தினசரி தொகுப்புகள்: November 21, 2023

பெருமாள் முருகனுக்கு ஜேசிபி விருது

இந்திய இலக்கியங்களின் ஆங்கில மொழியாக்கங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஜே.சி.பி விருது இந்த ஆண்டு பெருமாள் முருகனின் ஆளண்டாப்பட்சி நாவலின் ஆங்கில மொழியாக்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது (FIRE BIRD). ஜனனி கண்ணன் மொழியாக்கத்தை செய்திருக்கிறார். பெருமாள் முருகனுக்கும் ஜனனி...

கதைப்புள்ளிகளின் கோலம்

ரப்பர் வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, காடு வாசித்து விட்டு உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அந்த கடிதத்தில், நான் யார், என்ன செய்கிறேன் என்பதை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பதை உங்கள் இணையத்தில் அந்த கடிதம் வெளிவந்து,...

ராஜ் சிவா

ராஜ்சிவா  அறிவியல் மற்றும் உலகளாவிய மர்மங்கள் ஆகியவை குறித்த கட்டுரைகள் எழுதி வருபவர். கிழக்கு ஈழத்தின் திருகோணமலையில் பிறந்து, வட ஈழத்தின் பருத்தித்துறையில் வாழ்ந்தவர். யுத்த சூழ்நிலைகளால் ஜெர்மனிக்குப் புலம் பெயர்ந்து இன்றுவரை...

ஆழ்வார், கடிதம்

அன்பிற்கினிய ஆசான் ஜெயமோகன் அவர்களுக்கு, தமிழ் இலக்கியத்தில் நான் ஒரு ஆரம்ப கட்ட மாணவன். நண்பர் செல்வேந்திரன் மூலம் தங்கள் படைப்புகளின் அறிமுகம் கிட்டியது. அறம், இன்றைய காந்தி, தன்மீட்சி போன்ற படைப்புகள் என் வாழ்க்கைப் பார்வையை மாற்றியவை. நாலாயிர திவ்ய பிரபந்தம் வகுப்புகள், வெள்ளிமலையில் எனது முதல் அனுபவம். வழிகாட்டியமைக்காக, நண்பர்கள் மலைச்சாமி, கண்ணூர் மற்றும் செல்வேந்திரன், ஓசூர்,அவர்களுக்கு எனது நன்றிகள். ஆசிரியர் திரு. ஜா. ராஜகோபாலன் அவர்களுக்கு எனது குரு வணக்கத்துடன்  கூடிய நன்றிகள். ஒரு சிறந்த ஆசிரியரின் சிறப்பே அவர் எடுத்தாளும் உதாரணங்கள் தான். அந்த வகையில் ஆசிரியர் திரு. ராஜகோபாலன் அவர்கள் எளிமையான உதாரணங்களை மட்டுமல்லாமல் கூடுதல் தகவல்களையும் பகிர்ந்தார். அது அவர் எந்த அளவு இந்த வகுப்புகளுக்கு தயாராகி வந்திருந்தார் என்பதை சொல்லாமல் சொல்லியது. இருபது வருடங்களாய் ஆசிரியராக பணி  செய்து வருவதால், ஒரு பாடத்தை தெளிவாக...

பூன் முகாம், கடிதம்

  முகாம் நிகழும் தங்குமிடத்தை அடைந்ததுமே  பைகளை கிடைத்த இடத்தில் வீசிவிட்டு கேட்ட முதல் கேள்வி  “ஆசான் பேசிக்கொண்டிருக்கிறாரா?”.  இல்லை. கொஞ்ச நேரம் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன், ஒரு வருடத்துக்கு பின் சந்திக்கிறோம் ஆனால் எந்த...

சுந்தர ராமசாமி இணையதளம்

சுந்தர ராமசாமியின் புகைப்படங்கள், கட்டுரைகள், அரிய கடிதங்கள் மற்றும் படைப்புகள் அடங்கிய இணையதளம். சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுந்தர ராமசாமி இணையதளம் https://sundararamaswamy.in/kavithai.php