Tag Archive: அதர்வம்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 5

[ 8 ] அந்தியிருளத் தொடங்கிய வேளையில் தண்டகாரண்யத்தின் நடுவே ஓடிய மதுவாகினி என்னும் சிற்றோடையின் கரையில் உருண்ட மலைப்பாறை ஒன்றின்மேல் அமர்ந்திருந்த பிச்சாண்டவர் தன்னருகே ஈச்ச ஓலை பின்னிய தழையாடையை இடையில் அணிந்து தரையில் கைகட்டி அமர்ந்திருந்த வைசம்பாயனனிடம் சொன்னார். “வடக்கே இன்று அந்த குருநிலை தாருகவனம் என்றழைக்கப்படுகிறது. அதில் அத்ரிமுனிவர் நிறுவிய கிராதமூர்த்தியின் சிவக்குறியைச் சூழ்ந்து கல்லால் ஆன ஆலயம் ஒன்று எழுந்துள்ளது. அறுவகை சைவநெறியினருக்கும் அவ்விடம் முதன்மையானது. அதனருகே ஓடும் சுகந்தவாகினியில் நீராடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/91483/

கதைகள்-கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு. வணக்கம். தங்கள் அதர்வம் வாசித்தேன். காட்சிகளைக் கண்முன் நேரடியாக நிறுத்தியுள்ளீர்கள். யாகசாலை கண்முன் நிற்கிறது. அதர்வ வேதத்தினைப் பற்றிய செய்திகளும் அருமையாகத் தொகுத்துள்ளீர்கள். எனக்கு ஒரு சில சந்தேகங்கள் இதில் உள்ளன . ஒன்று மஹா பாரதக்கதைப்படி துருபதன் குரு குலம் அழிய வரம் வேண்டினானா அல்லது அர்ஜுனனை மணக்க மகள் வேண்டினானா. இரண்டு துருபதன் செய்வித்தது அபிசார வேள்வி என்பதற்கு மாபாரதத்தில் குறிப்புகள் உண்டா. அன்புடன் கனகராஜ் மிசோரம் அன்புள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/14472/

அதர்வம்-கடிதம்

அன்பின் ஜெ.எம்., துருபதன் கன்னியின் பிறப்பு பற்றி ஓரளவு படித்திருந்தாலும் இத்தனை உக்கிரமாக-அழிவுக்காகவே ஆக்கப்படும் ஒரு சக்தியின் தோற்றுவாயை,அதன் பின்னணியைத் தங்கள் எழுத்தில்..வருணனையில் விரிவாகப் படிக்கையில் ஒருகணம் மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றுவிட்டன. அதர்வம் (அதர்வண வேதம்?)அழிவுக்கு உதவுகிறது என்று தெரிந்தும் அதை விடாமல் பயன்படுத்த முயலுவது – பயன்படுத்துவது…அணு சக்தியைப்போல அழிவின் மீது மனிதனுக்கு உள்ள மாயக் கவர்ச்சிகளில் ஒன்று எனக் கொள்ளலாமா..(பத்மவியூகத்தில் போர் பற்றி நீங்கள் சொன்னது போல..) வஞ்சம் தீர்க்கும் வெறி தன் சுய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/14211/

அதர்வம்- ஒருகடிதம்

ஆசிரியருக்கு, புலன்கள் உணரும் அழகெல்லாம் போகத்தின் விதை விரிவே. போகங்களெல்லாம் தீதின் விதை விரிவே. தீது வளர்தலின்,பரவலின்,பன்னிற முகம் காட்டலின் இயக்கு சக்தி. தீது உயிரினத்தின் அத்தியாவசியம்,பிரபஞ்சத்தினது கூட. வேகமும் எதிர்பாராத் திடீர் திருப்பமுமாக அறிமுகமாகும் ஒளியின்,அழகின்,அழிவின் வடிவாக ஊழில் பிறக்கும் திரௌபதி. தட்டில் அவளின் முகம் பார்க்கும் ஆவலில் கதா பாத்திரங்களின் தோள்களின் பின்னால் எம்பிக்கொண்டு இருக்கை நுனியில் வாசகன். ஏற்கனவே துருபதன் யாஜனை சந்திக்கும் முன் (அந்த மனிதர் ஓர் உலர்ந்த வவ்வால் போலிருந்தார்) …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/14206/

அதர்வம்-கடிதம்

அதர்வம் கதை உங்கள் மகாபாரதக்கதைகளில் உள்ள தத்துவ தரிசனமும் அழகியலும் கலந்த படைப்பு. கதையின் எடுப்பும் போக்கும் உருவாக்கி வந்த எதிர்பார்ப்பு சட்டென்று திசைதிரும்பி அதிரச்செய்தது. குரோதத்தின் மனித உருவாகவும் அழிவுதேவதையாகவும் ஒரு குழந்தை என்னும்போது நம் மனதில் எழக்கூடிய சித்திரமே வேறு. ஆனால் கதையில் அதி திறந்துகொண்டதும் என்ன இது என்ற திகைப்பும், ஆமாம் அப்படித்தானே என்ற எண்ணமும், தொடர்ந்து பலவகையான மனக்கொந்தளிப்புகள்ம் ஏற்பட்டன. அழிவுதேவதைதான். ஆனால் பேரழகு கொண்டவள். அதுகூட பரவாயில்லை. அழிவின் அழகு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/14032/