Tag Archive: அப்துல் கலாம்

யாகூப் கடிதங்கள்

அன்புள்ள ஜெ, உங்கள் ‘நண்பர்’ அரவிந்தன் கண்ணையன் எழுதிய மறுப்பை வாசித்தீர்களா? அப்துல்கலாம் பற்றி அவர் எழுதியதற்கு நீங்கள் பதிலளிப்பீர்கள் என நினைத்தேன் செல்வா அன்புள்ள செல்வா, இதில் என்ன ஐயம். அவர் நண்பர்தான். யாகூப் மேமனுக்கு ஆதரவாகப் பேசுபவர்களில் 1. தூக்குத்தண்டனை எதிர்ப்பாளர்கள் 2. பொதுவாகவே எப்போதும் அரசு என்னும் அமைப்பை எதிர்க்கும் கலகநோக்குள்ளவர்கள் 3. இந்தியாவின் இன்றைய அரசு இந்துத்துவச் சார்புள்ளது என உண்மையில் நம்புபவர்கள் ஆகியவர்களின் குரல் எழுவதை புரிந்துகொள்கிறேன். ஜனநாயகத்தில் எல்லாவற்றுக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77966

அப்துல் கலாமும் முஸ்லீம்களும்

இந்திய முஸ்லிம்கள் பல்வேறு நிலைகளில் ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கும் சூழ்நிலையில் ராக்கெட், அணு ஆயுதம், வல்லரசு என்று உச்ச நிலையில் இந்தியாவைக் கொண்டு சென்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு முஸ்லிமைப் பற்றி தவறாகப் பேசுவதைத் தவிர்ப்போம். மனம் போன போக்கில் எவரையும் முஷ்ரிக்காகவோ காஃபிராகவோ ஆக்கி அழகு பார்க்கும் விஷமக் கிருமிகளை அடையாளம் கண்டு தூர விலகி இருப்போம். இத்தகையோரிடம், இவர்களால் அநியாயமாக முஷ்ரிக் / காஃபீர் என இவ்வுலகில் அறிவிக்கப்பட்டவர்கள் மறுமையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77660

கலாம் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு, கலாமின் இறுதி ஊர்வலத்தைப் பார்த்தபோது  ஒவ்வொருவரும் அவர் செய்த‌ அரிய‌, சின்ன விஷயங்களை சொன்னபோது கண்களில் முட்டி அழுகையோடு கண்ணீர் வரக்காத்திருந்தன. இளகிய மனம் கொண்டவன் என்ற பிரஞ்ஞையால் அப்படி தோன்றுவதாக நினைத்திருந்தேன். ஆனால் சின்ன ஊர்களிலும் ஒவ்வொருவரும் ப்ளக்ஸ் வைத்து மெழுகுவர்த்தியை ஏற்றி அஞ்சலி செலுத்துவதும், குழந்தையிலிருந்து வயதானவர் வரை உள்ளவர்களின் கபடமற்ற அழுகையை பார்க்கும்போது இந்த துக்கம் எனக்கு மட்டுமல்ல என்று தோன்றியது. எப்போதும் அடாவடி செய்யும் ஆட்டோ டிரைவர்கள்கூட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77437

கூடங்குளமும் கலாமும்

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு, இந்த மாதக் காலச்சுவடு இதழில் அப்துல் கலாமைப் பற்றிக் கொஞ்சம் தரக்குறைவாகவே எழுதியிருந்தார்கள். காரணம் கூடங்குளம். நான் பல கட்டுரைகளைப் படித்தவரையில் இந்த அணு உலை பலவிதமான பாதுகாப்பான ஏற்பாடுகளுடனேயே கட்டப்பட்டுள்ளதாகப் படுகிறது. இந்திய அரசியலின் ஊழல், கட்டுரை எழுத்தாளனின் உள்நோக்கங்கள் என்ற காரணங்களால் நாம் சந்தேகப்பட்டாலும் ஒரு வகையில் இந்த அணு உலை நமக்கு நல்லதைத்தான் தரும் என்று நம்பத்தோன்றுகிறது. அதே வேளையில் இங்கு சமய அரசியல் காரணங்கள் தான் இந்தப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23111