Tag Archive: அங்கி [சிறுகதை]

அங்கி, விலங்கு -கடிதங்கள்

அங்கி [சிறுகதை] அன்புள்ள ஜெ அங்கி கதையின் அந்த ஃபாதரை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். ஒரு மனிதன் இன்னொருவனுக்குப் பாவமன்னிப்பு கொடுக்கமுடியுமா? முடியும் அவன் தன்னை ஆண்டவரின் வடிவமாக நினைத்துக்கொள்ளவேண்டும். அப்படியே வாழவேண்டும். அந்த சபையில் அப்படி அமரவேண்டும் ஜெ, மலைமேல் நின்றிருக்கும் தனிமரம் கிறிஸ்துவிற்கு சரியான உதாரணம். கிறிஸ்து கல்வாரியில் உயிர்விட்டதைச் சொல்வதுபோல் இருக்கிறது. தான் எரிந்து உலகுக்கு ஒளிகாட்டியவர் கிறிஸ்துதாஸ் *** ப்ரிய ஜெமோவிற்கு, பலவகை பதார்த்தங்கள் பரிமாறப்படும் ஒரு நீண்டு கொண்டிருக்கும் விருந்தில், முதல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130398

ஆனையில்லா, அங்கி -கடிதங்கள்

“ஆனையில்லா!” [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் ..நீண்ட நாள்களுக்கு பின் கடிதம் எழுதுகிறேன் .. பல பதிவுகளை படித்தவுடன்  ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று உந்துதல் வந்தாலும், கடிதம் எழுதும் நேரத்தில் மேலும் சில புத்தக பக்கங்கள் அல்லது கட்டுரைகள் படிக்கலாமே என்று வாசிப்பு பக்கம் தான் மனம் எப்போதும் செல்லுகிறது .. புனைவு கொண்ட்டாட்டம் சிறுகதைகளை ஒவ்வொன்றாக வாசித்து வருகிறேன். ..work from home போட்டதால் அலுவலகம் சென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130364

வேட்டு, அங்கி -கடிதங்கள்

அங்கி [சிறுகதை] அன்புள்ள ஜெ   அங்கி சிறுகதை நீங்கள் எழுதிய பேய்க்கதைகளில் முக்கியமானது. நீங்கள் எழுதும் பெய்க்கதைகளை நான் தொடர்ந்து வாசித்துவருகிறேன். அவை மூன்று அம்சங்கள் கொண்டவை. பேயாகவும் இருக்கலாம் இல்லை மனமயக்கமாகவும் இருக்கலாம் என்ற ஒரு தன்மை அவற்றில் இருக்கும் பேய்க்கதையின் சுவாரசியம் இருந்தாலும் கூடவே அது ஒரு கவித்துவமான உருவகமாகவும் இருக்கும். பேய்க்கதையை இலக்கியத்தகுதி அடையச்செய்வது இந்த அம்சம்தான் புதுமைப்பித்தனின் கதைகளில் காஞ்சனையில் அந்த கயிற்றரவுத்தன்மை மட்டும்தான் உண்டு. எட்கார் ஆல்லன் போ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130368

துளி, அங்கி -கடிதங்கள்

துளி [சிறுகதை]   அன்புள்ள ஜெ   ஸ்வீடிஷ் எழுத்தாளர்  Axel Munthe யின் The Story of San Michele ஒரு முக்கியமான நாவல். அதைப்பற்றி ஒரு கதை உண்டு. Axel Muntheயின் மனைவி ஒரு நோயாளியைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குச் செல்கிறார். நோயாளி வாசிப்பதற்கான நூல்கள் சிலவற்றைக் கொடுக்கவேண்டும் என நினைக்கிறார். ஆனால் புத்தகம் வாங்கச் சென்றால் எல்லா புத்தகங்களுமே வாழ்க்கைமேல் அவநம்பிக்கையையும் கசப்பையும் உருவாக்குபவை. மனம்சோர்ந்துபோன அவர் கணவரிடம் ஒரு நல்ல புத்தகம் சொல்லுங்கள், நோயில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130382

அங்கி, சக்திரூபேண- கடிதங்கள்

  அங்கி [சிறுகதை] அன்புள்ள ஜெ,   அங்கி கதையை ஒரு திகில் பேய்க்கதைக்குண்டான ஆர்வத்துடன் வாசித்தேன். இத்தகைய கதைகளுக்கு சில தேவைகள் உள்ளன. கதை திகிலுடன் இருக்கவேண்டும் என்றால் சூழல் நம்பகமாக இருக்கவேண்டும். உண்மையான நிலக்காட்சி இருக்கவேண்டும். அதுதான் அங்கே நாம் செல்லும் அனுபவத்தை அளிக்கிறது.   அந்த கேரளத்துச் சாலையும் இருட்டும் மழையும் உண்மையான ஒரு அனுபவம் மாதிரியே இருந்தது. சாலையில் யானை நின்றிருக்கும் விதமும் அதை பார்ப்பதும் மிகமிகத் துல்லியமான வர்ணனைகள். இன்றைக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130245

அங்கி, காளான்,சக்திரூபேண!- கடிதங்கள்

அங்கி [சிறுகதை]   அன்புள்ள ஜெ,   அடுக்கடுக்கான கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ஆனால் எல்லாவற்றிலும் ஒரு மைய ஓட்டமாக மானுடம் பற்றிய ஒரு நெகிழ்வு உள்ளது. அங்கி ஒரு பேய்க்கதை. இந்தக்கதையை நீங்கள் எங்கோ எழுதியோ சொல்லியோ இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நினைவில்லை. அல்லது உண்மையாகவே நிகழ்ந்த கதையாக இருக்கலாம். செய்தியா என்றுகூட சந்தேகமாக இருக்கிறது.   அந்தக்கதையிலிருந்து ஒரு தாவல். பேயிடமே பாவமன்னிப்பு கேட்பது. அது பாவம் செய்தவனை விடுவிப்பது மட்டும் அல்ல. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130244

அங்கி [சிறுகதை]

பீர்மேட்டிலிருந்து கட்டப்பனை போகும் வழியில் பாதியிலேயே இருட்டிவிட்டது. செபாஸ்டியன் பைக்கை ஓட்ட நான் பின்னால் அமர்ந்திருந்தேன். சாரல்மழை முகத்தில் அறைந்துகொண்டிருந்தது. வானத்தை ஒளியை மேகங்கள் மங்க வைத்திருந்தாலும் மழைத்தூறல்களில் ஒளி இருந்தது. ஈரமான நிலமும் இலைப்பரப்புகளும் மென்மையான ஒளியுடன் இருந்தன.   ”நேரமாயிடும்னு சொன்னேனே” என்றான் செபாஸ்டியன். “வேண்டாம் வேண்டாம்னு சொன்னா கேக்கல்ல. வாகைமண்ணு வண்டல்மண்ணுண்ணு அனத்தினே”   “செரி, நேரமானா என்னடே? போ… “   “போறதுக்குள்ள இருட்டீரும்” என்று செபாஸ்டியன் சொன்னான். “வளியிலே வெளிச்சமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130224