Tag Archive: அங்கதம்

நாஞ்சில்நாடனின் ஆசிரியன்குரல்

இனிய ஜெயம், முதிர்மரத்தின் இன்கனி வாசித்தேன். சென்றவாரம் ஓர் இலக்கியத் தோழமை வசம், நாஞ்சிலின் சமீபத்திய கதைகளின் கொண்டாட்ட அனுபவம் அளிக்கும் வாசிப்பு இன்பம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். கதைகளின் உள்ளும் புறமும் ஆசிரியனின் குரல் ஓங்கி ஒலிப்பது, ஒரு பலவீனம் இல்லையா? நுட்பம், குறிப்புஉணர்த்தல் மற்றும் கலை அமைதி என்பவைதானே இது நல்ல கதை என்பதன் அளவுகோலாகக் கொள்கிறோம்? ஜெயகாந்தன் கதைகளில் அறத்தின் குரலாக ஆசிரியர் குரல் ஒலித்தாலும், வடிவம் மற்றும் கலை அமைதி இவற்றை அக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48709

மாடு – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், மாடல்ல மற்றையவை  கட்டுரையை நீங்கள் நகைச்சுவைப் பகுதியில் சேர்த்திருக்கிறீர்கள். நானென்னவோ கண்கள் பனிக்கக் கட்டுரையைப் படித்து உணர்ச்சி வசப்பட்டேன். இதில் சோற்றுக்கணக்கு, யானைடாக்டர், கோட்டி போன்ற கதைகளின் சாரம் இருக்கிறது. விவசாயிகளின் நிலை இதைவிட அதிக ‘நகைச்சுவையுடன்’ உள்ளது. என்அப்பா விவசாயம் பார்க்கிறார். என்னிடம் பணம் எதுவும் கேட்பதில்லை. அதற்கு அவருடைய ஆசிரியர் வேலையின் ஓய்வூதியம் உள்ளது. மனதைத் தொடும் கட்டுரையைக் கொடுத்ததற்கு நன்றி. அன்புடன் த. துரைவேல். அன்புள்ள ஜெயமோகன் சார், நலந்தானே? விடியற்காலையில் இப்படி நான் சிரித்ததே இல்லை. தூங்கிக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25457

இன்றைய புராணங்கள்

எனக்கு எப்போதுமே புராணங்களில் ஈடுபாடுண்டு. ஏனென்றால் அவை நடந்தவை மட்டும் அல்ல, நடந்ததைச்சொல்பவனையும் உள்ளடக்கியவை. அந்த value added வரலாறு எப்போதுமே நாம் ஊகிக்கமுடியாத மர்மங்களையும் நுட்பங்களையும் கொண்டது. உலகத்தில் எங்கும் எப்போதும் புராணங்கள்தான் மையக்கதையோட்டமாக உள்ளன, யதார்த்த இலக்கியமெல்லாம் எந்நிலையிலும் இரண்டாம்கதையோட்டங்கள்தான். டார்ஜான்,ஃபாண்டம்,ஜேம்ஸ்பாண்ட் எல்லாருமே புராணக்கதாபாத்திரங்கள்தானே? விண்வெளிக்கதைகள், பேரழிவுக்குப்பிந்தைய கதைகள் என நவீன புராணங்களுக்கு எத்தனையோ வடிவங்கள். இலக்கியத்தில் புராணத்தன்மை கொண்ட பல்வேறு அழகியல் வடிவங்கள் வந்துவிட்டன. மிகைக் கற்பனைப் படைப்புகள், மாய யதார்த்தப் படைப்புகள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22802

ஸ்ரீலால் சுக்லாவின் தர்பாரி ராகம்

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் இந்தியாவில் பசுமைப்புரட்சி தொடங்கியது. ரசாயன உரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து இந்திய அரசாங்கம் பாரம்பரிய முறைகளில் ஊறிப்போன இந்திய விவசாயிகளுக்கு புதிய ‘விஞ்ஞான பூர்வமான’ விவசாயத்தை அறிமுகம் செய்தது. அதன் பின் நாற்பதுவருடங்கள் கழித்து ரசாயன உரம் போட்டு பழகி நிலத்தை கெடுத்துக்கொண்ட மக்களிடையே ரசாயன உரம் போடவேண்டாம் உயிரியல் உரங்களை போடுங்கள் என்று அதைவிட பலமடங்கு பணத்தைச் செலவுசெய்து அரசே பிரச்சாரம் செய்கிறது முப்பதுகளில் அவுரி ,சணல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/188