Tag Archive: அஞ்சலி

அஞ்சலி – கவிஞர் திருமாவளவன்

நண்பர் திருமாவளவன் இன்று டொரொண்டோவில் காலமானார் என்று செய்தி வந்திருக்கிறது. திருமாவளவன் டொரொண்டோவில் என் நட்புக்குழுமத்தில் நெருக்கமானவராக இருந்தார். 2001ல் நான் முதல்முறையாக கனடா சென்றபோதுதான் அவரை நேரில் சந்தித்தேன். அதற்குமுன்னர் அவருடைய கவிதை ஒன்றைப்பற்றி ஒரு கடிதம் எழுதியிருந்தேன். தமிழில் நான் விரும்பும் அரிய கவிஞர்களில் ஒருவராக இருந்தார் திருமாவளவன் ஈழ அகதியாக இந்தியாவில் சிலகாலம் இருந்தார். அப்போது கேரளத்துடன் அவருக்கு நெருக்கமான உறவிருந்தது. கேரளம் பற்றிய நினைவே அவர்முகத்தை மலரச்செய்வதைக் கண்டிருக்கிறேன். பலமுறை அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79294

அஞ்சலி ஆலிவர் சாக்ஸ்

ஆலிவர் சாக்ஸை நான் நித்ய சைதன்ய யதியிடமிருந்து அறிமுகம் செய்துகொண்டேன், 1997ல். அப்போது அவர் பொதுவான அறிவுலகில் பரவலாக அறியப்படாத ஓர் ஆளுமை. அன்று இலக்கியச்சூழலில் ரோலான் பார்த்தின் அமைப்புவாதமும் தெரிதாவின் பின்அமைப்புவாதமும் பெரிதாகப்பேசப்பட்டன. படைப்பு, அறிதல் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டடையப்பட்டது என்ற தொனி சில பேராசிரிய மட்டங்களில் நிலவியது. அதைப்பற்றி நான் நித்யாவிடம் உரையாடியபோது ஆலிவர் சாக்ஸை அறிமுகம் செய்தார் சாக்ஸ் ஓர் நரம்பியலாளர். மூளை எப்படி அறிகிறது, அறிவைத் தொகுத்துக்கொள்கிறது, அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78314

அஞ்சலி- குவளைக்கண்ணன்

என் பழைய நண்பரும் கவிஞருமான குவளைக்கண்ணன் [ரவி] மறைந்தார். நான் தருமபுரியில் இருக்கையில் சேலத்தில் இலக்கியச்சுற்றம் ஒன்று இருந்தது. குப்புசாமி, கணபதி சுப்ரமணியன். க.மோகனரங்கன் போன்றோருடன் குவளைக்கண்ணனும் அதில் இருந்தார். மாதமொருமுறை சந்திப்போம். இலக்கியம் அரட்டை என்று மகிழ்ச்சியான நாட்கள் அவை பின்னர் காலச்சுவடு இதழ் சார்பில் நடத்தப்பட்ட இலக்கியச் சந்திப்புகளில் அவரை சந்திக்கமுடிந்தது. பொதுவாக நக்கலும் கிண்டலுமாகப் பேசுபவர்.அவரது ஆதர்ச எழுத்தாளர் சு ஜி நாகராஜன். பின்னர் அவர் தன்னை காலச்சுவடின் பகுதியாக வலுவாக உருவகித்துக்கொண்டமையால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75393

அஞ்சலி கோபுலு

வாரப்பத்திரிகைகளின் பொற்காலத்தில் வாழ வாய்ப்பு கிடைத்தவர்கள் கோபுலுவும் சிற்பியும். அன்றைய அச்சுவடிவில் மிகச்சிறந்த ஓவியமுறை என்பது கோட்டோவியங்கள். அதில் அற்புதங்களை நிகழ்த்த அவர்களுக்கு சாத்தியமாகியது கோபுலு கலங்கரைத்தெய்வம் [துரோணன் என்ற பெயரில் புஷ்பா தங்கத்துரை என்ற ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய நாடகத்தொடர்] ஆலவாய் அழகன்[ஜெகசிற்பியன்] தொடர்களுக்கு வரைந்த ஓவியங்களை இன்றும் நினைவுகூர்கிறேன். வெறும் ஓவியங்கள் அல்ல அவை. ஒரு பண்பாட்டின் இறந்த காலத்தை மீட்டுக்கொண்டுவந்தவை கரிகால்சோழன் தன் அமைச்சர்களுடன் தரையில் சப்பணமிட்டு அமர்ந்திருக்கும் அரச சபையும் கல்லால் ஆன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74865

அஞ்சலி – எஸ்.பொ

ஈழ இலக்கியத்தின் முதன்மைப்படைப்பாளிகளில் ஒருவரான எஸ்.பொன்னுத்துரை ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நவம்பர் 26-ஆம் தேதி இரவு 11 மணிக்கு காலமானார். அவருக்கு என் அஞ்சலி. ஈழ இலக்கியத்தின் கலகக்குரலாக ஒலித்தவர் எஸ்.பொ. அன்று ஈழ இலக்கியத்தை மூடியிருந்தது கைலாசபதி, சிவத்தம்பி இருவராலும் முன்வைக்கப்பட்ட முற்போக்கு எழுத்தின் முன்வடிவம். அதுவன்றி வேறு எழுத்தே இல்லை என்ற நிலை. அதையொட்டி செய்யப்பட்ட போலி எழுத்துக்களின் பெருக்கத்தை மீறி உண்மையான உணர்ச்சிகள் இலக்கியத்தில் இடம்பெறவே முடியாத சூழல். இடம்பெற்றாலும் அவை ‘அரசியல்சரி’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66446

