Tag Archive: ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கில் வாழ்தல்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பதற்கு பல கருவிகள் வந்துவிட்டன. வாட்ஸப், நிலைத்தகவல், செல்பேசி அழைப்பு, ஸ்லாக் என தினுசு தினுசாக வந்துவிட்டாலும், அந்தக் கால கடிதம் போல், சுவாரசியமாக எதுவும் இருப்பதில்லை. நான் பழமைவிரும்பி என இந்தக் கால தலைமுறை நினைப்பார்கள். இந்தப் பதிவைக் கண்டேன்: பாவனை சொல்வதன்றி http://www.jeyamohan.in/77515#.VceRGflViko அதை நான் இவ்வாறும் பார்க்க நினைக்கிறேன். ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் துள்ளலோடு இயங்குபவர்களை இரு வகையாகப் பார்க்கிறேன். முதல் பிரிவினர் செய்தியைக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77694

எதிர்வினைகள், விவாதங்கள்- சில விதிகள்

அன்புள்ள ஜெயமோகன், தாங்களும் தங்கள் குடும்பமும் நலமா? தங்களுடன் தொடர்பு கொண்டு வெகுநாட்கள் ஆகிவிட்டன. “எழுத்தாளனுக்கு பேஸ்புக் தேவையா?” என்ற தலைப்பில் நண்பர் அருண் மொழி வர்மன் அவர்களுக்குத் தாங்கள் கொடுத்த ஆலோசனைகள் மிகவும் சிறப்பாக இருந்தன. நல்ல ஆலோசனைகளை முன்வைத்துள்ளீர்கள். அது தொடர்பாக ஒரு சந்தேகம். (இணையத்தில் காணும்) “எதிர்வினைகளைப் புறக்கணியுங்கள்” என்று ஆலோசனை கூறியுள்ளீர்கள். ஆராய்ந்து செய்யப்பட்ட எதிர்வினைகளைக்கூடப் புறக்கணிக்க முடியுமா? அப்படிப் புறக்கணித்தால் அது அந்த எழுத்தாளருக்கு அவப்பெயர் இல்லையா? தாங்களே தரமுள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61256

எழுத்தாளனுக்கு பேஸ்புக் தேவையா?

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். என்னுடைய அகவை 29. நான் கடந்த 12 ஆண்டுகளாக இலக்கியம் வாசித்து வருகிறேன். தமிழ் இலக்கியம் மாத்திரம் அல்லாமல் தாஸ்தாவ்ஸ்கி, டால்ஸ்டாய், மாப்பசான், போர்ஹெஸ், கொர்த்தஸார், காம்யூ, மார்க்கேஸ், ஓரான் பாமுக், சார்த்தர் போன்றோரின் இலக்கிய ஆக்கங்கள் மீதும் தீராத தாகமுண்டு. ஆனால் எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற வேட்கை ஓராண்டுக்கு முன்புதான் என்னுள் எழுந்தது. எனினும் அதை என்னால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதற்கு ஃபேஸ்புக் ஒரு காரணமாக இருக்குமோ என்ற ஐயம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61056

ஃபேஸ்புக் இரு லைக்குகள்

ஜெ இந்த விளம்பரத்தை ஃபேஸ்புக்கிலே பார்த்தேன் Panuval – Online Tamil BookStore Price: Rs.500.00 Brand: கண்மணி குணசேகரன் வந்தாரங்குடி”, படையாச்சிகள் ஒற்றுமையாய் இருக்கவேண்டியதன் தேவை பற்றிப் பேசுகிற நாவல். இந்த புத்தகம் தேவைப்பட்டால் +91-8939967179 ,044-43100442என்ற எண்ணுக்கு அழைக்கவும் . ( VPP மற்றும் Door Delivery வசதி உண்டு )   சும்மா ஒரு தகவலுக்காக சரவணன் அன்புள்ள சரவணன், படையாச்சிகள் அதிகம் புத்தகங்களெல்லாம் படிப்பதில்லை. பதிப்பகங்களிடம் விசாரித்தால் தெரியும். ஆகவேதான் அவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57204

