Tag Archive: அமெரிக்கா

ஹார்வார்ட் புகைப்படங்கள்

         

Permanent link to this article: https://www.jeyamohan.in/4005

உரை, கடிதங்கள்

அன்புள்ள ஜெ.மோ, நலமா?  ஒரு இனம்புரியாத  மன எழுச்சியையும்,   சிலிர்ப்பையும் அளித்தது இந்தக் கட்டுரை, மாமலைகள் தரும் சொல்லில் அடங்காத தரிசன அனுபவமே போன்று.   இலக்கியம் பற்றி நீங்கள் இதில் சொன்ன வாசகங்களுக்கு  இந்தக் கட்டுரையே சாட்சியாகி விட்டது! // இங்குவந்த வெள்ளையர்கள் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாத அவன் அகத்தை நான் அறிகிறேன். அவனையும் என் மூதாதையாக எண்ண என்னால் முடிகிறது. // உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்த வார்த்தைகள் என்பது  புரிகிறது..   சில வருடங்கள் முன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3963

வாக்களிக்கும் பூமி 6, வால்டன்

காசர்கோடு நூலகத்தின் பழைய அடுக்குகளில் நான் 1984ல் எமர்சனை கண்டடைந்தேன். எமர்சனை வாசிப்பதற்கு மிகச்சிறந்த வழிமுறை அவரை மொழியாக்கம் செய்வதுதான் என்று கண்டுகொண்டு ஒவ்வொரு நாளும் சில பத்திகள் வீதம் மொழியாக்கம் செய்தேன். பின்னர் அதில் இயற்கை என்ற கட்டுரையை  ‘இயற்கையை அறிதல்’ என்ற நூலாக வெளியிட்டேன். எமர்சனின் சிந்தனையின் பின்புலமும் அவரது சூழலும் எதுவுமே தெரியாமல் நான் எமர்சனில் நுழைந்தேன். இன்றும் எமர்சன் என் வாழ்க்கையில் முக்கியமான ஒரு செல்வாக்காகவே திகழ்கிறார். ஜூலை 15 ஆம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3940

வெள்ளைமலை. புகைப்படங்கள்

   

Permanent link to this article: https://www.jeyamohan.in/3946

உரைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், உங்களது “பசியாகி வரும் ஞானம்” படித்தேன். வெளிநாட்டில் வாழும்போது தாய்மொழியை தாயின் அரவணைப்பிற்கு ஒப்பிட்ட உங்களது ஞானத்தை ரசித்தேன். பிரேம்சந்தின் கதைகள் இன்றுவரை படித்ததில்லை. நீங்கள் குறிப்பிடும் கதை எத்தனை விஷயங்களைச் சொல்கிறது…இனிமேல் அவசியம் படிக்க வேண்டும். // இந்த அரங்கில் இத்தனை வகைவகையான உணவுகள் நடுவே உங்களை எல்லாம் பார்க்கும்போது இதைச் சொல்லத்தோன்றியது.// உங்களது தீவிரமான மற்றும் ஆழமான வாசிப்பு உங்கள் நினைவு அடுக்குகளில் இருந்துகொண்டு உங்களுக்கு தேவையான போது வெளிவர தயாராக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3908

வாக்களிக்கும் பூமி 5 , வெள்ளைமலை

வெள்ளை மலைக்குச் செல்லும்வழியில் நான் ஹெர்மன் மெல்வில்லையே எண்ணிக்கொண்டிருந்தேன். மிகச்சிறிய வயதில் அவரது மோபி டிக் நாவலை நான் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழக வெளியீடாக வாசித்தேன். பின்னர் ஆங்கிலம் வாசிக்க ஆரம்பித்தபின்னர் முழுநூலையும் வாசித்தேன். அந்த அவ்வயதில் அந்நாவல் அளித்த சாகசம் அலையடிக்கும் கனவுலகம் அபாரமான மன எழுச்சியை அளித்தது. அக்காலத்தில் சாகச நாவல்களைத்தவிர பிற என்னைக் கவர்ந்ததே இல்லை. ஐவன்ஹோ, த்ரீ மஸ்கட்டீர்ஸ், கவுண்ட் ஆ·ப் மாண்டிகிரிஸ்டோ ,வெஸ்ட்வேர்ட் ஹோ போன்ற நாவல்கள். இவற்றை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3936

