புஷ்கரவனத்தில் நாகர்குலத்து மூதன்னையான நித்யை சொன்னாள். “அழகிய விழிகள் கொண்டவளே, புவியைப் படைத்த பிரம்மன் விண்ணின் உயரத்திலிருந்து அதை நோக்கியபோது அது புல்நுனிப் பனித்துளி என நடுங்கிக்கொண்டிருப்பதை பார்த்தார். அது ஏன் என்று அறிந்துவர தன் மைந்தர்களான மரீசி, புலகர், புலஸ்தியர், அங்கிரஸ், அத்ரி ஆகிய ஐவரையும் மண்ணுக்கு அனுப்பினார். அவர்கள் மண்ணுலகில் அலைந்து திரிந்த பின்னர் திரும்பிவந்து வணங்கினர். ஒவ்வொருவரும் தாங்கள் கண்டதை சொன்னார்கள்.” மரீசி சொன்னார். “தந்தையே, மண்ணுலகில் கடல்கள் பெருங்காற்றுகளால் கொந்தளித்துக்கொண்டே இருக்கின்றன. …
Tag Archive: அகூபாரன்
Permanent link to this article: https://www.jeyamohan.in/116202
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 10
பகுதி 3 : பிடியின் காலடிகள் – 4 ஆற்றிடைக்குறை புழுதிக்கு நிகரான மென்மையான மணலால் ஆனதாக இருந்தது. கோரையின் செறிவுக்கு நடுவே காற்று மணலை வீசி உருவாக்கிய மென்கதுப்புப்பாதை வெண்தடமாக தெரிந்தது. அவள் அதில் நடந்தபின் நின்று மீண்டும் அண்ணாந்து நோக்கி “விண்மீன்கள்… இரவில் தனித்திருக்கையில் அவை மிக அருகே வந்துவிடுகின்றன” என்றாள். பீமன் புன்னகையுடன் “ஆம்… அவை ஏதோ சொல்லவருபவை போலிருக்கும்” என்றான். திரௌபதி ”பசிக்கிறது” என்றாள். “இங்கே என்ன இருக்கப்போகிறது?” என்றான் பீமன். …
Permanent link to this article: https://www.jeyamohan.in/70702