Tag Archive: அம்பேத்கரின் தம்மம்

பதுங்குதல்

அன்புள்ள ஜெயமோகன் மீண்டும் அம்பேத்கரின் தம்மம் கட்டுரை படித்த பொழுது ஒரு வரி இன்றைய  சூழலில் முக்கியமாகப் பட்டது “‘ஏழைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று புத்தர் சொல்லவில்லை”,மிகவும் யதர்த்தமான வரிகள் .ஏழையாக இருப்பதால் மேலும் மேலும் அடக்குமுறைக்கு மட்டுமே உள்ளாக்கப்படுகிறார்கள் ,இதை மாற்ற அவர்கள் பொருளியியல் அடிப்படையில் முன்னேற வேண்டும் என்கிறது பௌத்தம். துறவைப்பற்றிப்பேசும் ஒரு மரபு அதற்குள் “பொருளியல் பற்றியும் வழியுறுத்துவது ” இரண்டையும் தெளிவு செய்ய வழி செய்கிறது . அது துறக்க சொல்வது “ஆசையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71314

தம்மம்-கடிதங்கள்

ஊசி – நூல் – ஸ்வெட்டர் பற்றிய அந்த வரியைப் படித்ததும் எனக்குக் காளிதாசனின் கவிதை மின்னலிட்டது.. மணௌ வஜ்ர ஸமுத்கீர்னே ஸுத்ரஸ்யேவ அஸ்தி மே கதி: முன்னிருந்த கவிஞர் செய்த சொல்லெனும் துளையில் என் மொழி செல்லும், ரத்தினத்தை ஊடுருவி வைரம் இட்ட துளை வழியே நூல் செல்வது போல். இந்தியப் பண்பாடு உருவாக்கிய சொற்களிலேயே மகத்தானது தர்மம் என்ற சொல்தான் போலும்… இந்தச் சொல் மூன்று முக்கிய பரிணாமங்களைக் கடந்திருக்கிறது.. அ) வேத உபநிஷத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32998

அம்பேத்கரின் தம்மம் 4

[தொடர்ச்சி] தேடலை கைவிடுதலே தர்மம் என்ற நான்காம் படிநிலை இன்றைய வாசகனுக்கு ஆச்சரியமளிக்கும். தேடல் என்பதை புனிதமானதாக, மனிதனுக்களிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதமாக நாம் அறிந்திருக்கிறோம். ’தேடலின் புனித துக்கம்’ என்ற சுந்தர ராமசாமியின் புகழ்மிக்க வரி நினைவுக்கு வருகிறது. எது தர்மம் என்ற வினாவுக்கு ‘தேடலைகைவிட்ட செயல்பாடு’ என்று பதில் சொல்லப்படும்போது அப்படி ஒருசெயல்பாடு இருக்கமுடியுமா, இருந்தால் அதற்கு என்ன பயன் என்ற வினா மனதில் எழுகிறது. புத்தர் தம்மபதத்தில் சொல்லும் ஒரு வரியை அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார். ’ஆரோக்கியத்தைவிட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32436

அம்பேத்கரின் தம்மம் 3

[தொடர்ச்சி] இரண்டாவது படிநிலையாக அம்பேத்கர் சொல்வது வாழ்க்கையின் முழுமையை அடைவதே அறம் என. முழுமை என்பது மொழியாக்கம் மூலம் பலபடிகளாக மாற்றப்பட்டுவிட்ட வார்த்தை. பௌத்த மூலச்சொல் பூர்ணம். சரியானபடி அமைந்த முழுமை என்று அதை மொழியாக்கம் செய்யலாம். மிக இயல்பாக தூய்மை என்ற முதல் படிநிலை இரண்டாவது படிநிலைக்குக் கொண்டுவருகிறது. ஐந்து நெறிகள் மூலம் தன்னை தூய்மைப்படுத்திக்கொண்ட ஒருவன், உடலையும் வாக்கையும் மனதையும் தூய்மையாக்கிக்கொண்ட ஒருவன் இயல்பாக உடலை உடலாகவும் உணர்வுகளை உணர்வுகளாகவும் மனதை மனமாகவும் கருத்துக்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32434

அம்பேத்கரின் தம்மம் 2

[தொடர்ச்சி] அம்பேத்காரின் புத்தரும் அவரது தம்மமும் என்ற பெருநூலில் மூன்றாம் பகுதி மூன்றாம் அத்தியாயத்தின் தலைப்பு ‘தம்மம் என்பது என்ன?’ தர்மம் என்பதைப்பற்றி பல்வேறு கோணங்களில் வாசிக்கிறோம். ஆனால் இந்த ஒரு சிறிய அத்தியாயத்தில் உள்ள வரையறை அளவுக்குச் செறிவான வரையறையை எங்கும் காணமுடியாது. அம்பேத்கர் அதற்கு ஆறு வரையறைகளை அளிக்கிறார். இந்த அத்தியாயம் பௌத்த மூலநூல்களை அடியொற்றியதாயினும் இது அமைந்திருக்கும் முறை பேரழகு கொண்டது. அந்த வைப்புமுறையிலேயே அம்பேத்கரின் தரிசனம் வெளிப்படுகிறது. 1 வாழ்க்கையில் தூய்மையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32433

அம்பேத்கரின் தம்மம்- 1

புத்தகங்களைப் பூஜையறையில் வைத்து வாசிப்பதற்காக ஒரு ஸ்டேண்ட் உண்டு. கத்திரி போன்ற வடிவில் இருக்கும். அதற்கு எங்களூரில் கிரந்தகாவடி என்று பெயர். பெரும்பாலான குமரிமாவட்டப் பழங்கால வீடுகளில் அது சந்தன மரத்தில் செய்யப்பட்டிருக்கும். நான் சிறுவயதாக இருக்கும்போது அப்படி ஒரு ஸ்டேண்டை எடுத்துக்கொண்டு வந்து அதில் வைத்து அலக்ஸ்டாண்டர் டூமாவின் த்ரீ மஸ்கிட்டீர்ஸ் என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். கனமான நூல். அதாவது பக்க அளவில். ஜோதிடரான என் பெரியப்பா அங்கே வந்தார். ‘அது என்ன நூல்?’ என்று கேட்டார். சொன்னேன். கடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32429