Tag Archive: அசடன்

செவ்விலக்கியங்களும் செந்திலும்

தமிழில் சென்ற சில ஆண்டுகளில் சீரிய இலக்கிய வாசிப்பாளனுக்கு இலக்கியத்தின் அடிப்படை இலக்கணம், நோக்கம் ஆகியவற்றை தெளிவாக்கும் சில பேரிலக்கியங்கள் மொழியாக்கங்களில் கிடைத்தன. தல்ஸ்தோயின் போரும் அமைதியும் டி எஸ் சொக்கலிங்கத்தால் மொழியாக்கம் செய்யப்பட்டு முன்னரே வெளிவந்திருந்தாலும் சமீபமாகத்தான் மறு அச்சு வெளிவந்தது. தஸ்தோயின் அன்னா கரீனினா க.சந்தானத்தின் சுருக்கமான மொழியாக்கமே முன்னர் இருந்தது. இப்போது முழுமையாகக்கிடைக்கிறது. அன்னா கரீனினா [நா தர்மராஜன்],  தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் [எம்.ஏ சுசீலா] ,அசடன் [எம். ஏ சுசீலா] ஆகியவை வெளிவந்தன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83439

தல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி நூல்கள்

டியர் ஜெ.மோ , தல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி இவர்களின் நூல்களின் நல்ல தமிழ் மொழிபெயர்ப்பு எந்த பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இவர்களின் நூல்களை வாசிக்கத் துவங்குபவர்கள் எங்கிருந்து தொடங்க வேண்டும். எந்தெந்த நூல்களை வாசிக்க வேண்டும். கொஞ்சம் வழிகாட்ட முடியுமா?ஏற்கனவே நீங்கள் இது பற்றி குறிப்பிட்டிருந்தால், அந்த லிங்கை கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும். இப்படிக்கு, கார்த்திக். அன்புள்ள கார்த்திக் தாஸ்தயேவ்ஸ்கி குற்றமும் தண்டனையும் – எம் ஏ சுசீலா மொழியாக்கம்- பாரதி புத்தக நிலையம்,மதுரை அசடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70318

அறம் – ஒரு விருது

அறம் தொகுதிக்கு சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான எஸ் ஆர் எம் பல்கலை அறக்கட்டளை வழங்கும் தமிழ்ப் பேராய விருது அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது இந்த விருது. குழும நண்பரான எம்.ஏ.சுசீலா மொழியாக்க விருதை தஸ்தயேவ்ஸ்கியின் அசடன் மொழியாக்கத்துக்காக பெறுகிறார். நான் பெருமதிப்பு கொண்டுள்ள கவிஞர் அபி இவ்விருதின் ஒருங்கிணைப்பாளர். இவ்விருதின் முக்கியமான மகிழ்ச்சி என்பது நான் என் ஆசானாக எண்ணும் கோவை ஞானி அவர்களுக்கு சிறந்த தமிழறிஞருக்கான விருது அளிக்கப்பட்டிருப்பதுதான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38210

தமிழில் வாசிப்பதற்கு…

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, நலம், நலம் அறிய அவா. (இப்படி எழுதுகையில் எனது பள்ளி நாட்கள் நினைவிற்கு வந்து என்னைக் குதூகலப்படுத்தும்.) குற்றமும் தண்டனையும் அசடன் கரமசோவ் சகோதரர்கள் போரும் அமைதியும் இவைகளை வாசிக்க ஆசைப்படுகிறேன். தமிழில் இவைகளை வாசித்தால் ரஷ்ய எழுத்தாளர்கள் தாங்கள் ஒவ்வொரு வரியிலும் சொல்ல வந்த அசல் கருத்துக்களும், உணர்ச்சிகளும் மற்றும் பல விஷயங்களும் கிட்டுமா என்பதை எனக்குத் தெரியப்படுத்தவும். நீங்கள் கண்டிப்பாக ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டிலும் வாசித்திருப்பீர்கள். நான் வண்ணதாசன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25938

