தினசரி தொகுப்புகள்: August 28, 2023

சரி, அப்றம்?

எப்போதும் அருண்மொழி என்னிடம் கேட்பது ஒன்றுண்டு,  'உனக்கு மட்டும் ரயிலில் அத்தனை கதாபாத்திரங்கள் எப்படி அமைகின்றன?' அவளுக்கும் அண்மையில் அப்படி ஒரு கதாபாத்திரம் அமைந்தபோது அது எப்படி என அவளுக்குப் புரிந்தது. நெறிகள்...

மேகலா சித்ரவேல்

மேகலா சித்ரவேல் எளிமையான நடையில் பொதுவாசிப்புக்குரிய பல படைப்புகளை எழுதினார். தேவையற்ற வர்ணனைகள் இல்லாமல் யதார்த்தத்தை, உண்மை நிகழ்வுகளை, அனுபவங்களைப் பேசுவதாக இவரது படைப்புகள் அமைந்தன. அனுராதா ரமணன், ரமணி சந்திரன் வரிசையில்...

கந்தர்வனும் யட்சனும்- கடிதம்

படையல் வாங்க பழையநிலங்களில் முளைத்தெழல் படையல் தொகுப்பின் இந்த இரண்டாவது சிறுகதை முதல் கதை “கந்தர்வனின்“ தொடர்ச்சியாக நிகழ்கிறது.  யட்சன் இரவில் கண்ணுடையவன் என்று பொருள் கொள்வோமானால்… திருக்கணங்குடி  கோயில் கோபுரத்திலே சிலையா நிக்கப்பட்ட யட்சனாக்கும்டே  நான்னு...

மீள்வு -கடிதம்

இரு வாழ்க்கைகள், இரு பாதைகள்- கடிதங்கள் மீள்தல், அமிழ்தல் அன்புள்ள ஜெ நம்பிக்கையும் நம்பிக்கை இழப்பும் தெரியும் இரண்டு கட்டுரைகள். ஒருவர் நம்பிக்கை வழியாக தன்னை மீட்டுக்கொண்டார். பயனுள்ள வாழ்க்கையை வாழ்கிறார். பயனுள்ள வாழ்க்கை என்றால் தனக்கும்...

பாதை, கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களின் ஆலோசனைகளுக்கு நன்றி. (நாம், நமது உள்ளம்)  தன்னை கடத்தல் ஆர்டர் செய்துள்ளேன். தற்போது மனம் அமைதி அடைந்துள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் எழுந்து நடமாடுவேன். என்னுடைய பிரச்சினை என்பது ஆன்மீக வறுமை என தோன்றுகிறது. மொத்த பிரபஞ்சத்தை மையமாக்கி பார்க்கும் பார்வை எனக்கு மரபிலிருந்து கிடைக்கவில்லை. பால்யத்தில் ஒரு மரபான தொடர் இருந்திருந்தால் இதுபோன்ற சிக்கல் எனக்கு வராதோ என நிறைய தடவை யோசிப்பேன். நான் சாமி கும்பிடுவதில்லை. முன்பு எதன் மீதும் நம்பிக்கை இல்லை. ஆனால் பல்வேறு அலைக்கழிப்புக்கு பின் நான் கண்டடைந்தது சில உள்ளன என தோன்றுகிறது. இப்போது எல்லாவற்றையும் நம்ப முயல்கிறேன். ஆனால் 25 வருட பழக்கம் எளிதல் விடுபடாது என்றும் தோன்றுகிறது. தன்மீட்சி நூல் வாங்க தன்னைக் கடத்தல் நூல் வாங்க ஒளிரும்...