Tag Archive: அமீர்கான்

சகிப்பின்மை -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், சிரித்து மாளவில்லை. சுருக்கமாக சில குறிப்புகள். அமெரிக்காவில் இன்று டிரம்ப் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் இன வெறுப்பு என் போன்றோரைக் கவலை கொள்ளச் செய்வதே. நான் பி.ஏ.கே வுக்கு எழுதிய குறிப்பிலும் சொன்னேன் டிரம்ப் குறித்து எழுத நினைத்து உட்காரும் போது ஆமிர் பிர்ச்சினை வெடித்தது. முதலில் நான் அதைப் புறந்தள்ளவே நினைத்தேன். மேலும் அவர் ‘வெளியேறி விடுவேன்’ என்றுப் பேசியிருக்கக் கூடாதென்றே என்றே நண்பனுடன் வாதிட்டேன். பிறகு அந்தக் காணொளியைப் பார்த்தப் பின் அவர் பேசியதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81190

அனந்தம் அரவிந்தம்

இரு கட்டுரைகளை இன்று வாசித்தேன். ஒன்று நண்பர் அரவிந்தன் கண்ணையனுடையது. அமீர்கானும் சகிப்பற்ற இந்தியாவும். வழக்கம்போல நல்ல மொழியில் திட்டவட்டமான கருத்துக்களுடன் அந்தக் கருத்துக்களுக்கு வர உதவிய அதைவிட திட்டவட்டமான முன்முடிவுகளுடன் அந்த முன்முடிவுகளை உருவாக்கிய அதைவிட திட்டவட்டமான காழ்ப்புகளுடன் எழுதப்பட்ட கட்டுரை. எனக்கு அரவிந்தன் கண்ணையனிடம் பிடித்ததே இந்த உறுதிதான். அனேகமாக அமெரிக்காவிலேயே உறுதியான கருத்து கொண்டவர் அவர்தான் என நினைக்கிறேன் இத்தகைய உறுதிகள் பொதுவாக மனிதர்களுக்குரியவை அல்ல, அவதாரங்களுக்குரியவை. கொஞ்சநாளில் நாடுதறியமேரிக்கர் என்னும் இனம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81160

ஒப்ரா வின்ஃப்ரேயும் அமீர்கானும்

அன்பின் ஜெ.. சில ஆண்டுகளுக்கு முன்னால், விஜி, ஓப்ரா வின்ஃப்ரேயின் தொலைக் காட்சி நிகழ்வுகளைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பார். ஓப்ரா, சிறுவயதில் பாலியல் பலாத்காரப்படுத்தப் பட்டு, பின் சமூக தொடர் ஒன்றைத் துவங்கி மிகப் பிரபலமான ஒருவர். பல எபிஸோட்கள் மிகவும் நெகிழ வைத்தவை என்று சொல்வார்.. கேலியாக, நான் அவரை ‘ஒப்பாரி வின்ஃப்ரே என்று சொல்வேன். அதிகம் பார்த்ததில்லை. ஆனால், சென்ற வாரம் “சத்யமேவ ஜெயதே” என்னும் அமீர் கானின் தொடர் பார்த்தேன். மிகவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27310