அசடன்

இருபது வருடங்களுக்கு முன்னால், நான் ருஷ்யப்பேரிலக்கியங்களை வெறியுடன் வாசித்துத்தள்ளிக்கொண்டிருந்த காலகட்டத்தில், திரிச்சூர் ரயில்நிலையத்தில் பேரா.எம்.கங்காதரனுடன் பேசிக்கொண்டு நின்றிருந்தேன். இரவு நானும் அவரும் பரப்பனங்காடிக்கு அவரது ஊருக்குச் செல்லவேண்டியிருந்தது. தஸ்தயேவ்ஸ்கி பற்றிப் பேசினோம். நான் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் ‘குற்றமும் தண்டனையும்’ தான் மிகச்சிறந்தது என்று சொன்னேன். ’எனக்கு அசடன்தான் முக்கியமான நாவல்’ என்றார் கங்காதரன். ’ஏன்?’ என்று கேட்டேன். தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களை வாசிப்பதற்கு நல்ல தொடக்கம் ’குற்றமும் தண்டனையும்’.அது உணர்ச்சிகரமானது. ஆழமான உளவியல் மர்மங்களும் அகப்போராட்டங்களும் நிறைந்தது. நம்மை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23212

அசடன், யானைடாக்டர்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ, அசடன் நூலுக்குத் தங்களின் முன்னுரை பல சிந்தனைகளை கிளறிவிட்டது. ’புனித அசட்டுத்தனம்’  என்ற  கருதுகோள்,நம் மரபிலும் நீங்கள் சொன்னது போலவே ஆழமாக ஊடுருவியுள்ளது. ஆனால் இது சற்று சிக்கலான கருத்து அல்லவா?   விவேகானந்தர் தனது கீதை பற்றிய சொற்பொழிவில்  பரமஹம்சனும் அறிவிலியும் ஒன்று போலவே தென்பட்டாலும் அவர்களிடயே கடலளவு வேறுபாடுண்டு என்று கூறிய கருத்து இதோடு பொருந்திப் போகிறது என நினைக்கிறேன். shankaran e r அன்புள்ள சங்கரன் உண்மை. அறிவழிதல்,அறிவிலாமலிருத்தல் இரண்டும் மிக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17090

அசடனும் ஞானியும்- கடிதங்கள்

அன்பின் ஜெமோ, நலமா? நீண்ட நாட்களின்பின் எழுத முடிகிறது.உங்கள் கனடா பயணம் நல்லவிதமாக இருந்தும் பயணச் சீட்டு மேலதிக செலவாகியதைச் சொன்னீர்கள்.அதை அப்படியே விட்டு விட்டீர்களா? தண்டமாக விடாமல் எடுத்துத் தானமாகக் கொடுக்கலாம். அசடனும் ஞானியும் வாசித்தேன் தேர்வு செய்யப்பட்ட சிலர் வாசித்து நொந்த மனதுக்கு ஒத்தடம் தந்ததுபோல் உணர்வு.நான் போஸ்ட்மேன் வேலை செய்தபோது ஒரு வீட்டில் மொங்கொலோய் குறைபாடுள்ள ஒருவர் கடந்து போகும்போது கை அசைப்பார், புன்சிரிப்பை இருவரும் பரிமாறுவோம்.ஒருமுறை தெருவில் அவரைக் கண்டேன் எதிர்பாராமல்.கண்டவுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17082

அசடனும் ஞானியும்

ஓர் உரையாடலில் நித்யா சொன்னார், சராசரித்தனத்துடன் இடைவெளியில்லாத மோதலையே ஞானத்தின் பாதை என்கிறோம் என. நம் உடல், நம் மூளை ,நம் சூழல் ஆகிய அனைத்தும் நம்மைப் பிறரைப்போல் ஆக்குகின்றன. ஆகவே அனைவரும் வாழும் சராசரி வாழ்க்கை ஒன்றையே நாமும் வாழ்ந்தாகவேண்டும்.     ஆனால் முமுட்சு என்பவன்,சராசரியில் ஒருவனல்ல. சராசரி மனிதன் வாழ நினைக்கும்போது வாழ்வை அறிய நினைப்பவன் அவன். சராசரி மனிதன் இன்பத்தை நாடும்போது அறிதலின் பேரின்பத்துக்காக அனைத்து இன்பங்களையும் கைவிடத் துணிந்தவன் அவன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16880