யானை டாக்டர் – கடிதங்கள்

ராகுலும் யானைடாக்டரும் அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,   ராம் தங்கம் யானை டாக்டர் குறித்து எழுதிய கடிதம் வாசித்தேன்.   நான் யானை டாக்டர் முதலில் வாசிக்கும் போது அது என்னை கவரவில்லை. ஆனால் சில வருடங்களுக்குப் பின் இரண்டாம் முறை வாசித்த போது, பல இரவுகள் அதனுடன் கழித்தேன்.   பல சிறுகதைகளை வாசித்தாலும், யானை டாக்டர், நூறு நாற்காலிகள், ஊமைச் செந்நாய், புலிக்கலைஞன் போன்ற சிறுகதைகள் ஏற்படுத்திய தாக்கத்தை வேறு எதுவும் ஏற்படுத்தவில்லை..   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127362

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-57

பகுதி எட்டு : விண்நோக்கு – 7 சுகோத்ரன் கண்களை மூடி அந்தக் காலத்தையும் இடத்தையும் கடந்து வேறெங்கோ இருந்தான். உஜ்வலன் அசைந்து அசைந்து அமர்ந்தான். அவ்வப்போது சுகோத்ரனை நோக்கினான். வேள்வி தொடர்ந்து நடக்க வெளியே பறவைக்குரல்கள் மாறுபட்டன. கீழே கங்கையிலிருந்து எழுந்த காற்று மாறுபாடு கொண்டது. அதில் நீராவியின் வெம்மை கலந்திருப்பதை உடல் உணர்ந்தது. அதுவரை காட்டிலிருந்து கங்கை நோக்கிச் சென்று சுழன்று வந்த காற்று வடக்கு நோக்கி செல்லத் தொடங்கியது. புகையை அது முழுமையாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127432

அமேசான் போட்டி, பரப்பிய எழுத்து, இலக்கியம்

  அமேசான் அமேசான் குப்பைகள் அமேஸான் – கடிதம்   அன்புள்ள ஜெமோ, சமீபத்தில் மனுஷ்யபுத்திரன் ‘திராவிட இயக்கத்தவர் அல்லாதவர்கள்’ ஒரு நாவலை எழுதவோ வாசிக்கவோ பயில்வதற்கு இருநூறாண்டுகள் ஆகும் என்று சொல்லியிருந்தார். அதை அவர் திமுகவினர் அணி அமைத்து செயல்பட்டு ,அவர்களில் ஒருவரின் நூலை அமேசான் கிண்டிலில் வெற்றிபெறச் செய்யும் முயற்சிக்கு எதிரான விமர்சனத்திற்குப் பதிலாகச் சொன்னார். உங்கள் கருத்து என்ன? நீங்களும் அமேசான் போட்டி பற்றி கடுமையான கருத்தைச் சொல்லியிருந்தீர்கள் என்பதனால் இதைக் கேட்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127393

உரையாடும் காந்தி – மறுபதிப்பு

  உரையாடும் காந்தி வாங்க   அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, இன்றைய காந்தி நூலுக்குப் பிறகு, தேசப்பிதா காந்திகுறித்து நீங்கள் எழுதிய புதியகட்டுரைகளின் தொகுப்பாக ‘உரையாடும் காந்தி’ என்னும் நூல் தன்னறம் நூல்வெளியின் வெளியீடாக கடந்த வருடம் உருவானது. சென்ற ஆண்டு முதல்பதிப்பாக அச்சடிக்கப்பட்டு வெளிவந்த இப்புத்தகம், இவ்வாண்டு(2019) இரண்டாம் பதிப்பை அடைந்திருக்கிறது. பரவலாக இப்புத்தகத்தை நிறைய மனிதர்களிடம் கொண்டுசேர்த்த சிறுவாணி வாசகர் வட்டம், விஷ்ணுபுரம் இலக்கியவட்ட தோழமைகள், காந்தி ஸ்டடி சென்டர், கோவை ரவீந்திரன் ராமசாமி, திருப்பூர் முத்துகிருஷ்ணன், எழுத்தாளர் வாசுதேவன் உள்ளிட்டவர்களின் பங்களிப்பு பெரும் நன்றிக்குரியது. இப்புத்தகத்தை வெளிச்சப்படுத்திய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127355

ஓஷோ- கடிதம்

ஓஷோ மயக்கம் -கடிதம் ஓஷோ மயக்கம் அன்பு ஜெயமோகன்,   ஓஷோ மயக்கம் குறித்த எனது பார்வை இது.   நவீனகால இளைஞர்களைக் கவர்பவராக ஓஷோ இருப்பதில் வியப்பில்லை. அக்கவர்ச்சியை அவர் விரும்பினார் என்றே உத்தேசிக்கிறேன். அக்கவர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ளும்படியான தர்க்க உரையாடல்களை அவர் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருந்தார். என்னளவில், அவர் சிந்தனையாளரன்று; கலகக்காரர். அழுத்திக்குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறேன். அவர் வெறும் கலகக்காரர். இதை வெறுப்புணர்ச்சியில் சொல்வதாக நண்பர்கள் விளங்கிக் கொண்டுவிடக் கூடாது. அவரின் சொற்பொழிவுகளைப் பல்லாண்டுகளாக உள்வாங்கியவன் எனும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127358

