Tag Archive: அஞ்சலி

சு.கிருஷ்ணமூர்த்தி நினைவஞ்சலி

அன்புடையீர் வணக்கம் கொல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நாளை(12.09.2014) மாலை 8மணி அளவில் தி.ந்கர், வெங்கட்நாராயணா சாலை, தக்கர்பாபா வித்யாலயா, வினோபா அரங்கில் நடைபெற உள்ளது அனைவரும் வருக [email protected]

Permanent link to this article: https://www.jeyamohan.in/61560

அஞ்சலி. சு கிருஷ்ணமூர்த்தி

வங்கமொழியில் இருந்து தமிழுக்கு ஏராளமான முக்கியமான புனைவிலக்கியங்களையும் கட்டுரைகளையும் மொழியாக்கம் செய்த மூத்த மொழிபெயர்ப்பாளரான சு.கிருஷ்ணமூர்த்தி இன்று சென்னையில் காலமானார். சிறிது காலமாகவே உடல்நலமின்றி இருந்தார் தமிழில் வங்க இலக்கியங்கள் பெரிய பாதிப்பைச் செலுத்தியிருக்கின்றன. பாரதி, த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, அ.கி.கோபாலன், ஆர் ஷண்முகசுந்தரம் போன்றவர்கள் முன்னொடி மொழிபெயர்ப்பாளர்கள். சமகாலத்தில் அவர்களின் இடத்தை நிறைத்தவர் சு கிருஷ்ணமூர்த்தி. அவரது மொழியாக்கத்தில் வந்த நீலகண்டப்பறவையைத் தேடி, கொல்லப்படுவதில்லை போன்ற நாவல்களை முக்கியமான ஆக்கங்களாகச் சொல்லலாம். இறுதிவரை மொழியாக்கம் செய்துகொண்டே இருந்தவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61342

மகிழவன்

என் இணையதளத்தில் தொடர்ந்து வாசகர் கடிதங்கள் எழுதும் வாசகர்களில் பலர் ஒருகட்டத்தில் நின்றுவிடுவதுண்டு. அவர்களில் மிகச்சிலரே என்னிடமிருந்து விலகிச்சென்றுவிட்டவர்கள் என்று நான் அறிவேன். பிறர் தொடக்கநிலையில் எழுதிய கடிதங்களில் இருந்து மேலெழுந்து விட்டவர்கள். கேட்பதற்கும் சொல்வதற்கும் ஏதுமில்லாத நிலையில் என் எழுத்துக்களுடன் மட்டும் மானசீக உறவுள்ளவர்கள் மகிழவன் அப்படிப்பட்ட வாசகர். அவரது கடிதங்கள் பல என் இணையதளத்தில் வெளியாகியிருக்கின்றன. திருமணம் ஆன செய்தியை அறிவித்திருந்தார். பின்னர் கடிதங்கள் குறைந்தன. குழந்தை பிறந்த செய்தியை, உடல்நலச்சிக்கல் சற்று இருந்ததை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60723

உடலிலக்கியம்

  அன்புள்ள நண்பர்களே, இனிய தோழி ஒருத்தியை நினைவுகூரும்வகையில் இங்கே நாம் கூடியிருக்கிறோம். கீதா ஹிரண்யன் தன் இரண்டு குழந்தைகளையும் அறிவுலகிலும் தோழனாக அமைந்த கணவரையும் இளம் வயதிலேயே பிரிந்து மறுகரைக்குச் சென்றுவிட்டிருக்கிறார். அவருடைய பிரியத்துக்குரிய எழுத்தாளன் என்ற வகையில் நான் இங்கே பேச அழைக்கப்பட்டிருக்கிறேன். கீதாவை நான் சந்தித்தது ஆற்றூர் ரவிவர்மாவின் இல்லத்தில். என்னைக் கண்டதுமே சிறுமிகளுக்குரிய ஆர்வத்துடன் என்னை நோக்கி வந்து படபடப்பும் சிரிப்புமாக தனக்குப் பிடித்தமான எழுத்தாளர் நான்தான் என்று சொன்னார். மலையாளத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/866

நம்மாழ்வார், அஞ்சலி

1998ல் கோவையில் ஒரு விழாவில் நான் இயற்கைவேளாண் அறிஞர் நம்மாழ்வாரைச் சந்தித்தேன். எஸ்.என்.நாகராஜனும் ஞானியும் பங்கெடுத்த நிகழ்ச்சி அது. இயற்கைவேளாண்மை பற்றிப் பேசிக்கொண்டிருந்த நம்மாழ்வார் என்னிடம் “உங்களூரில் வாழை விவசாயம் இன்று ரசாயனமயமாகிவருகிறது. நீரை அதிகமாகத் தேக்கும் தாவரங்கள் ரசாயனத்தையும் அதிகளவில் உறிஞ்சி நமக்கு அளிக்கின்றன. ரசாயனநெல்லைவிடவும் அபாயகரமானது ரசாயன வாழை’ என்றார் நான் ‘ஆமாம், வாழைக்கு பூச்சிமருந்து அடிக்கவேண்டும் என்பதையெல்லாம் வாழைகள் நடுவே பிறந்து வளர்ந்த நான் கேள்விப்பட்டதேயில்லை’ என்றேன். நம்மாழ்வார் என்னை நோக்கிச் சிரித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43916

