ஆசிரியர் தேர்வு முறை

  அன்புள்ள ஜெ, வணக்கம். தமிழகத்தின் கல்விச்சுழல் குறித்து, குறிப்பாக உயர்கல்வித்துறை குறித்து வருந்தாத சிந்தனையாளர்கள் இங்கு இல்லை. அதுகுறித்த கசப்புணர்வும், தூற்றல்களும் தமிழ் வாசிப்புச்சூழலில் புதிதும் அல்ல. இணையம், அச்சு என எவ்வூடகம் வழியேனும் மாதம் ஒருமுறையாவது அதைக் கடக்கிறோம். இப்போது கல்விச் சாதனைகள் என்று நாம் மார்தட்டிக் கொள்ள எதாவது இருக்குமென்றால், அது சென்ற தலைமுறை நமக்கு விட்டுச்சென்றவைகளில் ஒன்று. நிகழ்காலம் தேய்பிறை. ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கோ அது குறித்த அக்கறை சிறிதும் இல்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126672

கல்விச்சாலையில் இந்திய மரபிலக்கியங்கள்

  அன்புள்ள ஜெ, நலமாக இருக்கிறீர்களா ? நேற்று ஸ்ம்ரித்தி இரானியின் அறிக்கையில் இந்திய அரசு கல்விமுறையில் புராதன இந்திய நூல்களான வேதங்களையும் புராணங்களையும் கற்பிக்கவிருப்பதைப் பற்றி நானும் என் நண்பரும் விவாதித்தோம். என் நண்பரின் தரப்பு இது தான். 1) இந்து கொள்கைகளை (values) எல்லோரிடம் (மற்ற மதத்தினரிடம் தினிப்பது தவறு தானே) 2) இது கிறுத்துவ மிஷ்னரிகள் செய்வது போலத்தானே உள்ளது 3) இது அரசாங்கத்தின் வேலையா ? 4) அரசாங்கம் எல்லா மதத்தினருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56214

வெண்முரசு புதுவை கூடுகை-31

அன்புள்ள நண்பர்களே , வணக்கம் , புதுவை கூடுகை தொடங்கப்பட்டு வெண்முரசு பெருநாவலின் முதல் மூன்று நூல்கள் மீதான வாசிப்புக்கலந்துரையாடல் ஆண்டுக்கொரு நூலாக ஒவ்வொரு மாதமும் சிற்சில பகுதிகளை பேசுபொருளாக எடுத்துக்கொண்டு, ஆழ்வாசிப்பினூடாக நிகழும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுதலும் அதன் மீதான விமர்சனமும் முன்வைக்கப்பட்டது . வெண்முரசு நூல் வரிசையின் அடுத்ததான நீலம் நூலை புத்தாண்டில் தொடங்கும் முன்னம் இவ்வாண்டின் இனி வரும் மாதங்களில் நிகழ்ந்து முடிந்த மூன்று நூல்களுக்கான தனியுரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முழு நூலுக்குமான தனியொரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126651

கடலுக்கு அப்பால்- புரட்சியும் பிறகும்

கடலுக்கு அப்பால் வாங்க   அன்பின் ஜெ,   கல்லூரியில் படிக்கும்போது ஏதோ நாம் பெரிய புரட்சி செய்யபோகிறோம் என்னும் எண்ணம் எல்லாருக்கும் இருக்கும்… அதுவும் நான் கல்லூரியில் படிக்கும் சமயத்தில்தான் அஜய் தேவ்கன் நடித்த பகத் சிங் திரைப்படம் வந்து, காந்திக்கு எதிரான மனநிலையில் தூபம் போட்டது. பிறகு சில வருடங்களுக்கு பிறகு ரங்தே பசந்தி.. அதே உணர்ச்சி கொந்தளிப்பு, போராட்ட மனநிலை. அப்போதெல்லாம் பகத் சிங்கும், நேதாஜியும் சுதந்திரம் வாங்கித்தந்து நாட்டின் தலைவர்களாயிருந்தால் நாடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126665

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் -1 யுயுத்ஸு அஸ்தினபுரியிலிருந்து திரும்பி வந்தபோது முக்தவனம் முற்றிலும் மாறிவிட்டிருப்பதை உணர்ந்தான். அவ்வுணர்வை கங்கையில் படகில் வந்துகொண்டிருந்தபோதே அறிய முடிந்தது. படகுமுனை நீண்டு துறைமேடையை நோக்கி சென்றபோது அங்கிருந்த உடல்களில் விரைவு கூடியிருப்பதை முதலில் விழிகள் அறிந்தன. எழுந்த ஓசைகளில் ஊக்கம் இருந்தது. படகு அணைந்தபோது துறைமேடை நோக்கி வந்த ஏவலர்களின் நடையில் நிமிர்வும் துள்ளலும் இருந்தது. அங்கிருந்து கைவீசி படகில் இருந்த குகர்களை நோக்கி உரக்க குரல்கொடுத்தனர். படகுகளிலிருந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126688

