Tag Archive: அப்பாவின் குரல்

அப்பாவின் குரல், கடைசிக்கண்- கடிதங்கள்

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, பெண்ணை அவளின் பாலியல் ஒழுக்கம் சார்ந்து தாக்கினால் அவளை எளிதாக வீழ்த்திவிடலாம் என்ற குறுக்குப்புத்தியையும் அது வழிவழியாக ஆணுக்கு ஏற்றப்படுவதையும் அதை வெற்றிகொள்வது ஆணின் மனதுக்கு எவ்வளவு பெரிய சவாலாக இருக்கிறது என்பதையும் ஜெயன் கோபாலகிருஷ்ணனின் அப்பாவின் குரல் சிறுகதை காட்டியது.ஆணுக்கு ஒரு பெண்ணைக் குறுக்கு வழியில் வெல்வதற்கு ஏற்படும் மன உந்துதலை இயல்பு நிலையில் அவனால் தடுக்க முடிவதில்லை என்பதைக் காட்டுவதாகக் கதையின் நாடகத்தனமான முடிவைக் கருதலாம். அக்கதை எனக்குள் இன்னுமொரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41082

கதைகள் – கடிதங்கள்

காட்சன் அவர்களின் மொழி புரிந்து கொள்ள மூன்றுமுறை படிக்க வேண்டியிருந்தது.  ஜெ-வின் அத்தனை கதைகளையும் படித்திருந்தும் இந்த மொழி இன்னும் கடினமானதாகத்தான் இருந்தது. கதை க்ளைமாக்ஸ் வரை அருமை. ஒரு விஷயம், பல கோணம், பார்வையாளர் ஒருத்தி என தொடங்கிச் சென்ற கதை ஒரு பெரிய உச்சத்தில் முடிந்திருக்க வேண்டும். இன்னும் கதை வளர்ந்திருக்க வேண்டும். டபக்குன்னு முடிச்சிட்டாருன்னு தோணியது. அப்பாவின் குரல் எனக்கு தனிப்பட்ட முறையில் வலி நிறைந்த கதை. நம்மில் பெரும்பாலோர் கதை. நாயகனுடன் நம்மைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40995

அப்பாவின் குரல்-கடிதங்கள்

ஆசிரியருக்கு, வணக்கம். மனதை உலுக்கும் கதை. உறவு என்பது அன்பினால் இல்லாமல் போனால், அன்பின் சுவடுகளை அடையாளம் காணாமல் போனால் வரும் தனிமையையும், அன்பு மறுக்கப்பட்டவர் தரும் அருகாமையையும் கடும் வறட்சியை காட்டுகின்றன. வாசிப்பும், வாசிப்பை தொடர்ந்த சிந்தனையும்,வாசிப்பின் வரிகளை மீண்டும் மீண்டும் தனக்குள் பேசி கொள்வதும் அருகில் உள்ளவர்களை அப்பாலும், எழுத்தில் உள்ளவர்களை அருகிலும் வைக்கின்றது. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. என்புதோல் போர்த்த உடம்பாக இல்லாமல் இருக்க உயிர்நிலையை கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40734