அஞ்சலி-நெல்சன் மண்டேலா

​மட்டிபாவை பற்றிய பிரமாதமான புகைப்பட தொகுப்பு மற்றும் காணொளி – கூகிள் தயாரிப்பு ​http://archives.nelsonmandela.org/exhibit/the-last-warder/gRnrrnB2?position=0%2C-1 பிரசாத் சேலம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/42536

காந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)

ஒரு தனிமனிதனின் உள்ளுணர்வு ஒரு தேசத்தை வழி நடத்தலாகாது இறுதிச்சடங்கிற்கு பேரா.பத்மநாபன் வந்திருந்தார். அன்று வந்திருந்த சுந்தர ராமசாமியின் நண்பர்களில் அவரே மிகவும் மூத்தவர், நெடுங்கால நண்பர். சுந்தர ராமசாமியின் முதிய நண்பர்களில் எம்.எஸ் ஆரம்பத்தில் காத்துவந்த உறுதியை இழந்து பிறகு மிகவும் அழுது கலங்கிவிட்டார். ஆற்றூர் ரவிவர்மா அஞ்சலி செலுத்த திரிச்சூரில் இருந்து சிரமப்பட்டு வந்திருந்தார். முழுக்க முழுக்க நிதானமாகவே இருந்தார், ஆனால் அவர் கலங்கிவிட்டார் என அவரை மிக நெருங்கி அறிந்த என்னால் உணர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18

குருபீடம்

நான் பத்மநாபபுரத்தில் வசிக்கையில் பேராசிரியர் ஜேசுதாசனைச் சந்திக்க என்னை இலக்கிய விமர்சகர் வேதசகாயகுமார் அழைத்துக்கொண்டுசென்றார். வேதசகாயகுமாரின் ஆசிரியர் அவர். திருவனந்தபுரம் பல்கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராக இருந்து ஓய்வுபெற்றுத் தன் மனைவியின் சொந்த ஊரான புலிப்புனத்தில் ஒரு ஆங்கிலப்பள்ளி நடத்திக்கொண்டிருந்தார். பழைய ஓட்டுவீடு. சுற்றிலும் ரப்பர்த்தோட்டம். பேராசிரியர் அன்பளிப்பாகக் கொடுத்த இடத்தில் கட்டப்பட்ட ஒரு குடிநீர்த்தொட்டிக்கு கீழே அவரது வீடு இருந்தது. அதுதான் அடையாளம். நாங்கள் சென்றபோது பேராசிரியர் யாரோ ஒரு கிராமவாசியிடம் ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்தார். ‘வாடே’ என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27

அஞ்சலி: ம.ரா.போ.குருசாமி

சங்க இலக்கியத்தில் எனக்குப்பிடித்த கவிஞர்களில் முதல்வர் கபிலர்தான். நான் வாழும் மழைக்காட்டுச்சூழலை எழுதியவர் அவர். ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் கபிலம் என்ற நூலைக் கண்டேன். கபிலர் எழுதிய எல்லாப் பாடல்களையும் ஒரே நூலாக உரையுடன் தொகுத்திருந்தார்கள். அதைத் தொகுத்தவர் பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்கள். அவ்வாறுதான் அவர் எனக்குப்பழக்கமானார். அதன்பின் அவரது பலநூல்களை வாங்கி வாசித்தேன். ஆனால் நேர்த்தொடர்பு ஏற்படுவது மேலும் கொஞ்சநாள் கழித்து. என் மகளைப்பற்றி நான் எழுதிய ’ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு’ என்ற தொடர் கோவையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30915

அஞ்சலி: பாரி காமனர்

எண்பதுகளில் வடகேரளத்தில் இருந்து வெளிவந்த சூசீமுகி என்ற சூழியல் சிற்றிதழ் என்னுடைய பிரக்ஞை உருவாக்கத்தில் முக்கியப்பங்கு வகிப்பது. சைலண்ட் வாலியைக் காப்பதற்கான போராட்டத்தில் அதன் பங்களிப்பு முக்கியமானது. பின்னாளில் இந்திரா இறந்தபோது ‘இந்திராகாந்தியின் போஸ்ட் மார்ட்டம்’ என்ற கட்டுரையை வெளியிட்டமைக்காக அதன் ஆசிரியர் தாக்கப்பட்டார். இதழ் நின்று போனது. சூசீமுகி இதழில்தான் பாரி காமனர் எனக்கு அறிமுகமானார். பாரி காமனரின் சில கட்டுரைகளை ஆரம்பத்தில் துண்டுப்பிரசுரங்களாக வாசித்திருக்கிறேன். சிலவற்றை நானே சூழியல் அமைப்புகளுக்காக மொழியாக்கமும் செய்திருக்கிறேன். சூழியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30880

Older posts «

» Newer posts