குறிச்சொற்கள் அகத்தியர்

குறிச்சொல்: அகத்தியர்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–44

44. வில்லுறு விசை நகுஷேந்திரனின் ஆணைப்படி கந்தர்வனாகிய வஜ்ராக்‌ஷன் தன் துணைவர் எழுவருடன் சென்று இந்திராணி தவம் செய்துகொண்டிருந்த மகிழமரச் சோலையை அடைந்தான். தன் சொல்லால் அதற்கு அனல்வேலியிட்டிருந்தாள் இந்திராணி. அவர்களின் காலடியோசையிலேயே சாய்கதிர்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–43

43. விண்ணூர் நாகம் படைக்களத்திலிருந்து திரும்பும்போதே நகுஷன் பிறிதொருவனாக மாறிவிட்டிருந்தான். அவன் உடலுக்குள் மற்றொருவர் நுழைந்துவிட்டதைப்போல நோக்கும் சொல்லும் மட்டுமல்ல நடையும் உடலசைவுகளும்கூட நுட்பமாக மாற்றமடைந்திருந்தன. அரண்மனைமுற்றத்தில் தேரிறங்கிய அவனைக் கண்டதுமே பத்மனின் விழிகளில்...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 70

உக்ரனின் குரல் மிக மெல்லிய ஊழ்க நுண்சொல்போல் முதலில் எழுந்தது. “அடிமுடி.” அவன் அதையே சொல்லிக்கொண்டிருக்க பைலனின் உள்ளத்தில் அச்சொல் குழம்பிப்பரவியது. அடிதல், முடிதல். அடித்து அடித்து அடிமையெனப் பணிந்து அடிதொழுது முடிந்தமைந்த...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 52

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் - 3 கார்காலத்து முதல் மழை வருவதை ருக்மிணி வரதாவில்தான் நோக்கினாள். தெற்கே வரதாவின்மேல் ஒளியுடன் எழுந்த வான்விளிம்பில் இளங்கன்னத்தில் ஒட்டிய மயிரிழை எனத்தெரிந்த கோடு...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 38

பகுதி ஏழு : தழல்நீலம் கங்கையின் கரையில் அக்னிபதம் என்னும் தன்னுடைய தவச்சாலையின் முன்பிருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து அக்னிவேசர் மாணவர்களுக்கு தனுர்வேதத்தின் கதையைச் சொன்னார். பிரஜாபதியான பிருதுவிற்கு அந்தர்த்தானன் என்றும் வாதி என்றும் இரு...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 37

பகுதி ஏழு : தழல்நீலம் செஞ்சதுப்பில் உழுதுவாழும் காட்டுப்பன்றி மதமெழுந்து நகர்நுழைந்ததுபோல சிகண்டி காட்டிலிருந்து வெளியே வந்தான். மூன்று மாதகாலம் காட்டில் பெரும்பசியுடன் உண்டதனால் திரண்டுருவான கரிய உடலும் எரியும் சிறுவிழிகளும் தோளில் மூங்கில்வில்லும்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 30

பகுதி ஆறு : தீச்சாரல் மறுநாள் காலையில் வியாசர் வருவாரென்று முந்தைய நாள் இரவு சுதன் வந்து செய்தியறிவித்தபோதே சத்யவதி நிலைகொள்ளாமல் அரண்மனைக்குள் உலவத்தொடங்கிவிட்டாள். குளிருக்கு வைக்கும் செம்புக்கணப்பு போல உள்ளூர கனல் இருந்துகொண்டிருந்தது....

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 29

பகுதி ஆறு : தீச்சாரல் வியாசவனத்தின் தெற்குமூலையில் சித்ரகர்ணி கண்களும் பிரக்ஞையும் மட்டும் உயிருடனிருக்க இறந்துகொண்டிருந்தது. அதன் உறுமல்கள் அதன் வயிற்றுக்குள் ஒலிக்க, மனதுக்குள் மூடுண்ட அறைக்குள் சிக்கிக்கொண்ட வௌவால் போல பிரக்ஞை பரிதவித்துக்கொண்டிருந்தது....

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 23

பகுதி ஐந்து : மணிச்சங்கம் வைகாசி மாதம் கருநிலவு நாளன்று மணிமஞ்சம் ஒருக்கப்படும் என்று விசித்திரவீரியனின் செயலமைச்சர் ஸ்தானகருக்கு செய்தி வந்தது. செய்தியைக் கொண்டுவந்த சத்யவதியின் தூதன் ஒற்றைவரி குறிக்கப்பட்ட ஓலையை அளித்துவிட்டு வணங்கி...