Tag Archive: அங்காடித்தெரு

அங்காடித்தெரு பத்தாண்டுகள்

அங்காடித்தெரு படம் வெளியாகி பத்தாண்டுகளாகின்றன. ஒரு நல்ல சினிமா இனிய நினைவுகளாக ஆகிவிடுகிறது. ஏனென்றால் அது ஒரு கூட்டு உழைப்பு. பலருடைய பங்களிப்பால் உருவாவது. கூடிச் செயல்படும் எச்செயலும் இனியது. அது படைப்பூக்கம் கொண்டதாக இருக்குமென்றால் மேலும் இனியது   அங்காடித்தெருவின் படப்பிடிப்பு நடந்த சென்னை கடை, நெல்லை இட்டமொழி அருகே செங்காடு எல்லாம் நினைவில் எழுகின்றன. வசந்தபாலன். வசந்தபாலனின் வலங்கையாக அப்படத்தில் பணியாற்றிய நண்பர் வரதன் என முகங்கள் முன்னால் வருகின்றன. அனைவருக்கும் அன்பு   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130354/

என் திரைப்படங்கள்

அன்புள்ள ஜெ நீங்கள் இதுவரை எந்தெந்தப் படங்களில் பணியாற்றியிருக்கிறீர்கள்? சிந்துசமவெளி நீங்கள் எழுதிய கதையா? இதுபற்றி ஒரு சர்ச்சை எங்கள் நண்பர்களுக்குள். அதனால்தான் கேட்கிறேன் ஜெயராஜன் அன்புள்ள ஜெயராஜன், நான் எழுதியமுதல் படம் கஸ்தூரிமான். அதில் வசனங்களை மொழியாக்கம் மட்டுமே செய்தேன். என் பங்களிப்பு என்பது என் நண்பர் லோகியுடன் கூடவே இருந்ததுதான். இரண்டாவது படம் நான்கடவுள். அதன் மையக்கரு பாலாவுடையது. ஏழாம் உலகைக் கலந்து அதை விரிவாக்கினேன். நான் எழுதியது முழுமையாகப் படமாகவில்லை. ஆனாலும் அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26622/

அங்காடித்தெரு கேரளத்தில் …

அங்காடித்தெரு கேரளத்தில் வெளியாவதில் பல சிக்கல்கள். என் நண்பர் கோவை கேசவேட்டன் அவர்கள்தான் வினியோகஸ்தர். ஏற்கனவே சிலர் தமிழ்ப்படங்களை இருவாரம் கழித்தே வெளியிடவேண்டும் என்ற கேரள தயாரிப்பாளர் அமைப்பின் தடையை மீறியதனால் ஒட்டுமொத்தமாக தமிழ்ப்படங்களை தடைசெய்தார்கள். அதை மீறி ராவணன் வெளியாக திரையரங்க உரிமையாளர்களும் வினியோகஸ்தர்களும் தயாரிப்பாளர்களும் மோதிக்கொண்டார்கள். அதன் சிக்கல் காரணமாக வடகேரளத்தில் வெளியாகி சின்னாள் கழித்தே அங்காடித்தெரு தென்கேரளத்தில் வெளியாகியது. கேரளத்திலும் அது ஒரு பெரிய வணிக வெற்றி. இப்போதும் அரங்குகளில் உள்ளது. ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7908/

அங்காடித்தெரு, நூறாவது நாள்.

இன்று அங்காடித்தெரு நூறுநாளை தொடுகிறது. இவ்வருடத்தின் மாபெரும் வெற்றி இந்தப்படம்தான் என்று திரையுலகில் சொன்னார்கள். எளிமையான முதலீட்டில் எடுக்கப்பட்டு பற்பலமடங்கு லாபம் கண்ட படம். ஒரேசமயம் விமரிசகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் பெறுவதென்பதே எந்த திரைப்படைப்பாளிக்கும் கனவாக இருக்கும். அதை வசந்தபாலன் சாதித்திருக்கிறார்

