Tag Archive: அகல்யை

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 77

பகுதி பதினைந்து : அன்னைவிழி – 6 சரஸ்வதி ஆலயத்தின் முகப்பில் ரதம் நின்றபோது திரௌபதி திடமான கால்களுடன் இறங்கி வாழ்த்துக்குரல்களும் முரசொலியும் சங்குமுழக்கமும் சூழ சற்று நின்றாள். அவள் ஆடையில் குழலில் எங்கும் சிறு குலைவும் இருக்கவில்லை. வரையாட்டின் அடிபிறழாத நேர்நடை என ரதத்திரைச்சீலை விலக்கி வலப் பாதத்தை படியில் எடுத்துவைத்து இறங்கிய மாயை எண்ணிக்கொண்டாள். அவள் தொடைகள் வலுவிழந்து நடுங்கிக்கொண்டிருந்தன. இறங்கியபின் ஒருகையால் ரதத்தூணைப்பற்றிக்கொண்டு சமநிலையை மீட்டு சேவகர் நீட்டிய தாலத்தை பெற்றுக்கொண்டு திரௌபதிக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69201

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 28

பகுதி ஆறு : கரும்புனல் கங்கை – 2 துருபதன் திரௌபதியிடம் விடைபெற்று அந்தப்புரத்தில் இருந்து மாலைநிகழ்ச்சிகளுக்காக கிளம்பியதும் அவரை வாயில் வரை கொண்டுசென்று விட்ட பிருஷதி சீற்றத்துடன் திரும்பி திரௌபதியை நோக்கினாள். தன் ஆடையை இடக்கையால் மெல்லத்தூக்கியபடி அவள் படியேறி உள்ளறைக்குள் சென்றுகொண்டிருந்தாள். அவள் நீண்ட பின்னல் பின் தொடையைத் தொட்டு அசைந்தாடியது. அவள் படியேறுகையில் ஆடையைத் தூக்குவதை பிருஷதி பலமுறை கவனித்ததுண்டு. அது அத்தனை இயல்பாக ஒரு நடன அசைவுபோல அமைந்திருக்கும். அவள் குனிந்து பார்ப்பதில்லை, ஆனால் ஆடைநுனி மேலெழுந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65887

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27

பகுதி ஆறு : கரும்புனல் கங்கை – 1 ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து படைக்கலப்பயிற்சி முடிந்ததும் குளித்து மெல்லுடையணிந்து மீண்டும் அந்தப்புரம் செல்வதை துருபதன் வழக்கமாக்கியிருந்தார். அமைச்சர்களும் ஒற்றர்களும் செய்திகளுடன் அவருக்காக காத்திருப்பார்கள். தன் தனியறைவிட்டு அவர் வெளியே வந்ததும் இடைநாழியில் காத்திருக்கும் அமைச்சர் அவரிடம் முதன்மைச்செய்திகளை சொல்லத் தொடங்குவார். மெல்ல நடந்தபடியே அவர் கேட்டுக்கொள்வார். ஒற்றர்களை அமைச்சர் அழைக்க அவர்களும் வந்து சேர்ந்துகொண்டு மெல்லிய குரலில் சொல்லத்தொடங்குவார்கள். துருபதன் எதையும் கேட்பதில்லை என்று அமைச்சர்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65835