Tag Archive: அண்டப்பொருள்

மரபும் மறு ஆக்கமும்

ராமனும் ராவணனும் போர்புரிகிறார்கள். டிஜிட்டல் படம்

அன்புள்ள ஜெ நீங்கள் வெண்முரசுநாவலில் இந்து தொன்மங்களை இன்னும்பிரம்மாண்டமாக ஆக்கிச் சொல்வதைப்போலத் தோன்றுகிறது. வராகஅவதாரத்துடன் ஹிரண்யாக்‌ஷன் மோதுவதை வண்ணக்கடல் நாவலில் சொல்லியிருக்கும் இடம் உதாரணம். அங்கே அந்தப்பன்றியை cosmic darkness ன் அடையாளமாக காட்டிவிடுகிறீர்கள் விண்ணையும் மண்ணையும் வென்று நிகரற்றவனாக அலைந்த ஹிரண்யாக்‌ஷன் ஒருமுறை விண்கடல்மேல் ஒளித்தேரில் செல்லும்போது எதிரில் இருண்ட பெருஞ்சுழி ஒன்றைக் கண்டான். அவன் விழிகளுக்கு அது ஒரு பெரும்பன்றி என்று தோன்றியது. அதன் சுழிமையம் பன்றியின் கண்கள் போல மதம்பரவிய இருளொளியாக மின்னியது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62965/