அஞ்சலி: செல்வ கனகநாயகம்

டொரொண்டோ பல்கலை கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியரான செல்வ கனநாயகம் 23- 11-2014 அன்று மாண்ட்ரியலில் காலமானார். டொரொண்டோவில் இருந்து உஷா மதிவாணன் கூப்பிட்டு செய்தியைச் சொன்னபோது எப்போதும் மரணச்செய்திகள் உருவாக்கும் மரத்த தன்மையையே அடைந்தது மனம். அப்படியா அப்படியா என்று மட்டும் கேட்டுக்கொண்டிருந்தேன் 2000த்தில் நான் முதல்முறையாக கனடா சென்றபோது செல்வ கனநாயகத்தைச் சந்தித்தேன். அ.முத்துலிங்கத்தின் நண்பராக. டிம் ஹார்ட்டன் காபி நிலையத்தில் நிகழ்ந்த நீண்ட இலக்கியச் சந்திப்புகளில் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் நடந்த பொதுச்சந்திப்புகளில் பல கேள்விகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66351

அஞ்சலி -ராஜம் கிருஷ்ணன்

ராஜம் கிருஷ்ணன் என்ற பெயர் நான் கல்லூரி புகுமுக வகுப்பில் நுழையும்போது அறிமுகமானது. மார்த்தாண்டம் கிறித்தவக்கல்லூரியின் நூலகம் மிகப்பெரியது. அதன் நூல்பட்டியலை ஐநூறு பக்கம் கொண்ட ஒரு பெரிய நூலாக அச்சிட்டு கையில் தருவார்கள் அன்று. அந்த நூலே எனக்கு ஒரு பெரிய இலக்கிய அறிமுகத்தை அளித்தது. அனேகமாக தினமும் அந்த நூலை வாசிப்பேன். அகர வரிசைப்படி ஆசிரியர் பெயர்களுடன் நூல்களின் தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், நூல்கள். அந்த வயதில் அத்தனை பெயர்கள் பெரும் மனஎழுச்சியை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63961

அஞ்சலி பொள்ளாச்சி நா.மகாலிங்கம்

விஷ்ணுபுரம் நாவலின் வாசகராகத்தான் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்கள் 1998 ஜனவரியில் எனக்கு அறிமுகமானார். அவர் எனக்கு எழுதிய நீண்ட கடிதம் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவர் தமிழகத்தின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவர் என எனக்குத்தெரியும். ஆனால் இலக்கிய ஆர்வம் கொண்டவர் என்பது தெரியாது. அதன்பின்பு அவரைப்பற்றி அறிந்துகொண்டேன். விஷ்ணுபுரம் இருநூறுபிரதிகளுக்குமேல் வாங்கி பலருக்கும் அன்பளிப்பாக அளித்திருக்கிறார். அதைப்பற்றி பேசியிருக்கிறார். அவரது நிறுவனங்களில் என் நூல்கள் நிறையவே இருக்கும். விஷ்ணுபுரம் பற்றி தொடராக ஏழு கடிதங்கள் எழுதினார். அதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63131

மாண்டலின் ஸ்ரீனிவாஸ், சோதிப்பிரகாசம்

மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பற்றிய ஒரு நல்ல அஞ்சலிக்கட்டுரை. ஸ்ரீனிவாஸ் மறைந்த செய்தியை, குறிப்பாக ஈரல் பிரச்சினை என்று கேட்டபோது குடியோ என்றுதான் எனக்கும் தோன்றியது. ஏனென்றால் நான் வழிபடும் இரு இசைக்கலைஞர்களை பலமுறை நட்சத்திர விடுதிகளில் உச்சகட்ட போதையில் கண்டிருக்கிறேன். ஒருவர் என் அறைவாசலிலேயே விழுந்து கிடந்தார். இசைக்கலைஞர்கள் ஓர் உச்சத்தில் இருக்க விழைபவர்கள். இசை இல்லாதபோது குடி அங்கே நிறுத்தி வைக்கிறது. குடி இல்லாவிட்டால் கண்மூடித்தனமான பக்தி. அவர்களின் தர்க்கமனம் சற்று கூர்மழுங்கியதே. அதைப்புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62128

அஞ்சலி – மாண்டலின் ஸ்ரீனிவாஸ்

மாண்டலின் ஸ்ரீனிவாஸ் என்ற பெயர் எனக்கு சுந்தர ராமசாமியிடமிருந்து அறிமுகமாயிற்று. தொலைக்காட்சிப்பெட்டியை கவனமில்லாமல் தாண்டிச்சென்ற ராமசாமி அரைக்கணம் கேட்ட ஒலித்துணுக்கை வைத்து ‘ஸ்ரீனிவாஸ்னா வாசிக்கறான்?’ என்று கேட்டதை வியப்புடன் கவனித்தேன். அதன்பின் அவரை மெதுவாக அறிமுகம் செய்துகொண்டேன். அருண்மொழியை மணந்தபின் அவளுடன் சேர்ந்து இசைகேட்க ஆரம்பித்த நாட்கள். 1991- இல் நான் முதல்முறையாக ஒரு டேப் ரிக்கார்டர் வாங்கினேன். பேரார்வத்துடன் ஒலிநாடாக்கள் வாங்கி சேகரித்தேன். நாட்கணக்கில் இரவும் பகலுமாக நீண்ட ஒரு இசைக்காலகட்டம் அது. இசையின் கரையிலேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61954

Older posts «

» Newer posts