தினசரி தொகுப்புகள்: April 23, 2023
மகிழ்ச்சிக் கணக்கு
அன்புள்ள ஆசிரியருக்கு,
ரம்யாவின் கடிதத்தை படித்தேன். (மதுமஞ்சரி – கடிதம் )
மஞ்சரி பற்றிய அவரின் எண்ணங்கள் என்னை என்ன செய்கிறது என தொகுக்க இயலவில்லை. நான் எண்ணுவதை எழுத்தாக்கும் வலிமை என்னிடம் இல்லை என்றே...
பாலூர் கண்ணப்ப முதலியார்
தமிழில் கல்வி தொடங்கிய காலகட்டத்தில் நவீன உரைநடைக்கும் மரபிலக்கியத்திற்கும் பாலமாக அமைந்தவை அன்று எழுதப்பட்ட பாடநூல்கள்.அவற்றை எழுதியவர்களில் பாலூர் கண்ணப்பமுதலியார் முக்கியமானவர்.
ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள்’ – கடிதம்
பஷீரிய அழகியலைக் கையிலெடுத்த இளம் தலைமுறைப் புனைவு எழுத்தாளர்கள் தமிழில் குறைவே. வாசிப்பதற்கு எளிமையாகத் தோன்றும் அவை எழுதுபவருக்கு அத்தனை எளிமையான ஒன்றாக இல்லாமலிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அஜிதனின் 'ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள்' ...
’வெயில்’ மூன்று கவிதைகள், சதீஷ்குமார் சீனிவாசன்
வெயில்
வெயில் ஒரு பிரிவுணர்ச்சிபோல
எங்கும் பரவியிருந்தது
சிமென்ட்டால் ஆன பறவைகள்
சுற்றுசுவர்களில் சமைந்து நின்றன
நீர்மோர் பந்தல்களில்
மதிய நேர கூட்டம்
டயர்களின் மணம் சாலைகளில்
மிதந்துகொண்டிருந்தது
இந்த வெயிலில்
யாருக்கும்
எந்த தீங்கும் நிகழவேண்டாமென
விரும்பாத எதுவும் நடக்க வேண்டாமென
ஒரு கணம் நினைத்துக்கொண்டேன்
அந்திவரையிலாவது
எல்லோரையும் காப்பாற்று வெயிலே
பறிகொடுத்த வெயில்
இன்று...
இவான் இல்யிச்சின் மரணம், கடிதம்
அன்பின் ஜெ,
வணக்கம்.
மரணம் குறித்தான பயமும், அது சார்ந்த கேள்விகளும்தான் என் தேடலைத் துவக்கிய முக்கியப் புள்ளிகளாய் இருந்தன. யோசித்துப் பார்த்தால், "சுய மரணம்" கூட அல்ல, நாம் மிகுந்த பிணைப்பு கொண்டிருக்கும், அன்பு செலுத்தும்/அன்பைப் பெறும் ஒருவரின்...