Tag Archive: ‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி-1

‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 6

  6. முட்டையிலிருந்து வெளிவருவது யார்? சமீபத்தில் ஓர் உரையாடலில் தேவதச்சன் சொன்னார். ’நான் ஒரு அத்வைதி’ .நான் புன்னகையுடன் ‘எந்தப்பொருளில்?” என்றேன். ’நிஸர்கதத்த மகராஜ் எந்தப்பொருளில் அத்வைதியோ அந்தப்பொருளில்’ என்றார். வெற்றிலை வாய்குவித்து சோடாப்புட்டி வழியாக கண்கள் தெறிக்கச் சிரித்து “அத்வைதம் பத்தி ஒண்ணுமே தெரியாம இருக்கிற அத்வைதம்”. அவர் அதையும் ஒருவகை விளையாட்டாகவே அவர் சொல்கிறார். நிஸர்கதத்தர் வீரசைவ மரபினர். அவருடையது சிவாத்வைதம். மேலைத்தத்துவத்தின் கலைச் சொல்லை பயன்படுத்தினால் absolutist என்று சொல்ல வேண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81536

‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 5

  5. நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம் நாகர்கோயில் மதுரை நெடுஞ்சாலை எனக்கொரு தியான அனுபவத்தை அளிப்பதாக இருப்பது. நான் ஏழாவது வகுப்பு படிக்கும் போதுதான் முதல் முறையாக ஆரல்வாய்மொழிக் கணவாயை கடந்து தமிழக மையநிலத்திற்குள் வந்தேன். எங்களூரில் வானம் என்ற அனுபவத்தை பெறுவதற்கு ஏதாவது குன்றின்மேல் ஏறினால் தான் உண்டு. அதற்கேற்ற மரங்களற்ற மொட்டைப்பாறைக்குன்றுகளும் மிக அரிது. மரங்கள் மூடிய வானத் துண்டுகளைத்தான் சிறு வயதிலேயே பார்த்திருந்தோம். தொடுவானம் என்ற ஒன்று ஒரு போதும் கண்ணுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81531

‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 4

4. குருவிகள் போய்விட்ட நிசப்தம் ஒரு சுவாரசியமான மாற்றத்தை நாம் பெண்களிடம் பார்க்கலாம். கன்னியர் என்று ஆகி மணமாகி அன்னையாவது வரை அவர்களின் உடல் சார்ந்த தன்னுணர்வு ஒருவகை இறுக்கத்தை அசைவுகளில் நிறுத்தியிருக்கும். சூழல் பற்றிய உணர்வு காற்றை ஏற்கும் தீபச்சுடர் போல அவர் அசைவுகளில் எப்போதும் இருக்கும். நேர்விழியை விட ஓரவிழி கூர்மை கொண்டிருக்கும். தொடுகையைப்போல் பார்வையை உணரும் தன்மையை உடல் அடைந்திருக்கும். ஆனால் முதற்குழந்தை அவர்களை விடுவிக்கிறது. ஒரு முலையில் குழந்தை பாலுண்ண மறுமுலையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81515

‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 3

3 . பிரபஞ்சம் விழித்தெழுந்த இரண்டாம் நாள் 1988 ல் நான் காலச்சுவடு இதழில் சில கவிதைகளை எழுதியிருந்தேன். எனது கவிதைகள் அனைத்தும் புனைவெழுத்துக்கான பயிற்சிகளே என்று இன்று உணர்கிறேன். ஒரு கணத்தில், அல்லது துளியில் நின்று முழுமை கொள்ளும் தரிசனமோ உணர்வுநிலையோ அல்ல என்னுடையது. அன்று நான் உருவகங்களில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தேன் அது எனக்கு செவ்வியல் படைப்புகளில் இருந்த ஆர்வத்தின் விளைவு. கதேயையும் காளிதாசனையும் கம்பனையும் ஒரே விருப்போடு வாசித்துக் கொண்டிருந்த தீவிரமான நாட்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81464

‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 2

2. அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள் 1986ம் வருடம் குற்றாலத்தில் கலாப்ரியா ஏற்பாடு செய்திருந்த கவியரங்கு ஒன்றுக்காக நான் காசர்கோடிலிருந்து வந்திருந்தேன். தமிழகத்தின் அத்தனை கவிஞர்களையும் ஒரே இடத்தில் சந்திப்பதற்கான ஒரு நிகழ்வாக அது இருந்தது. பூசல்கள், வம்புகள், கேலிகள், திடீர்நட்புகள், குழுபிரிதல்கள் என அன்று அது முக்கியமான ஒரு கொண்டாட்டம். இன்று வரை தொடரும் என் நெருக்கமான நட்புகள் பல அன்று அமைந்தவை. யுவன் சந்திரசேகரையும் தேவதச்சனையும் அன்றுதான் நான் சந்தித்தேன். கையில் வெற்றிலைப் பெட்டி ஒன்றை வைத்துக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81460

‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 1

1. உலகிலிருந்து ஒரே ஒரு புகையிலைப்பொட்டலம் கால் சகன் எழுதிய காண்டாக்ட் என்னும் நாவலில் கதாநாயகி எல்லி அரோவே விண்ணிலிருந்து அனுப்பப்பட்ட செய்திகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எந்திரம் ஒன்றில் ஏறி, பிரபஞ்சத்தில் இருக்கும் காலத்துளை ஒன்றின் ஊடாக பிரபஞ்சத்தின் எல்லைகளுக்குப் பயணமாகிறாள். இந்த விண்வெளியை உருவாக்கி நிலை நிறுத்தி மறு ஆக்கம் செய்யும் முன்னோடிகளான பிரபஞ்ச சக்திகளுடன் உரையாட அவளுக்கு வாய்க்கிறது. அதன் பின் அவள் திரும்பி வருகிறாள். அவள் என்ன உணர்ந்தாள்?கால் சகன் அதை இப்படி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81360