தினசரி தொகுப்புகள்: July 20, 2024
வேதங்களை எல்லாரும் கற்கமுடியுமா?
https://youtu.be/HIZy2yr6vyM
இந்து மெய்ஞானம் பற்றிய எந்த விவாதத்திலும் ஒருவர் கேட்பார், ”வேதங்களை எல்லாரும் கற்கமுடியுமா?” என்று. அந்தக் கேள்விக்கு முன் இந்துக்களில் பெரும்பாலானவர்கள் திகைத்துவிடுவார்கள். உண்மையில் அக்கேள்விக்கான விடை என்ன?
இந்து மதம் என்றாலே பழையஆசாரங்கள் மட்டும் தானா?
தமிழ் விக்கி என்ற பெயரில் நான் பிரம்மாண்டமான இணையக் கலைக்களஞ்சியம் ஒன்றை தொகுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் தகவல்கள் சேர்ப்பதற்காக கேள்விகளை அனுப்பி பதில்கள் வாங்குவதுண்டு. ஒரு கேள்வி ’மத நம்பிக்கை உண்டா?’ என்பது....
யோ. ஞான சந்திர ஜாண்சன்
யோ. ஞான சந்திர ஜாண்சன் தமிழ் ஆய்வாளர், பேராசிரியர். தமிழ்க் கிறிஸ்தவ இலக்கியங்களை ஆய்வு செய்வதில் ஈடுபாடு கொண்டவர். தமிழ்க் கிறிஸ்தவ இலக்கியத்திற்கு பங்களிப்பாற்றியவர்கள், தமிழ்க் கிறித்தவக் கீர்த்தனைகள், தமிழ்க் கிறித்தவக் காப்பியங்கள்...
படுகளம், வாசிப்பு
நலம் விழைகிறேன்.
படுகளம் நாவல் வாசித்தேன்.
ஒரு கலைஞனை வியாபார சூழல் தூண்டும் போது அவனுளிருக்கும் வியாபாரி விழித்துக் கொள்கிறான். பொதுவாக சாதாரணனிலிருந்து கலைஞன் விழித்துக்கொள்வது நடக்கும். ஆனால் இங்கு கலைஞனிலிருந்து வியாபாரி. ஏனோ தானோ...
ஒரு நூல், ஒரு வாசிப்பு, ஓர் உரையாடல்
https://vishnupuram.com/ நாவல் பற்றிய பார்வைகளுக்காக
விஷ்ணுபுரம் வாங்க
விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ,
இந்த ஜூலையோடு விஷ்ணுபுரம் நாவலை நண்பர்களோடு சேர்ந்து வாசித்து முடித்து ஒரு வருடம் ஆகிறது. கடந்த வருடம் பிப்ரவரியில் ஒரு விஷ்ணுபுரத்தை மறுவாசிப்பு செய்யப்போவதாக நண்பர்களிடம் கூறினேன். அதில் தாங்களும் இணைவதாகக் கூறியவர்கள் அப்படியே செய்தியைப் பரப்ப சுக்கிரி குழுமத்தில் இருந்து இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு வாராவாரம் சில அத்தியாயங்களைப் படித்து இணையவழி உரையாடலில் எங்கள் வாசிப்பினைப் பகிர்ந்துகொண்டோம்.
இந்த விவாதங்களில் விஷ்ணுபுரத்தின் வடிவமும், தத்துவச் செறிவும் அனைவரிடமும் பெரும் தாக்கத்தையும், கேள்விகளையும் உண்டாக்கியபடியிருந்தன. வெள்ளிமலை தத்துவ வகுப்புகளுக்கு சென்றுவந்திருந்த நண்பர்கள் அந்த கேள்விகளுக்கு தகுந்த விளக்கங்களை அளித்தனர். ஒரு வகையில் மனதுக்குள் மீண்டும் உருவான விஷ்ணுபுரத்தின் உலகம் ஒவ்வொரு வாரமும் செறிவாகிக்கொண்டே வந்தது.
ஒட்டுமொத்த நாவலின் வாசிப்பும் முடிந்து கடந்த வருடம் ஜூலை மாதத்தில் ஒரு சிறப்பு உரையாடலோடு நிறைவு செய்யலாம் என்று முடிவெடுத்து கடலூர் சீனுவை அழைத்திருந்தோம்....
Everything is gold
Humans' sense of beauty is another form of desire for wealth. His desires have compelled him to personify the deity in this way. That...