“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-8

சூரியவட்டத்தில் ஆடுஅமை களத்தில் தன் கிணைப்பறையை மீட்டியபடி முதல் சூதரான அஜர் பாடினார். தோழரே, விஜயத்துடன் களம் நின்று பொருதும்பொருட்டு புறப்படும்போது அங்கநாட்டரசர் கர்ணன் தன் அன்னையாகிய ராதையை பார்க்கும்பொருட்டு சென்றார். அவரது பெற்றோர் நகருக்கு வெளியே ஒதுங்கிய மாளிகையில் எவருடனும் இணையாமல் தனித்து வாழ்ந்தனர் அப்போது. சூதர்களல்லாதவர்கள் மேல் அவர்கள் வஞ்சம் கொண்டிருந்தனர். சூதர்களை அவர்கள் பொருட்டென எண்ணவில்லை. கர்ணன் களம்செல்லப்போவதில்லை என்ற செய்தி அரண்மனையெங்கும் பரவி அங்கிருந்து அங்கநாட்டிலும் சூழ்ந்திருந்தது. ஷத்ரியர் தங்கள் அவையிலிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120826

அழியா வண்ணங்கள்

  சென்னை விடுதியில் அரைத்துயிலில் சும்மா தொலைக்காட்சியை நோண்டிக்கொண்டிருந்தபோது  ‘ஜெயகாந்தன் ஜெயமோகன் சேர்ந்து எழுதிய கதை நீ’ என்றபாடல் எங்கேயோ ஒலித்தது. திரும்ப சென்று தேடிப்பார்க்கத் தோன்றவில்லை. ஆனால் அதிலிருந்து நினைவுகள் எழத்தொடங்கின.   சினிமாப்பாடல்களுக்கு ஓர் அழிவின்மை உண்டு. அவை சினிமாவில் நிகழும் பிறிதொரு கலையைச் சார்ந்தவை. மரபிசையின் அடித்தளம் மீது மேலைச் செவ்வியல் இசையும், மேலைப் பரப்பிசையும், நாட்டாரிசையும் கலந்து ஒவ்வொரு கணமும் புதிய வாய்ப்பொன்றைத் திறப்பவை. நம் மரபிசை தேங்கிப்போன ஒன்று. அதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120741

அரூ அறிபுனை விமர்சனம்-3 ,இருப்பு சார்ந்த வினாக்கள்

அறிபுனை- விமர்சனப்போட்டி அரூ இணையதளத்தில் அறிபுனை கதைகள் போட்டியில் வென்ற கதைகளைப் பற்றிய விமர்சனம்.  விக்ரம், கோவை   அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, எழுத முற்படுபவர்களுக்கும் வாசகர்களுக்கும் நல்ல சாத்தியங்களை எப்போதும் ஏற்படுத்தி தரும் தங்களுக்கு நன்றி.  எது அறிவியல் புனைவு எது அதுவல்ல என்று விளக்கி இருக்கிறீர்கள். கலை மனித உறவுகள், இயற்கை, அரசியல், வரலாறு, மதம், அறிவியல் என்று எதையும் தன் கையில் எடுத்துப் பார்க்கும்போது அது தனக்கே உரித்தான நோக்கையும், உள்வாங்கு-வெளிப்பாட்டு முறைகளையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120984

தென்காசி- கடிதங்கள்

ஜெ   தென்காசி கோயிலின் ஊர்த்துவர் பற்றி எழுதியிருந்தீர்கள்   ‘ஓங்குநிலை ஒன்பதுற்ற திருக்கோபுரம் பாங்குருவம் பத்துப் பயில் தூணும் தேங்குபுகழ் மன்னர் பெருமான் வழுதிகண்ட தென்காசி தன்னிலன்றிஉண்டோ தலத்து?’   தென்காசி கோபுரம் மற்றும் சிற்பத்தூண்களைப்பற்றிய கவிதை இது. இங்குள்ள திருவோலக்க மண்டபத்தில் உள்ளது இந்த ஊர்த்துவர் சிலை. அருகே மகாதாண்டவர் சிலை உள்ளது. இது தமிழகத்தின் பேரழகுகொண்ட சிலைகளில் ஒன்று. இதைப்பற்றிபலர் எழுதியிருக்கிறார்கள்   ஆர். சௌந்தரராஜன் வானோக்கி ஒரு கால் – 2 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120047

ஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை- கடிதங்கள்

ஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை   அன்புள்ள ஜெ ஈரோடு விவாத பயிற்சிப் பட்டறை பற்றி படிக்கும்போது ஒரு இனம் தெரியாத ஆனந்தம் பொங்கி விரிகிறது. அதிலும் இத்தனை இளைய முகங்களைப் பார்க்கும் போது, தற்போதைய சாதி, இன, மத பேதங்களைத் தூண்டும் வெறுப்பு மொழிகள் நிறைந்த பிரசார சூழலில், பாலைவனத்தில்  பசுஞ்சோலை கண்டது போல ஒரு பரவசம். விவாதம் என்பது வெற்றி பெற வேண்டுவது ; அப்படி முடியாவிட்டால் கத்தி கூப்பாடு போட்டு எதிரணியை பேச …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120054