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-56

பகுதி எட்டு : விண்நோக்கு – 6 யுதிஷ்டிரனின் குடில் முன் இறங்குவதுவரை உஜ்வலன் ஒன்றும் சொல்லவில்லை. குடிலில் யுயுத்ஸு மட்டும் இருந்தான். அவர்களை அவன் எதிர்கொண்டு “அரசரும் உடன்பிறந்தாரும் கங்கைக்கரைக்குச் சென்றுவிட்டார்கள். வேள்வியில் அமர்ந்திருக்கிறார்கள். நீங்களும் அங்கே செல்லலாம் என ஆணை” என்றான். அவன் முகமும் குரலும் இறுக்கமாக இருந்தன. அவன் விழிகளிலிருந்த விலக்கத்தை சுகோத்ரன் உணர்ந்தான். “இளைய யாதவர் எங்கே?” என்றான். “அவர் தன் குடிலிலேயே இருக்கிறார்” என்றான் யுயுத்ஸு. “ஏன்?” என்று உஜ்வலன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127387

ருஷ்ய இலக்கியம் வாசிப்பதன் தடைகள்

  அன்புள்ள ஜெ,   நலமா? ரஷ்ய இலக்கியம் வாசித்தல் சார்ந்த சில கேள்விகளை முன்வைக்க நினைக்கிறேன். நீங்கள்,எஸ்.ரா,கமல் ஹஸன்,மிஸ்க்கின் போன்ற நான் மதிக்கும் பலர் சொல்லி, ரஷ்ய இலக்கியம் வாசிக்க, செவ்விலக்கிய நாவல்களாகிய – குற்றமும் தண்டனையும், தி Idiot , போரும் அமைதியும், புத்துயிர்ப்பு போன்ற நாவல்களை வாசிக்க கடந்த சில மாதங்களாக முயற்சி செய்தேன். கு.த மற்றும்  idiot இரண்டும் சொல்லி வைத்தார் போல 300 பக்கங்கள் தாண்டியதும் losing track  என்று சொல்வது நிகழ்ந்தது. போரும் அமைதியும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127315

அறம்- கடிதங்கள்

அறம் வாங்க   வணக்கம் ஜெமோ ! நலமா ?   உங்களை கடந்த மாதத்தில் சந்தித்த பிறகு நீங்கள் கொடுத்த யானை டாக்டர் ஒரே இரவில் படித்து முடித்தேன். அப்படியே Dr. K உடன் நானும் காட்டிலேயே நடந்த உணர்வு. அருமையான பதிவு. இன்று அறம் நூலை முடித்து விட்டேன். அருமையான மனிதர்களைப் பற்றிய அரிய பொக்கிஷம். நாகர்கோவிலில் வளர்ந்து இன்று பல ஆயிரம் மையில்களுக்கு அப்பால் வாழும் என்னைப் போன்றவர்களுக்குக்கு நினைவுப்பாதையில் சென்றுவந்த அனுபவம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127212

மகரிஷி- கடிதங்கள்

அஞ்சலி:மகரிஷி மகரிஷி கடிதங்கள் அன்புள்ள ஜெயமோகன் தாங்கள் என் தந்தைக்கு (எழுத்தாளர் மகரிஷி)எழுதிய அஞ்சலியை படித்தோம். மிகவும் பொறுத்தமாகவும் , நெகிழ்வாகவும் இருந்தது.   உங்கள் எழுத்தில் இருந்த உண்மைக்கு மகரிஷியின் குடும்பம் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளது. நன்றி உங்கள் ஸ்ரீவத்ஸன்   அன்புள்ள ஸ்ரீவத்சன் அவர்களுக்கு நன்றி நான் இளமைப்பருவத்தில் வாசித்த எழுத்தாளர். இன்றும் நினைவில் நிற்கிறார் என்பதனாலேயே அவருடைய இடமென்ன என்பதை உணர்ந்தேன். ஜெயமோகன் அன்புள்ள ஜெ மகரிஷி பற்றிய கட்டுரை சிறப்பாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127258

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-55

பகுதி எட்டு : விண்நொக்கு – 5 முற்புலரியில் சுகோத்ரன் கண்விழித்து எழுந்தான். அவன் திண்ணையில் அமர்ந்தபடியே துயில்கொண்டுவிட்டிருந்தான். எழுந்து நின்றபோதுதான் உடலின் வலி தெரிந்தது. சூழ்ந்திருந்த இருளில் நூற்றுக்கணக்கான செந்நிற ஒளித்துளிகள் அலைந்தன. பந்தங்கள், பளிங்குக்குழாய் போட்டு மூடப்பட்ட பீதர்விளக்குகள், சிற்றகல்கள். தொலைவில் கங்கையின் கரையோரமாக ஒளியாலான ஒரு நீண்ட வேலி தென்பட்டது. அவன் உள்ளே சென்று உஜ்வலனை தட்டி எழுப்பினான். அவன் தொட்டதுமே உஜ்வலன் எழுந்துகொண்டு வாயைத் துடைத்துவிட்டு “விடிந்துவிட்டதா?” என்றான். அப்போது இளஞ்சிறுவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127184

Older posts «

» Newer posts