சென்னையில்…

சான் ஃப்ரான்சிஸ்கோ விமானநிலையத்தில் என்னை நண்பர்கள் வந்து வழியனுப்பி வைத்தார்கள். திருமலைராஜன், ஆர்வி , பகவதிப்பெருமாள், திருமலைராஜனின் மனைவி ஆகியோர். அருணா வருவதாக இருந்தது  சாலைநெரிசலில் சிக்கிக் கொண்டார். விமானநிலையத்தில் இவ்வாறு கிளம்ப நிற்கும்போது பொதுவாக ஒரு உணர்வெழுச்சி ஏற்பட்டு நெஞ்சை அடைக்கும் . அவ்வறெல்லாம் அடைக்கக் கூடாது என்பதெல்லாமே எனக்கு நன்றாகவே தெரியும். நான் மிகவும் தருக்கபூர்வமான மனிதன். ஆனால் இந்த தகவலை என்னால் என் மனதுக்கு புரியவைக்க நாற்பது வருடங்களாக முயன்றும் முடியவில்லை. ஆகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3920

யாருடைய ரத்தம்: கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், உங்களுடைய “யாருடைய ரத்தம்” உரையை படித்து மிகவும் நெகிழ்ந்தேன். அமெரிக்க வளரிளம்பருவ பிள்ளைகள் மற்றும் பெற்றோரைப் பற்றிய உங்கள் கருத்து 100% உண்மை (கசந்தாலும்). கட்டிய மனைவியின் சுகத்திற்காக  தாய்ப்பாலுடன் ருசியை, அன்பை, அறிவை புகட்டிய பெற்ற அன்னையை மறக்கும், புறக்கணிக்கும், அவமானப்படுத்தும் மகன்களின் மனோபவம்தான் இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவர்களுடைய தாய்நாட்டின் மீது. பிள்ளைகள்தான் பாவம், திரிசங்கு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் [ அவர்களின் காரணப்பெயர் ABCD – American Born Confused …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3895

திரும்புதல்

கிட்டத்தட்ட இரண்டுமாத அமெரிக்கச் சுற்றுப்பயணம் முடிந்து இன்று , செப்டெம்பர் ஆறாம் தேதி காலை, ஊர்திரும்புகிறேன். செப்டெம்பர் எட்டாம்தேதி அதிகாலை சென்னைக்கு சென்று சேர்வேன் என நினைக்கிறேன். மறுநாள் காலையில் நாகர்கோயில். நெடுங்கால பயணங்கள் எனக்குப் புதிதல்ல என்பதனால் வீட்டுஏக்கம் என பெரிதாக ஏதும் இல்லை. என்றாலும் திரும்பிச் செல்வதை எண்ணும்போது என்னுடைய நாகர்கோயில் நகரும் மலைகளும் மழைக்குளிர் காற்றும் அருண்மொழியும் செல்லக்குழந்தைகளும் பிரியமான நாய்களும் எல்லாம் ஒருசேர நினைவில் அலையறைகின்றன நான் சென்ற ஜூலை 9 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3898

ஜெயமோகன் உரை

தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்புரை தமிழகத்தின் முன்ணணி எழுத்தாளரும், சிந்தனையாளரும், திரைப்பட வசனகர்த்தாவும் ஆகிய திரு.ஜெயமோகன் அவர்களை, சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் கவுரவிக்கப் படவுள்ளார். இந்நிகழ்ச்சியில் ஜெயமோகன் அவர்களது சொற்பொழிவும், கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம் பெற உள்ளது. அனைவரும் வருக. நாள்: செப்டம்பர் 5ம் தேதி, சனிக்கிழமை இடம்: ஃப்ரீமாண்ட் நகர நூலகம், ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா http://www.aclibrary.org/branches/frm/default.asp?topic=FremontMain&cat=FRMHome   நேரம் : மாலை 2:00 – 5:00 அனுமதி : இலவசம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/3869

Older posts «

» Newer posts