்கு பதில்களை எழுதினார். எனவே அவரது முயற்சி அனைவரையும் சென்று அடைவது பொற் குடத்திற்கு பொட்டிட்டது போலிருக்கும். மேலும் அவரது உண்மையான உழைப்பையும் {ஒரு கடிதம் 12 பக்க நீளம் உடையது}, இலக்கியத்தில் அவரது நேர்மையையும் அனைவரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43