விஷ்ணுபுரம் விருதுவிழா அறிவிப்பு

  2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் நிகழ்கிறது. ராஜஸ்தானி அரங்கு கிடைப்பதில் இருந்த சிக்கலால் வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் நடத்துகிறோம். நண்பர்கள் விடுப்பு, முன்பதிவு ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என கோருகிறேன். வெள்ளி அன்றே காலையில் அனைவரும் வந்துவிடவேண்டும். இது ஒரு குடும்ப விழா. ஆகவே தனிப்பட்ட அழைப்பு.   இவ்வாண்டு கே.என்.செந்தில், இசை,அமிதம் சூரியா, வெண்பா கீதாயன், சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126692

வாசல்பூதம்

 “அதுமேலே ஏறி நிக்கணுமா?” லக்ஷ்மி மணிவண்ணனின் குறிப்பை சிரிப்புடன் வாசித்தேன். [கீழே] அவர் குறிப்பிடும் இந்தக் கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன் என நினைக்கிறேன். கூட்டம் முடிந்த்துமே எனக்கும் சிலபல கண்டனங்கள், அன்பான எச்சரிக்கைகள். ஏனென்றால் நான் போதுமான அளவு கண்டிக்கவில்லையாம். முகநூலில்கூட பலர் எழுதியிருந்தார் என்றார்கள்   கண்டிப்பதற்கு என ஒரு மொழி இருக்கிறது. சுந்தர ராமசாமி ஒரு புளியமரத்தின் கதையில் எழுதியதுபோல ‘லின்லித்கோவுக்குச் சவால். தைரியமிருந்தால் இங்கே வா. இங்கே நாகர்கோயில் மணிமேடையில் நின்று எனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126656

சண்டேஸ்வரர் கலைக்களஞ்சியம்- கடிதம்

இனிய ஜெயம்   கொஞ்சநாள் தமிழ் எண்ம நூலகம் பராமரிப்புப் பணிகள் காரணமாக,ஓய்ந்து நின்றிருந்தது.தற்போது செயல்படத் துவங்கிய நிலையில், நான் முன்பு வாசித்த நூலின் சுட்டியை உயிர்ப்பிக்க முடிந்தது.   திருவாவடுதுறை ஆதீனம் வெளியீடான சண்டேசுவரர் கலைக்களஞ்சியம். சண்டேஸ்வரர் எனும் தனித்த வழிபாட்டு மரபின் புராணம் வரலாறு சிற்ப வழிபாட்டுமுறை   போன்ற  அனைத்து அலகுகளும்  குறித்த விவரங்கள் பல்வேறு படங்களுடன் அடங்கிய முழுமையான நூல்.   https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZteluU2&tag=%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D#book1/   இந்த நூலின் அட்டைப்படமே சண்டேஸ்வர அனுக்ரக மூர்த்திதான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126589

ஆகுலோ ஆகுனை…

  முகில்செய்தி முகில்செய்தி- கடிதங்கள் அன்புள்ள ஜெ,   நலம் தானே. மேகசந்தேசம் பதிவு எனக்குள் எத்தனையோ நினைவுகளை கிளர்த்தியது.   முக்கியமாக… ‘ஆகுலோ ஆகுணை’ பாடலில்  வரும் இந்த இரு வரிகள்.   “ஆகலா தாகமா சிந்தலா வந்தலா, ஈ கரணி வெர்ரினை ஏகதம திருகாட” (பசியா தாகமா கவலையா கலக்கமா… இப்படி ஒரு பித்த்தியாய்  தனிமையில் திரிகையில் …)   இந்த வரிகளை முதலில் ஒரு தெலுங்கு கதை தொகுப்பின் முதல் பக்கத்தில் பார்த்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126643

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 11 இரும்புப் பாவை மடங்கி தன் மடியில் விழுந்ததும் திருதராஷ்டிரர் தோள் தளர்ந்தார். இரு கைகளும் உயிரிழந்தவை என பக்கவாட்டில் சரிய, பாவை அவர் மடியிலிருந்து நழுவி தரையில் கால் மடிந்து சரிந்து ஓசையுடன் விழுந்தது. என்ன நிகழ்ந்தது என்று அறியாமல் அனைவரும் விழி திறந்து நோக்கி நிற்க திருதராஷ்டிரர் இரு கைகளையும் தலைக்கு மேல் விரித்து விரல்களை அகற்றி விரித்து காற்றைப் பற்ற முனைவபர்போல அசைத்தார். குளிர்கண்டவர்போல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126683

Older posts «

» Newer posts