Tag Archive: அஞ்ஞாடி.

பூமணிக்கு சாகித்ய அக்காதமி

நவீனத்தமிழிலக்கியத்தின் முதன்மைப்படைப்பாளிகளில் ஒருவரான பூமணி எழுதிய அஞ்ஞாடி என்ற நாவலுக்கு இவ்வருடத்திற்கான சாகித்திய அக்காதமி அளிக்கப்பட்டிருக்கிறது. எழுபதுகளில் இறுதியில் எழுதத்தொடங்கிய பூமணி தமிழின் இயல்புவாத அழகியலை முன்னெடுத்தவர். அவரது பிறகு என்ற நாவல் அதன் மிதமான இயல்புச்சித்தரிப்பு காரணமாக பெரிதும் விரும்பப்பட்டது. வெக்கை, நைவேத்யம் போன்றவை குறிப்பிடத்தக்க பிற ஆக்கங்கள் கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை தேசியதிரைப்பட நிறுவனத்திற்காக எடுத்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது.. பூமணியைப்பற்றி ஜெயமோகன் எழுதிய ‘பூக்கும் கருவேலம்’என்ற நூல் வெளியிடப்பட்டது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68418

அஞ்ஞாடி ஒரு வாசக அட்டவணை

பூமணியின் அஞ்ஞாடி நாவலை வாசிப்பதற்கும் நினைவில் கொள்வதற்குமான ஒரு வழிகாட்டிக்கட்டுரையை எஸ்.ரங்கசாமி எழுதியிருக்கிறார் பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/36023

அஞ்ஞாடி ஒரு கடிதம்

அஞ்ஞாடி வாசித்துக் கொண்டு இருக்கிறேன். நாவல் அபாரமான ஒரு வாசிப்பு அனுபவம். ஆண்டி மற்றும் மாறி என்று இரண்டு நண்பர்களின் வாழ்க்கையில் இருந்து தொடங்கும் நாவல். மெல்ல மெல்லப் பல தளங்களில் விரிந்து செல்கிறது. நுட்பமான வாழ்க்கைத் தருணங்கள் , கிராமிய வாழ்க்கையில் கிடைக்கும் அங்கதம், இயற்கைக் காட்சிகள், அபாரமான சொலவடைகள். நாவல் முழுதும் லயிக்கும் பாடல்கள், கவித்துவமான மொழியில் எழுதப்பட்டுள்ள பாடல்கள். நாவலின் பலவீனம் அது மாக்ரோ வரலாறுக்குள் செல்லும் இடங்கள் வெறும் செய்தியாக மாறிவிடுகிறது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35142

அஞ்ஞாடி மதிப்புரை

‘அஞ்ஞாடி’யைப் படித்து முடித்தவுடன் தோன்றிய மனப்பதிவே இது. அசைபோட அசைபோட அஞ்ஞாடியின் பல கூறுகளும் மனதில் எழுந்தபடியேதான் இருக்கப்போகின்றன. கூளத்தைக் கொஞ்சமாகப் பிடுங்கிப்போட்டு படிப்பவனை ரெம்ப நாளைக்கு அசைபோட வைக்கும் பூமணி, அஞ்ஞாடி என்ற போரைத்தூக்கி நம் முன் போட்டு, அசைபோடும் மாடாக வாசகனை மாற்றும் கலையில் மீண்டும் வென்றிருக்கிறார். பூமணியின் அஞ்ஞாடி ஒரு மதிப்புரை அஞ்ஞாடி – வரலாற்றின் புதுமொழி

Permanent link to this article: https://www.jeyamohan.in/26042

அஞ்ஞாடி- ஒரு மதிப்புரை

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம், பூமணியின் “அஞ்ஞாடி” நாவலை முன்வைத்து நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை கேரவான் இதழில் வெளிவந்துள்ளது (சுட்டி கீழே தரப்பட்டுள்ளது). http://caravanmagazine.in/Story.aspx?Storyid=1275&StoryStyle=FullStory இது தொடர்பாக பூமணியின் சில புகைப்படங்கள் தேவைப்பட்டது குறித்து நான் தங்களுக்கு எழுதியது நினைவிருக்கலாம். தங்கள் உதவிக்கு மிக்க நன்றி. இப்படிக்கு, கல்யாணராமன் முட்டுக்காடு — N Kalyan Raman

Permanent link to this article: https://www.jeyamohan.in/24697

பூமணியின் புது நாவல்

க்ரியா வெளியீடாகப் பூமணியின் புதிய நாவலான அஞ்ஞாடி… ஜனவரி 2012இல் வெளியாக இருக்கிறது .1200 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ. 925. ஆனால் முன்வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் அஞ்ஞாடி… நாவலைச் சலுகை விலையில் அஞ்சலில் பெற ரூ. 750 செலுத்திப் பதிவுசெய்துகொள்ளலாம். அப்படிப் பதிவுசெய்தவர்களுக்கு நாவல் வெளியானதும் அஞ்சலில் அனுப்பிவைக்கப்படும் என க்ரியா பதிப்பகம் தெரிவிக்கிறது. முன்வெளியீட்டுத் திட்டத்தின்படி நேரில் வாங்க விரும்புபவர்கள் க்ரியாவிடம் ரூ. 725 செலுத்திப் பதிவுசெய்துகொள்ளலாம். அப்படிப் பதிவுசெய்தவர்கள் புத்தகம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22563