Tag Archive: அசங்கன்

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-52

சஞ்சயன் சொன்னான்: பேரரசே, இன்று காலைமுதல் நிகழ்ந்துவரும் இந்தப் போரை நான் உங்களுக்கு முழுமையாக சொல்லி முடிக்க இன்னும் சில பிறவிகள் தேவையாகக்கூடும். இன்று ஒவ்வொருவரும் பலவாகப் பிரிந்தனர். ஒரே போரை வெவ்வேறு இடங்களில் நிகழ்த்தினர். களம்பட்டவர்கள் வெவ்வேறு நிலங்களில் விழுந்தனர். வெவ்வேறு உடல்களிலிருந்து எழுந்தனர். விண்ணில் தங்களை தாங்களே கண்டுகொண்டு திகைத்தனர். குருக்ஷேத்ரம் பல்லாயிரம் ஆத்மாக்களை விடுவிக்கும் மாபெரும் தவச்சாலையென ஆகியிருக்கிறது. இந்தப் போர் தொடங்கி இன்று பதின்மூன்று நாட்கள் ஆகிவிட்டிருக்கின்றன. புரவிகளைப்போல் மிகச் சிறுபொழுது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118018/

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-38

அசங்கன் போர்முகப்பை அதற்கு முன்னால் பார்த்திருக்கவில்லை. அதைப் பற்றிய அத்தனை சொற்றொடர்களும் ஒப்புமைகளாகவே இருந்தன. எவரும் அதற்கு நிகரென ஒன்றை முன்பு அறிந்திருக்கவில்லை. ஆகவே அறிந்தவற்றைக்கொண்டு அதை சொன்னார்கள். அலையோடு அலை எனும் சொல்லாட்சி மீள மீள எழுந்தது. உடல்பின்னிக்கொள்ளும் பெருநாகங்கள். மழையை அறையும் காற்று. அவனுக்கு கைத்தறியில் சட்டம் ஓடுகையில் ஊடும்பாவும் மாறிமாறி கலந்து பின்னுவதைப்போல தோன்றியது. இரு படைகளின் ஆடைவண்ணங்களும் கலந்துகுழம்ப விசையில் தலைதிருப்பியபோது புதிய வண்ணம் ஒன்று விழிக்கு தென்பட்டது. போர்முனையில் அத்தனைபேரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114045/

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-37

தெய்வமெழுந்த பூசகன் என வில் நின்று துள்ள அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்த அசங்கன் போர்முழவில் ஒலித்தது தன் தந்தையின் பெயரென்பதை எண்ணியிராக் கணமொன்றில் ஓர் அறை விழுந்ததுபோல் உணர்ந்தான். இயல்பாக அவன் வில்லும் அம்பும் அசைவிழந்தன. உள்ளம் சொல் மீண்டபோது “தந்தை!” என்று அவன் கூவினான். அவனைச் சூழ்ந்திருந்த இளையோர் எவரும் முழவிலெழுந்த அச்சொல்லை உணர்ந்ததுபோல் தெரியவில்லை. அவர்களை நோக்கி கைவீசி “தந்தை!” என்று அவன் மீண்டும் சொன்னதும் இளையவன் “ஆம் மூத்தவரே, தந்தையின் பெயர்!” என்றான். அவனில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114015/

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-36

பாண்டவர்களின் யானைப்படைக்குப் பின்னால் அணிவகுத்துச்சென்ற தொலைவில்லவர்களின் தேர்ப்படையில் அசங்கனும் இருந்தான். அவனைச் சூழ்ந்து அவன் தம்பியர் ஒற்றைப்புரவி இழுத்த விரைவுத்தேர்களில் வந்தனர். முரசுகளும் முழவுகளும் இணைந்த முழக்கம் காற்றில் நிறைந்திருந்தது. அசங்கன் திரும்பி நோக்கி “செறிந்துவருக… இடைவெளி விழாது அணைக!” என்றான். அவன் ஆணையை தேருக்குப் பின்னால் அமர்ந்திருந்த கழையன் முழவோசையாக்கினான். “செறிந்து வருக… ஆணை அமைந்ததும் வில்தொடுத்து முன்னேகுக!” என்று அசங்கன் ஆணையிட்டான். தன் உடன்பிறந்தார் தன் குரலை மட்டுமே கேட்கிறார்கள் என்று அசங்கன் அறிந்திருந்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114010/

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-19

முற்புலரியில் கடோத்கஜன் அணிந்தொருங்கி கிளம்பியபோது ஒரே தருணத்தில் வியப்பும் ஏமாற்றமும் அசங்கனுக்கு ஏற்பட்டது. இடையில் அனல்நிறப் புலித்தோல் அணிந்து, தோளில் குறுக்காக இருள்வண்ணக் கரடித்தோல் மேலாடையை சுற்றி, கைகளிலும் கழுத்திலும் நீர்வண்ண இரும்பு வளையங்கள் பூட்டி, தலையில் செங்கருமையில் வெண்பட்டைகள் கொண்ட பெருவேழாம்பல் சிறகுகள் சூடி அவன் சித்தமாகி வந்தான். வானம் பின்னணியில் விண்மீன்களுடன் விரிந்திருக்க மயிரிலாத அவனுடைய பெரிய தலை முகில்கணங்களுக்குள் இருந்தென குனிந்து அவனை பார்த்தது. அசங்கன் உடல்மெய்ப்பு கொண்டான். சற்றுநேரம் அவனுக்கு குரலெழவில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113234/