Permanent link to this article: https://www.jeyamohan.in/7295/

வளைகுடா-ஒரு கேள்வி ஒரு பதில்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு தங்களின் தளத்தில் அங்காடித்தெரு படத்திற்கு பிறகு உங்களுக்கு வந்த மடல்கள் பற்றி எழுதியிருந்தீர்கள். வளைகுடா நாட்டின் தொழிலாளர் சமூகம் பற்றிய பல கருத்துகள் வந்ததாக சொல்லியுள்ளீர்கள். வந்திருக்கும், அதை இல்லை என மறுக்கும் அயோக்கிய மன நிலை எனக்கில்லை. உழைப்பு சுரண்டல் மிகுந்த நாடுகளில் வளைகுடா நாடுகளும் ஒன்று. இது உண்மை… அப்பட்டமான உண்மை. ஆனால், அந்த சுரண்டலுக்கான காரணகர்த்தாக்களை, மூலவர்களை அடையாளப்படுத்துவதில் சில சிக்கல் உள்ளதை.. உங்களைப்போன்ற எழுத்தாளர்கள் முன்வைக்கும் கருத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7271/

சீன அங்காடித்தெரு ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், சீன அங்காடித் தெரு குறித்து எனது இணைப்பை வெளியிட்டிருந்தீர்கள். அதற்கு ஒரு வாசகர் ஏன் இந்தியாவில் எலிக்கறி தின்பதில்லையா என்று கேட்டிருந்தார். இது போன்று என்ன சொல்ல வருகிறோம் என்பதைப் புரிந்து கொள்ளாமல் மட்டையடியாக வரும் பதில்களைப் படிக்கும் பொழுது சலிப்பாக இருக்கிறது. சீனாவில் அடிமைகளாக மக்கள் சித்திரவதைச் செய்வதைச் சொல்லும் பொழுது அப்படி இந்தியாவில் கொத்தடிமைகளோ, வறுமையோ, சித்ரவதைகளோ இல்லை என்று யாரும் சொல்லவில்லை. இந்தியாவிலும் அந்தக் கொடுமைகள் இருக்கின்றன, இருந்தாலும் அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7270/

வளைகுடா அடிமைத்தனம்

அங்காடித்தெரு வெளியான பின்னர் எனக்கு வந்த மின்னஞ்சல்களில் கணிசமானவை வளைகுடா நாடுகளில் வேலைசெய்யும் தமிழர்களால் அனுப்பப்பட்டவை. ஒன்றைக்கூட வெளியிட அவர்கள் விரும்பவில்லை. பாதிரியைப்போல நின்று அவற்றை நான் கேட்கவேண்டும் என்று மட்டும் விரும்பினார்கள் என்று பட்டது. அங்காடித்தெரு காட்டும் சுரண்டல் உலகம் வளைகுடாவில் வேலைசெய்யும் அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லபப்ட்டிருந்தது. கடுமையான தண்டனைகள், கீழ்த்தரமான பாலியல் சுரண்டல் [ ஓரினச்சேர்க்கையாளர்கள் அந்த அளவுக்கு மிகுந்த சமூகம் பிறிதில்லை என்று ஒருவர் எழுதியிருந்தார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7268/

சீன அங்காடித்தெரு

உலகுக்கெல்லாம் லாப்டாப்பும், ஐஃபோனும் செய்து தரும் ஃபாக்ஸ்காம் என்ற சீன நிறுவனத்தின் ஊழியர்கள் அடிமைக் கொடுமை தாங்காமல் வரிசையாக மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழ் நாட்டு ஜவுளிக் கடையில் நடப்பதை வெளியில் சொல்ல ஒரு அங்காடித் தெரு எடுக்கவாவது நமக்கு உரிமை இருக்கிறது ஆனால் தொழிலாளர்களின் சொர்க்க பூமியான சீனாவிலோ அதற்கும் வழியில்லை. இதெல்லாம் நம் காம்ரேடுகள் படிக்கிறார்களா? http://www.usatoday.com/money/world/2010-05-26-foxconnsuicides_N.htm அன்புடன் ராஜன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/7265/

அங்காடி தெரு,கடிதங்கள் 3

கண்ணீர்விட்டு அழுபவர்களைக்கூட பார்த்தேன். ஜனங்கள் அவர்களுடைய வாழ்க்கையை படத்திலே சொன்னால் அதைப் பார்க்கமாட்டார்கள் என்று இல்லை. சரியாகச் சொன்னால் பார்க்கத்தான் செய்வார்கள்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7009/

அங்காடி தெரு கடிதங்கள் 2

ஒரு நண்பர் பத்து தொழிற்சங்கங்கள் செய்யாத வேலையை செய்த படம் என்று சொன்னார். உண்மைதான். மனசு கனத்துவிட்டது. படம் முடிந்தபின்னாலே எதையுமே பேசாமல் தனிமையிலே நடந்து வருகிறோம். அதுதான் இதன் வெற்றி

Permanent link to this article: https://www.jeyamohan.in/6976/

Older posts «