தினசரி தொகுப்புகள்: September 28, 2022

புதிரின் நண்பன் நான் (கல்பற்றா நாராயணன் உரை)

https://youtu.be/eu_CW-aLyHc யாருக்காவது ஒரு புதிரின் (enigma) நண்பனாக இருக்க முடியுமா? இமயம் ஒரு புதிர்,  கடல் ஒரு புதிர்.  கிறிஸ்து ஒரு புதிர் என்பதால்தான் அவர் ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்ததாக சொல்லப்படுகிறது.  அதேபோலத்தான்...

கோவி.மணிசேகரன் எனும் மர்மம்

1992ல் கோவி மணிசேகரனுக்கு லில்லி தேவசிகாமணி விருது வழங்கப்பட்டது. அன்று முப்பது வயதான இளம்படைப்பாளியாகிய எனக்கும் அவ்விருது வழங்கப்பட்டது. கோவி மணிசேகரனுடன் என்னை சமானமாக வைத்ததை ஏற்கமுடியாது என நான் அவ்விருதை மறுத்துவிட்டேன்....

சி.மணி நினைவுக்குறிப்பு

சி.மணி வனம் இதழில் சாகிப் கிரான் கவிஞர் சி.மணி பற்றி எழுதியிருக்கும் நினைவுக்குறிப்பு அழுத்தமான ஒரு வாழ்க்கைச் சித்திரம். மிகையற்ற, ஆனால் கூரிய விவரணைகள் வழியாக கவிதையை இழந்து இறுதி நோக்கிச் சென்றுகொண்டிருந்த கவிஞரை...

அறுபது, இரு கடிதங்கள்

சியமந்தகம் தொகைநூல் வாங்க கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள் நன்றிகளும் வணக்கங்களும் அன்புள்ள ஆசிரியருக்கு , உங்களை நான் நேரில் சந்தித்தது ஒரே ஒரு முறைதான் ஆனால் மனத்திற்குள்ளாக அந்தச்  சந்திப்பு பல நூறு முறை நடந்து முடிந்து விட்டிருந்தது. அல்லிமலர் விரி சிறு குளத்தைத் தாண்டி, சாரதா நகர் வீட்டில் தங்களைச்  சந்தித்த அந்தத் தருணம் என்றும் எனக்குள்ளாக பூரித்து நிறைந்திருக்கும். வாஞ்சையுடன் என் மகளை தழுவிக்கொண்டதை கண்டபோது தங்கள் மகனும் மகளும் எவ்வளவு பாசமிகு ஒரு தந்தையின் குழந்தைகள் என உணர முடிந்தது. ஆகப்பெரும் இலக்கிய  ஆளுமை , மிகச்சிறந்த பயணி , தேர்ந்த விவாதி ,நேர ஆளுமையின் உச்சம்  மற்றும் தற்போதைய தமிழ் சினிமா உலகின் உதடுகள் உச்சரிக்கும் திரைக்கதையாளர் இன்னும் பல,.. எனும் உச்சங்களை தொட்டிருக்கும் ஒருவரை   சந்திக்கும் சிறு உதறுதலுடன்தான் தங்களை ஆகஸ்ட் 2022 ,16 ம் தேதி அன்று காண வந்திருந்தேன் . ஆனால் எந்த ஒரு கிரீடத்தையும் தன் தலையில் சூடாத,எவர் ஒருவரையும் இயல்பாய் உணர வைக்கிற ஒரு அற்புத மனிதரைத்தான் அன்று சந்தித்தேன். நேரம் கருதியும் முதல் சந்திப்பின் பதட்டத்திலும்  என்னால் கோர்வையாய் பேச முடியவில்லை. அந்தச் சிறு சந்திப்பிலும், பெருகி வரும் எதிர்மறை எண்ணங்கள் குறித்த தங்களது ஆதங்கத்தையும் சிறிதும் அவற்றை பொருட்படுத்தாது பெருகிவரும் ஓரு  சிறு இளைஞர் கூட்டத்தையும் பற்றி பகிர்ந்து கொண்டீர்கள். ஏன் இத்தனை எழுத்தாளர்கள் இருக்கையில் ஆசிரியர் ஜெயமோகனை எனக்கு அணுக்கமாக உணர்கிறேன் , நிச்சயம் அது அறம் சிறுகதைகள்...

இசைரசனை முகாம், கடிதம்

அன்புள்ள ஜெ, நலம். மேற்கத்திய இசை பயிற்சி முகாம் ஏற்பாடு செய்தமைக்கு நன்றி. அது ஒரு நல்ல அனுபவம். இசையை வெறும் இசையாக கேட்டு இரசித்துள்ளேன், பெரும்பாலும் நம் நாட்டு இசையை மட்டுமே அதிகம்...