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-18

உணவுக்குப் பின் சகுண்டனும் உத்துங்கனும் கைகளை நக்கியபடியே எழுந்துசென்று உடல்நீட்டி சோம்பல்முறித்தபடி சுற்றுமுற்றும் நோக்கினர். “நீங்கள் ஓய்வுகொள்ளலாம். அரசரும் இளையோரும் முற்புலரியில் அவையமர்வார்கள். அப்போதுதான் நீங்கள் செல்லவேண்டும்” என்றான் அசங்கன். கடோத்கஜன் “ஆம், அவ்வாறுதான் சொல்லப்பட்டது. ஆனால் எங்கே துயில்வது?” என்றான். “இங்குதான். கூடாரங்களுக்குள் துயிலலாம். அல்லது வெளியே நிலத்தில் பாய்விரித்து…” என்றான் அசங்கன். “நாங்கள் தரையில் துயில்வதில்லை” என்றான் கடோத்கஜன். “இங்கே மரங்கள் இல்லையே?” என்றான் அசங்கன். “குருக்ஷேத்ரத்தில் மரங்கள் முளைப்பது அரிது… ஆகவேதான் இது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113220/

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-17

விண்மீன்கள் விரிந்த வானின் கீழ் விளக்கொளிகளாக அரச ஊர்வலம் வருவது தெரிந்தது. சுடர்கொண்ட கொடிகள் நுடங்கின. மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் அணுகிவந்தன. தொலைவில் வெண்குடையின் கின்னரிகள் நலுங்கிச் சுழன்றன. நின்று கண்கூர்ந்து “வருவது யார்?” என்று கடோத்கஜன் கேட்டான். “தங்கள் பெரிய தந்தை, இந்திரப்பிரஸ்தத்தின் அரசர்” என்றான் அசங்கன். “அவரை மிக மெலிதாக நினைவுகூர்கிறேன்” என்று கடோத்கஜன் சொன்னான். “குழவிப்பருவத்தில் நான் அவரை கண்டதுண்டு… உடன் தந்தை வருகிறாரா?” என்றான். “ஆம் என்று எண்ணுகின்றேன்” என்றான் அசங்கன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113207/

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-16

அசங்கன் மூச்சுவாங்க விரைந்தோடிச் சென்று அரக்கர்நிரைமுன் வந்தவன் அருகே சிற்றுருவாக நின்று தலைவணங்கி “வணங்குகிறேன் மூத்தவரே, தாங்கள் இடும்பவனத்தின் அரசர் கடோத்கஜர் என்று எண்ணுகிறேன். நான் ரிஷபவனத்தின் சாத்யகரின் சிறுமைந்தனும் யுயுதானரின் முதல் மைந்தனுமான அசங்கன்” என்றான். கடோத்கஜன் முழு உடலாலும் புன்னகை புரிந்தான். கரிய உதடுகள் அகல பெரிய பற்கள் பளிங்குப் படிக்கட்டுகள்போல விரிந்தன. “நான் இடும்பவனத்தின் காகரின் சிறுமைந்தனும் பாண்டவர் பீமசேனரின் மைந்தனுமாகிய கடோத்கஜன்” என்று சொல்லி வணங்கி அவன் தோளில் கைவைத்து “இந்திரப்பிரஸ்தத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113139/

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-15

அசங்கன் காவல்மேடையை நோக்கி சென்றபோது உலோகப்பரப்புகள் மின்னும் அளவுக்கு காற்றில் ஒளியிருந்தது. கதிரவன் மறைந்த பின்னரும் முகில்களின் மேற்குமுகங்கள் மிளிர்ந்துகொண்டிருந்தன. படைகள் சிறுகுழுக்களாக பிரிந்து தங்கள் அணியமைவுகளை நோக்கி சென்றுகொண்டிருக்க அதுவரை எழுந்துகொண்டிருந்த போர்முழக்கம் காற்று திசைமாறுவதுபோல் பிரிந்து கலைவோசையாக மாறிச் சூழ்ந்தது. மரப்பலகை விரிக்கப்பட்ட படைப்பாதைகளினூடாக புண்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு வண்டிகள் சகட ஒலியுடன் கடந்து சென்றன. போரூழியர்களுக்கான ஆணைகளை இடும் சிறுகொம்புகள் குருவிகள்போல செவிகீறும் ஒலியெழுப்பின. அவ்வொலிகளால் களம் இணைத்து நெய்யப்பட்டது. அசங்கன் ஒரு பெரிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113114/

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-14

காவலரண் வாழ்க்கையில் ஓரிரு நாட்களிலேயே அசங்கனுக்குள் விசைகொண்டு ஊசலாடிய எண்ணம் இரு சொற்களென சுருங்கியது. ஒருமுனையில் சௌம்யை இருந்தாள். மறுமுனையில் அவன் எண்ணிய கணமே அஞ்சி பின்னடையும் அச்சொல் இருந்தது. முதலில் அச்சொல் கூரிய அம்பெனப் பாய்வதாக இருந்தது. பின்னர் அதை அவன் முற்றிலும் தவிர்த்தான். அதன் பின் அச்சொல் நோக்கி செல்லும் அனைத்தையும் தவிர்த்தான். ஆனால் அவனுள் இருந்து எழுந்து அனைத்துமாகிச் சூழ்ந்திருந்தது அச்சொல். பல்லாயிரம் படைக்கலங்களின் கூரொளியாக. உலோக ஒலியாக. ஆணைகளாக. முரசொலியும் கொம்போசையுமாக. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113054/

Older posts «