2023 February

மாதாந்திர தொகுப்புகள்: February 2023

எழுகதிர் நிலம்-7

தவாங்கில் இருந்து பெப்ருவரி 13 ஆம் தேதி அஸாம் நோக்கி கிளம்பினோம். இந்த பயணத்தில் இரண்டுநாட்கள் அனேகமாக எதுவுமே பார்க்கவில்லை. ஆனால் பயணமே ஒரு பெரிய சுற்றுலா அனுபவமாக அமைந்தது. முதலில், முந்தையநாள்...

முக்தா சீனிவாசன்

நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டம் முதல் தமிழ் வார இதழ்களில் முக்தா சீனிவாசனின் கதைகள் கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருந்தன. நினைவில் நிற்கும் ஒரு கதைகூட இல்லை. பெரும்பாலானவை கதைச்சுருக்கங்கள் மட்டுமே. ஆனால் அவர் எழுதிய...

தத்துவ அறிமுகம், கடிதம்

அன்புள்ள ஜெ, தத்துவ அறிமுக பயிற்சி வகுப்பு முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு அமர்வும் தீவிரமும் ஆழமும் சரிவிகிதமாக கலந்திருந்தமையால் சலிப்பின்றி கற்க முடிந்தது. இந்திய சிந்தனை மரபிற்கும் மேற்கத்திய சிந்தனை மரபிற்குமான...

சுபிட்சமுருகன் – வெங்கி

சுபிட்சமுருகன் வாங்க  அன்பின் ஜெ, அன்பும், வணக்கங்களும். நேற்று சரவணன் சந்திரனின் "சுபிட்ச முருகன்" வாசித்தேன். மேம்போக்கான, வணிக நாவல் வாசகர்கள் துணுக்குறல்களையும், அதிர்ச்சிகளையும் சந்திக்கக் கூடும். ஆழமான, பாதிக்கும் மேல் வேறொரு தள்த்தில் நிகழ்வதுமான நாவல்; சித்தர் அனுபவங்களும், தேடலின்...

முகாம்கள், கடிதங்கள்

அன்புள்ள ஜெ, குருஜியின் யோகா வகுப்பு முதல்முறை நடந்தபொழுதே பங்குபெற முடியாமல் போய்விட்டது. மீண்டும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தந்தமைக்கு நன்றி. வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டால் தாமதமாகிவிடுமோ என்று வியாழனன்றே சென்றுவிட்டேன்.  நான் பாதி வழியில் திரும்பிவிடாமல் இருக்கவேண்டி ஶ்ரீநிவாசன் என்னை அழைத்துச்சென்று, அப்போதுதான்...

எழுகதிர்நிலம்- 6

நாங்கள் 2011ல் பூட்டான் சென்றபோது அங்கே முதன்மையாக சென்ற இடம் புலிக்குகை மடாலயம். செங்குத்தான மலையுச்சியில் அமைந்துள்ள அந்த பௌத்த ஆலயம்  பத்மசம்பவர் லடாக்கில் இருந்து ஒரு புலிமேல் வந்திறங்கிய இடம் எனப்படுகிறது....

எம்.எஸ்.கல்யாணசுந்தரம்

ஓர் எழுத்தாளர் எழுதியவை இரண்டே நாவல்கள். ஒன்று, அவர் வாழும் காலத்தில் வெளிவந்தது, ஆனால் கவனிக்கப்படவில்லை. இன்னொன்று முப்பதாண்டுகளுக்குமேல் அவருடைய நண்பரின் கையிலேயே இருந்து அவர் மறைந்து இருபதாண்டுகளுக்குப்பின் அச்சேறியது. ஆனால் அவர்...

சுக்கிரி, கடிதம்

 ஆசிரியருக்கு வணக்கம்,  சுக்கிரி குழுமம் 2020 ஆம் ஆண்டு உங்களின் உலக வாசகர்களால் தொடக்கப்பட்டு ஒவ்வொரு சனிக்கிழமையும் இரண்டு கதைகள் என விவாதித்தோம்.மாலை ஆறு மணிக்கு துவங்கிய விவாதம் எட்டு மணிக்கு பின்பும் தொடர்ந்ததால்.வாரம் ஒரு கதையை...

ஜிஜுபாய் பதேக்காவின் “பகல் கனவு” -வெங்கி

அன்பின் ஜெ. ஜிஜுபாய் பதேக்காவின் "பகல் கனவு" வாசித்தேன். கல்வியியல் சார்ந்த மிக நல்ல படைப்பு. 1910-களில் கல்வித் துறையில் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் கனவும் செயல்முறைகளும கொண்டது. சுவாரஸ்யம் மிகுந்த, அருமையான சிறிய நூல். 1932-ல்...

இந்து மரபு – இருநூல்கள்- கடிதம்

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க இந்து ஞானமரபில் ஆறுதரிசனங்கள்- மின்னூல் வாங்க இந்து மெய்மை மின்னூல் வாங்க இந்து மெய்மை வாங்க பேரன்புக்குரிய ஜெ, இந்து மெய்மை இந்து மதம் பற்றிய நுணுக்கமான புரிதல் இக்கட்டுரைகள் வாயிலாக அடைய முடிகின்றது....