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-7

குருக்ஷேத்ரத்தின் சூரியகளத்தில் அமர்ந்து அஜர் சொன்னார். அழிவில்லாதனவற்றை பாடுக! அழிவுள்ளவற்றை பாடலினூடாக அழிவற்றவை என்றாக்குக! அறியவொண்ணாமையை பாடுக! பாட்டினூடாக அவற்றை அறிபடுபொருளென்றாக்குக! தோழரே, பாடல் வாழ்வின் பொருள்மட்டுமே பிரிந்து நின்றிருப்பது. வேரில் கசந்து தண்டில் இறுகி இலையில் விரிந்து மலரில் ஒளிர்ந்து கனியில் இனிப்பது மட்டுமே திரண்டு நின்றிருப்பதையே பாடல் என்கின்றனர். இங்குள்ள ஒவ்வொன்றும் மறையும், அவை உருமாற்றி பாடலில் சென்றமையும். இங்குள்ள ஒவ்வொன்றும் மீண்டும் இவ்வண்ணமே பாடலில் இருந்து எழும். அவை தங்கள் சுவையாலேயே அறியப்படும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120808

வ.வே.சு.அய்யரும் சாதிவெறியும்

தமிழிலக்கியத்தின் இரு கிளைகளுக்கு முன்னோடியானவர் வ.வே.சு.அய்யர். தமிழ்ச்சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளில் ஒன்று என அவர் எழுதிய மங்கையர்க்கரசியின்காதல் என்ற சிறுகதைத்தொகுதி குறிப்பிடப்படுகிறது. அதில் உள்ள குளத்தங்கரை அரசமரம் தமிழின் முதல் இலக்கணம் அமைந்த சிறுகதை என க.நா.சு. மரபினர் சொல்வார்கள்.  வ.வே.சு.அய்யர் பாரதிபாடல்களுக்கு எழுதிய முன்னுரை தமிழின் விமர்சன மரபுக்கு வழிகோலியது.   வாழ்க்கையின் கடைசிக்காலகட்டத்தில் வ.வே.சு.அய்யர் கடும் சர்ச்சைகளுக்கு ஆளானார்.பாரதியார் உத்தேசித்த சுதேசிக்கல்வியைப் பரப்பும்பொருட்டு வ.வே.சு.அய்யர் ஒரு கல்விநிலையத்தை சேர்மாதேவியில் நிறுவினார். தமிழ்நாடு ஆசிரமம் என்ற அக்குருகுலத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21150

‘உயிர் விளையாட்டு’- கிருஷ்ணன் சங்கரன்

நாமக்கல் கவிஞர்  வெ இராமலிங்கம் பிள்ளை அவர்களின் “இலக்கிய இன்பம்” என்ற உரைநடை நூல் படித்தேன். ஒருவர் எவ்வாறு அறியப்பட வேண்டுமோ அவ்வாறல்லாமல் பலவாறாக அறியப்படுதல் நகைமுரணே. அவர் மிகச் சிறந்த ஓவியர். ஒரு வெள்ளையரின் இறந்துபோன மகளை தத்ரூபமாக வரைந்து பாராட்டுப் பெற்றதை “என் கதை” யில் விவரித்திருப்பார். அவர் பெயரைச் சொன்னாலே ஞாபகத்துக்கு வருவது அவருடைய வாழ்க்கை வரலாறான “என் கதை”. தமிழின் மிகச் சிறந்த தன் வரலாற்று நூல்களில் ஒன்று. ரொம்ப நேரம் யோசித்தால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119695

அரூ அறிபுனை விமர்சனம்-2 ,அன்னியக் கனவுகள்

  அறிபுனை- விமர்சனப்போட்டி அரூ இணையதளத்தில் அறிபுனை கதைகள் போட்டியில் வென்ற கதைகளைப் பற்றிய விமர்சனம்.  ஜினுராஜ்      “ஒரு பொதுவான கதையில் அறிவியல்கூறுகள் சேர்க்கப்பட்டால் அது ஒருபோதும் அறிவியல் கதை அல்ல” “அக்கதையின் மையக்கரு அறிவியல் சார்ந்த ஒன்றாக இருக்க வேண்டும்.அதாவது ஓர் அறிவியல் கண்டுபிடிப்புக்கு ஆதாரமாக அமைவது அறிவியல் ஊகங்கள்( Hypothesis ).அப்படி ஒரு அசலான அறிவியல் ஊகமானது நிரூபணத் தர்க்கத்தை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக புனைவாக்கம் நோக்கி வந்தால் மட்டுமே அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120943

1000 மணிநேர வாசிப்பு சவால்

இப்போட்டிக்கு விதிமுறைகள் என பெரிதாக ஏதுமில்லை. நாம் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திகொள்வது மட்டுமே நோக்கம் ஆகவே இலக்கடைந்த நிறைவும், அதற்காக தேர்ந்தெடுக்கும் பாதை அளிக்கும் மகிழ்விற்கு அப்பால் பரிசு என ஏதுமில்லை. நாளை சித்திரை 1 இந்த புதிய வருடத்திலிருந்து இப்போட்டி துவங்கும். 1000 மணிநேர வாசிப்பு சவால்

Permanent link to this article: https://www.jeyamohan.in/120979

Older posts «

» Newer posts