Tag Archive: அமெரிக்கா

பிழைத்தல், இருத்தல், வாழ்தல்

[சாஸ்தா மலை, கலிஃபோர்னியா] சில வருடங்களுக்கு முன்னர் கவிஞர் தேவதேவன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது என் மனைவி அருண்மொழிநங்கை அவரிடம் கேட்டாள். “சார், நீங்கள் எப்போதுமே பசுமையைப்பற்றியும் மலர்களைபற்றியும் வழிகளை திகைக்கவைக்கும் காடுகளைப் பற்றியும் எழுதுகிறீர்கள். ஆனால் நீங்கள் வாழும் தூத்துக்குடி நகரம் கிட்டத்தட்ட ஒரு பாலைவனம் போல. தொழிற்சாலைக்கழிவுகளும் மொட்டைப்பனைமரங்களும் நிறைந்த துறைமுக நகரம் அது….நீங்கள் எங்கிருந்து உங்கள் மனத்தூண்டலைப் பெறுகிறீர்கள்?’’ வழக்கம்போல தேவதேவனால் அதை விளக்கிச் சொல்லமுடியவில்லை. குழந்தையைப்போன்ற கவிஞர் அவர். அவரால் கவிதையின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3662

பசியாகி வரும் ஞானம்

அன்புள்ள நண்பர்களே, இப்போது உங்கள் முன் நிற்கும்போது பல ஆயிரம் கிலோமீட்டர் அப்பால் இருக்கும் என்னுடைய தேசத்தை நான் நினைத்துக்கொள்கிறேன். கைக்குழந்தைகள் தாயைப்பிரிந்து நிம்மதியிழந்திருக்கையில் தாயின் பழைய சேலை ஒன்றை அதனருகே போடுவார்கள். அந்த வாசனை அதை அமைதிப்படுத்தும். அந்த புடவை போல இப்போது நமது மொழி இருக்கிறது.  அது நம் தாய் நாட்டின் வாசனையைப்போல் இருக்கிறது. பலகோடி மக்கள் வாழும் ஒரு மாபெரும் தேசம். பல ஆயிரம் கிலோமீட்டர் விரிந்து கிடக்கும் மாபெரும் நிலப்பரப்பு. பலநூறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3837

மூதாதையர் குரல்

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு நிகழ்ச்சி. எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. பேசியவர் ‘சார் என் குரலை தெரியுதா?’ என்றார். நான் தெரியவில்லையே என்றேன். ‘நான் எம் ஜி ஆர் ரசிகன் சார்…உங்களை போன வருஷம் கூப்பிட்டு திட்டியிருக்கேன்” என்றார் சென்ற வருடம் நான் எழுதிய சாதாரணமான நகைச்சுவைக் கட்டுரைகளை ஆனந்த விகடன் பெரிதுபடுத்தியமையால் ஒரு விவாதம் எழுந்தது நினைவிருக்கலாம். அந்த விவாதத்தில் மனம் புண்பட்ட எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பலர் என்னை போனில் கூப்பிட்டு கடுமையாக வசை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3891

யாருடைய ரத்தம்?

நண்பர்களே, க.நா.சு நெடுங்காலம் முன்பு ஒரு நாவலை மொழியாக்கம் செய்தார். பேர் லாகர் குவிஸ்ட் என்ற சுவீடிஷ் எழுத்தாளர் எழுதிய ‘அன்புவழி’ என்றநாவல் [Pär Lagerkvist (1891-1974), Barabas]  இந்த சிறு நாவல் தமிழ் எழுத்தாளர்கள் நடுவே ஆழமான ஒரு பாதிப்பைச் செலுத்திய ஒன்று. வண்ணநிலவன் வண்ணதாசன் பாவண்ணன் போன்ற எத்தனையோ எழுத்தாளர்கள் அந்த நாவலை தங்கள் ஆதர்ச நாவலாகச் சொல்லியிருக்கிறார்கள். நாவலின் கதை இதுதான். கிறிஸ்துவை சிலுவையில் ஏற்றுவதற்காக கல்வாரி மலைக்குக் இழுத்துவருகிறார்கள். கூடவே வரும் யூதமக்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3834

சத்யார்த்தி- அமெரிக்கா- கடிதங்கள்

கட்டாயத்தின் பெயரில் (!!!!) சதிகார (!!!!) ஐரோப்பியர்களின் கல்வி நிலையத்தில் அறிவு தேட சென்று இருக்கும் நண்பர் நோபல் பரிசு பற்றி வாரி இறைத்திருக்கும் அன்பை (!!!) படித்தேன். அவர் ஏன் அந்த சதிகாரர்களின் வலையில் விழுந்து சின்னாபின்னாமாக வேண்டும். அவரை கை பிடித்து காப்பாற்ற யார் முன் வருவாரோ என மனம் பதை பதைக்கின்றது. ஐரோப்பியர்களின் கல்வி நிலையம் காந்தியை, நேருவை, அம்பேத்கரை உருவாக்கி இருக்கின்றது. இன்னமும் பல வழிகளில் மனித இனம் முன்னே செல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63707

