Tag Archive: அணு மின் உலை

கூடங்குளம் இரு கடிதங்கள்

Dear J, I feel you have not considered all facts about the issue and got swayed by mass movement. 1. Safety Aspects during Normal Times : Nuclear reactors are extremely safe to operate. BARC reactors are about 50 years old, scientists and engineers have joined and retired after having spent their entire working life there. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21263

கூடங்குளம் அனுபவப்பதிவு

21-09-2011 காலை மீண்டும் கூடங்குளம் செல்வதாக முடிவெடுத்தேன். சென்றமுறை சென்றபோது கூடங்குளத்தில் இருந்து இடிந்தகரைக்குப் பேருந்து விடப்படுவதில்லை என அறிந்து வெயிலில் வெந்து நடந்துசெல்ல நேரிட்டது. ஆகையால் பார்வதிபுரத்தில் இருந்து ஒரு டாக்ஸி பிடித்துச் செல்ல முடிவெடுத்தேன்.டாக்ஸி இருப்பதனால் அ.கா.பெருமாளை அழைத்துப்பார்த்தேன். அவர் சென்னையில் இருப்பதாகச் சொன்னார். வேதசகாயகுமார் வருவதாகச் சொன்னார். இருவருமாகக் கிளம்பினோம்.   பத்துமணிக்கு கூடங்குளம் தாண்டிச்சென்றோம். கூடங்குளத்தில் வழக்கத்தைவிட அதிகமான போலீஸ்பாதுகாப்பு. படைபடையாக சீருடையணிந்த காவலர்கள் இறக்கப்பட்டிருந்தார்கள். எங்கள் வண்டியை அவர்கள் ஒன்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21154

ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை

அணுசக்தியில் மின்சாரம் தயாரிப்பது உலகளவில் மிகவும் இலாபகரமானதாக கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கடைசியாக அமைக்கப்பட்ட10 அணு உலைகளும் திட்டமிடப்பட்டதைவிட 300% அதிக செலவில் அமைக்கப்பட்டுள்ளன. கோடி கோடிகயாகக் கொண்டு கொட்டியும் அணுசக்தியிலிருந்து இந்தியா பெறும் மின்சாரத்தின் அளவு கேவலம் 2.7% மட்டுமே. இந்தியாவில் எந்த அணு உலையுமே அது அமைக்கப்பட்ட முழுதிறனுக்கும் உற்பத்தியைச் செய்யவில்லை. திட்டங்கள் துவங்குகையில் எதிர்பார்க்கப்படும் மின்சார அளவுகள் எல்லாம் வெறும் பேப்பர்களிலேயே எழுதப்பட்டுள்ளன. ஆக இந்தப் பெரும் திட்டங்கள் யார் யாருக்கோ இலாபங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21121

கூடங்குளம் கடிதங்கள்

அன்பின் ஜெமோ.., புனைவிலக்கியம் தவிர்த்த, அனேக உங்களது கருத்துக்களில் இருந்து என் கருத்து மாறுபட்டு இருந்து வந்துள்ளது. முதல்முறையாக கூடங்குளம் மக்களின் போராட்டம் பற்றிய உங்கள் கட்டுரை என் எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருப்பதைப் பார்க்கும் போது மகிழ்கிறேன். மேலை நாடுகள் தங்களின் லாப நோக்கத்திற்காக, வளரும் நாடுகளிடம் அவர்களின் தோல்வியுற்ற, தொழில்நுட்பத்தைத் திணித்து வருகிறார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன். செர்னோபிள் சம்பவத்திற்கு பிறகும், அது ருஷ்யாவில் இருந்து இறக்குமதி ஆகிறது என்ற காரணத்திற்காக அப்போதெல்லாம்(இப்போதும்!?) வாயைத்திறக்காமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21106

அணுமின்சாரமின்றி வேறு வழி இல்லையா?

அன்புள்ள ஜெ, கூடங்குளம் அணு உலையை மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீங்கள் எழுதியதை வாசித்தேன். நம்முடைய நாடு தீவிரமான எரிபொருள்பற்றாக்குறையால் பிதுங்கிக்கொண்டிருக்கிறது என நீங்களும் அறிவீர்கள் அல்லவா? இன்றைய சூழலில் அணுமின்நிலையம் அன்றி வேறு என்ன வழி இருக்கிறது? நீர்மின்சாரம் போன்றவற்றை நாம் முடிந்தவரை செய்துவிட்டோம். அனல் மின்சாரத்துக்கு நம்மிடம் எரிபொருள் இல்லை. மின்சாரம் இல்லாமல் என்ன செய்ய முடியும்? சாமிநாதன் அன்புள்ள சாமிநாதன், நிபுணர்கள் புள்ளிவிவரங்களுடன் பேசுவதை விட்டுவிட்டு சாதாரணமான குடிமக்களாக இதைப்பற்றிப்பேசுவோம். எரிபொருள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21102

கூடங்குளம்

இந்திய அரசு சுயநலமும் ஆணவமும் கொண்ட அதிகாரிகளாலும், அறியாமையும் பணவெறியும் கொண்ட அரசியல்வாதிகளாலும் ஒருவரை ஒருவர் பயன்படுத்திக்கொண்டு, ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டு நடத்தப்பட்டுவருவது என்பதற்கான தூலமான ஆதாரங்களில் ஒன்று கூடங்குளம் அணுமின்நிலையம். 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள செர்னோபில் நகரத்தில் இருந்த அணு உலை விபத்துக்குப்பின்னர் அந்த சூத்திரம் கொண்ட எல்லா அணு உலைகளையும் மூட ருஷ்யா முடிவெடுத்தபோது அதில் ஒன்றை இந்தியாவுக்கு பலகோடி ரூபாய் விலைக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21066