ஃபேஸ்புக், ஞாநி-கடிதம்

அன்புள்ள ஜெமோ, நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் இணையமும் நூல்களும் பதிவை பற்றிதான் இருதினங்களாக சிந்தித்து கொண்டே இருந்தேன். பேஸ் புக், வீட்டில் “வாழும் நாகம்” போல் மெதுவாக வாழ்வில் நுழைந்து விட்டதோ என்று. இதற்கு முன்னும் அதை விட்டு விலகியிருக்கிறேன் என்றாலும் மொத்தமாக விலக முடிந்ததில்லை. விலகவேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றி இருக்கிறது. ஏனெனில், அது ஒரு உலக செய்திகளின் சாளரமாக தோன்றியதே காரணம். இந்தியாவை விட்டு வெகு தூரத்தில் இருக்கும் எங்களுக்கு, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/49084

இணையமும் நூல்களும்

இணையத்தில் வரும் எழுத்துக்களைப்பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். வலைப்பூ எழுத்துக்கள் மிகமிகக் குறைந்துவிட்டன என்று சொன்னார்கள். பெரும்பாலானவர்கள் ஃபேஸ் புக் எழுத்தாளர்களாக ஆகிவிட்டனர். ஃபேஸ்புக்கில் அப்படி என்னதான் எழுதுகிறார்கள் என்றேன். பெரும்பாலும் விவாதத்தைக் கோரும் சுருக்கமான குறிப்புகள், கவன ஈர்ப்பு கருத்துக்கள் மட்டுமே என்றார்கள். அதில் உள்ள உடனடி எதிர்வினைதான் அவ்வெழுத்தை வடிவமைக்கும் தூண்டுதல் என்றனர். எழுதுபவர்கள் கொஞ்சநாள் அந்த எதிர்வினையை முழுமையாகவே கவனிக்காமலாகிவிடவேண்டும். எத்தனை வாசகர்கள் என்பதை முற்றிலுமாக உதாசீனம் செய்துவிடவேண்டும் என நான் சொல்வேன். சில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48646

சமூக வலைத்தளங்கள் ஜனநாயகக் களமா?

பார்வையாளர்களை பங்கேற்பாளர்களாக ஆக்கியதுதான் இணையத்தின் வெற்றி என்று சொல்லலாம். இதழியலில் எழுத்தாளர் – வாசகர் என்ற பிரிவினை இருந்தது. இணையத்தில் இருவரும் ஒருவரே. எழுத்தாளனாக ஆவதற்கு திறமையும் பயிற்சியும் தேவைப்பட்டது. இணையத்தில் எழுத எதுவுமே தேவை இல்லை. இன்று ‘ஃபேஸ்புக்’ போன்ற தளங்களில் எல்லாரும் எதையாவது ஒன்றை எழுதுகிறார்கள். தங்களைப் போன்றவர்கள் எழுதுவதை மட்டும் படிக்கிறார்கள். இந்து தமிழில் என் கட்டுரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/40131

ஃபேஸ்புக்கில் மீண்டும்

சற்று முன் ஒரு நண்பர் இந்த இணைப்பை அனுப்பி இது நானா என்று கேட்டிருந்தார். நான் ஏற்கனவே இதைத் தெளிவுபடுத்திவிட்டேன். நான் ஃபேஸ்புக்கில் இல்லை. ஏதோ அறிவிலி திட்டமிட்டு இந்தச் செயலைச் செய்கிறான். இந்தப் பக்கத்தில் வருவனவற்றுக்கு நான் பொறுப்பல்ல்ல. இதேபோன்ற செயல்களை இணையத்தில் எதிர்கொள்வது மிகக் கடினம். முளைத்தபடியே இருப்பார்கள். ஆகவே இந்த விஷயத்தை வாசகர்கள் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டுமென விரும்புகிறேன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/27538

ஃபேஸ்புக்

ஜெ ஒரு விஷயம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். உங்கள் பேரில் ஃபேஸ்புக் தளம் உள்ளதா? Jeyamohan Balayan என்றபேரில் உங்கள் படத்துடன் ஒரு ஃபேஸ்புக் தளம் உள்ளதே ஜேக்கப் ராய் ஆப்ரஹாம் அன்புள்ள ஜேக்கப் அது ஒரு மோசடித் தளம். நான் ஃபேஸ்புக் உறுப்பினர் அல்ல. எந்த சமூக வலைத்தளத்திலும் நான் உறுப்பினர் அல்ல. அந்த அசடு என் அப்பா பேரைக் குத்துமதிப்பாகப் போட்டது இன்னும் கண்டிக்கத்தக்கது இன்னும் ஒரு விஷயம். நான் எந்த இணையதளத்திலும் பின்னூட்டம் போடுவதில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26591