அமெரிக்காவில் ஞாநி

ஞாநி இந்த வேன்டுகோளை முன்வைத்திருக்கிரார் ஜூன் 15 வாக்கில் நண்பர் அருளின் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் ஒஹையோவுக்கு வருகிறேன். அவருடன் ஜூன் 30 வரை இருந்து அருகில் உள்ள நகரங்களுக்கும் செல்ல உத்தேசம்.அமெரிக்காவில் இருக்கும் இதர பகுதிகளுக்கு அங்குள்ளவர்கள் அழைத்து என் பயணச் செலவையும் உணவு இருப்பிடப் பொறுப்பையும் ஏற்றால், ஜூலை15 அல்லது 20 வரை சுற்றத் தயார். தொடர்புக்கு: [email protected] அன்புடன் ஞாநி

Permanent link to this article: https://www.jeyamohan.in/7269

வாக்களிக்கும்பூமி 9, சட்டச்சபை

ஜூலை பதினெட்டாம் தேதி நானும் ஓப்லா விஸ்வேஷ¤ம் அவரது குட்டிமகனும் அல்பெனி நகரத்தைப் பார்க்க கிளம்பினோம். அல்பெனி ஹட்சன் ஆற்றின் கரையில் உள்ளது.  ஆரம்பகால பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட உள்நில நீர்ப்போக்குவரத்து வழிகளில் ஹட்சன் ஆற்றுப்போக்குவரத்து முக்கியமான ஒன்று என்கிறார்கள்.  இது ஏரீ கால்வாய் வழி என்று சொல்லபப்டுகிறது. வெள்ளையர் இங்கே வருவதற்கு முன்னர் இங்கே மாஹிகான் [Mahican] குலத்தைச் சேர்ந்த பூர்வகுடிகள்  வசித்திருந்தார்கள். கடுமையான இன ஒழிப்புக்குப் பின்னர் இவர்கள் இன்று மக்கள் தொகையில் .02 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4064

அமெரிக்கா கடிதங்கள்

பேருந்து நிலையத்தில் இஞ்சி முரப்பா விற்பவரின் குரலில் படித்துக் கொள்ளவும்) வெற்றிகரமாக அமேரிக்கா நாடு சென்றூ.. அங்கே கல்வியின் தலைநகராம் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் பல நாட்டினரைக் கண்டு அறிவு பெற்று, பற்பல நூட்களைப் படித்துத் தாயகம் திரும்பிய நம் ஆருயிர் அண்ணன்.. புரட்சிப் பொழில்.. (ஏதானும் புரட்சி வேணாமா..) அறிவுக் கடல்.. அன்புச் சுடர்… வடமொழி வித்தகர்.. திரைப் பட வசன கர்த்தா.. இலக்கியப் பேரொளி.. (நாட்டியப் பேரொளியவா கிண்டல் பண்றீங்க?? இந்தா வாங்கிக்குங்க..) அண்ணர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4067

வாக்களிக்கும் பூமி 8, அல்பெனி

நியூயார்க் மாகாணத்தின் தலைநகரம் எதுவென்று கேட்டால் பொதுவாக எந்த இந்திய மாணவனும் நியூயார்க் என்றே பதில் எழுதுவான். ஆனால் அதன் தலைநகரம் அல்பெனி. அமெரிக்காவின் வடக்கே கனடா எல்லைக்குச் சமீபமாக இருக்கும் சின்னஞ்சிறிய நகரம். என்னுடைய அடுத்த பயண இலக்கு. ஜூலை 17 ஆம் தேதி மதியம் என்னை பாஸ்டன் பாலாஜி கிரேஹௌண்ட் பேருந்தில் ஏற்றிவிட்டார். பேருந்துப்பயணம் அமெரிக்காவில் ஏழைகளுக்குரிய ஒன்று. அதாவது கார் இல்லாதவர்களின் வழிமுறை. வசதியான வண்டிதான். ஆனால் பயணிகளில் கணிசமானவர்கள் கறுப்பர்கள் மற்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3981

வாக்களிக்கும் பூமி 7, ஹார்வார்ட்

பல்கலைநகர் என்பது அமெரிக்காவின் முக்கியமான ஈர்ப்புகளில் ஒன்று. ஒரு நாகரீகம் அதன் சிறப்புடன் இருக்கையில் அங்கே பெரும் கல்விநகரங்கள் உருவாகும் என்பது வரலாறு. தட்சசிலா பல்கலைக்கழகமும் நாலந்தா பல்கலைகழகமும் அத்தகையவை. நாலந்தாவின் இடிபாடுகள் வழியாகச் செல்லும்போது அந்த கல்விநகரின் விரிவும் மகத்துவமும் நம் நெஞ்சை நிறைக்கும். தமிழ்நாட்டில் காஞ்சியும் கும்பகோணமும் கல்விநகரங்கள். காஞ்சியின் கடிகை பல்கலையில் இருந்தே இன்றும் உலகமெங்கும் பேசபப்டும் பிற்கால பௌத்த சிந்தனைகள் உதயமாகிவந்தன. கன்யாகுமரி மாவட்டம் அதன் நிலவளத்தால் எக்காலத்திலும் பண்பாடு மிக்கதாகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3976

Older posts «