தினசரி தொகுப்புகள்: November 30, 2024
இயற்கையில் மலர்தல்
https://youtu.be/-cX736qA3YA
பருவமாறுதல்களை ஒவ்வொரு நாளுமென உணரும் வாழ்க்கையே உயர்வானது. அசௌகரியங்களாக மட்டுமே பருவங்களை அறிபவர்களே நம்மில் பெரும்பாலானவர்கள். கொண்டாட்டமாக, சுவைகளாக பருவங்களை அறியமுடியும். அதுவே இயற்கையின் இன்பங்களை பெற்றுவாழும் முழுமையான வாழ்க்கை.
வரலாறும் இலக்கியமும்
அன்புள்ள ஜெ சார்,
புனைவெழுத்தாளனை வரலாற்றாசிரியனாக காணக் கூடாது என்கிற உங்களது வரி சற்று ஆச்சரியமளிக்கிறது. காலம், வெளி ஆகியவற்றின் தடைகளை மீறி மற்ற வாழ்க்கைகள் எப்படி இருந்திருக்கும், அம்மனிதர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்றறிய...
மீதி இருள்
தமிழில் எழுதப்பட்ட தொடக்ககால நாவல்களில் ஒன்று. அருமைநாயகம் எழுதிய இந்நாவல் ஒரு கிறிஸ்தவ மதப்பிரச்சாரக் கதை. நாவல் வடிவில் ஒரு குடும்பத்தின் கதைச்சுருக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பின்னரும் இந்து...
கதாநாயகி வாசிப்பு- அட்சயா
அன்புள்ள ஜெ ஐயா,
வணக்கம்.நலம் நலம் அறிய அவா. தங்களின் கதாநாயகி நாவலை சமீபத்தில் வாசித்தேன்.இந்த நாவலை பற்றிய அறிமுகம் எனக்கு தங்களின் நேர்காணலை காணும் போது அறிந்து கொண்டேன்.அந்த புத்தகத்தை இணையத்தில் பதிவிறக்கம்...
புதுவை வெண்முரசு கூடுகை- 77
அன்புள்ள நண்பர்களே,
வணக்கம்,
வியாச மகாபாரதத்தின் நிகழ்காவியமான வெண்முரசு நாவல் வரிசையில் எட்டாவது நூலான “காண்டீபம்” குறித்த மாதாந்திர கலந்துரையாடலின் 77 வது கூடுகை 30.11.2024 சனிக்கிழமை அன்று மாலை 6:30 மணிக்கு நடைபெற இருக்கிறது. காண்டீபம் நூல் முழுமையும் முன்வைத்து நண்பர் தாமரைக்கண்ணன் உரையாடுவார். நிகழ்வில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.
இடம்:
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,
# 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001.
தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306
பேசு பகுதி:
வெண்முரசு நூல் - 8.
காண்டீபம் முழுமையும்
“ஒரு மீள் பார்வை”
கலை கண்விழித்தல்
அந்தியூரில் நிறுத்தி காலை உணவு சாப்பிட நினைத்தோம் . கோவில் முன் பூவிற்ப்பவர் , ஒரு கடை காட்டி அங்கே சாப்பிட வேண்டாம் என்றார். பின்னர் மாடியில் ஒரு மெஸ்ஸை சிபாரிசு செய்தார்....