தினசரி தொகுப்புகள்: October 14, 2021
தத்துவம் இன்று…
ஆசிரியருக்கு வணக்கம்,
இலக்கியவாதிகள் வாசிப்பு, படைப்பு ஆகிய தளங்களில் செயல்படுகிறார்கள். ஆன்மீகவாதிகள் சொற்பொழிவுகள் மற்றும் தினசரி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள். வரலாற்று ஆய்வாளர்கள் கூட தொடர்ந்து தங்களது களங்களில் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள்.
இந்த தத்துவவாதிகள் என்ன...
யானை முந்திவிட்டது
இன்று உலகத்தின் சனத்தொகையில் பாதிக்கு மேல் செல்பேசி சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். இன்னும் பத்து வருடத்தில் உலக சனத்தொகையில் 90 விழுக்காடு மக்கள் செல்பேசி வைத்திருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஆனால் இன்னும் கூடிய ஆச்சரியம்...
காத்தருள்க என் மகவை- கடிதங்கள்
அன்பு நிறை ஜெ
கண்களில் நீர் கோட்காமல் இந்த கடித்ததை என்னால் எழுத முடியவில்லை. எண்ணற்ற பொழுதுகளில் எழுத்தால் உடைந்தெழுந்துருக்கிறேன்.இயல்பற்று அடிக்கடி கண்களில் நீர்சிக்கும் எண்ணற்ற பொழுகளை உங்கள் எழுத்துஅளித்துள்ளது.
தொடக்கம் முதலே என் கண் உங்களை விட்டு அகலவில்லை.சைந்தவி பாடிமுடித்த அந்த நொடிப்பொழுதில் கண்ணாடியை அகற்றி விரல்களால்கண்துடைத்தீர்கள் .உணர்ச்சிபெருநிலையில் நீலம் மலர்ந்த பொழுதில் இருந்த உளகொந்தளிப்புக்கு உங்கள் மனம் சென்றுவந்திருக்கும் .
இன்று இங்கு பங்கெடுத்து இந்த மாபெரும் கலைபடைப்பின் முன்பு அதன் பக்தனாக ஆகாமல் அதை அறிதற்கியலாது என்றுணர்ந்தேன்.தன்னை உடைத்து வார்க்காதவனுக்கு ஆன்மீகம் இல்லை , ஒரு நுண் தத்துவத்தை, ஒருகலைஅழகை உணரும் உணர்கொம்பு என்பது எந்த உடலுறுப்பை விடவும் மகத்தானது. மிகமிகஅபூர்வமானது. பிற கோடானுகோடிகளை விட மேலான இடத்தில் ஒருவனை நிறுத்துவது. அவன்தன்னை ஆக்கிய வல்லமைக்கு என்றென்றும் நன்றிகூறவேண்டியது.
நன்றி
ரகுபதி கத்தார்.
https://youtu.be/XWkDEyiS16I
அன்புள்ள ஜெ
கண்ணானாய் காண்பதும் ஆனாய் என்னும் வரி வண்டு ரீங்கரிப்பதுபோல சுழன்றுகொண்டே இருக்கிறது. நீலம் வாசித்த நாட்கள் கனவுபோல சென்றுவிட்டன. நான் என் மனைவியிடம் சொல்வதுண்டு, அது ஒரு ஹனிமூன்...
வெற்றி – கடிதம்
வெற்றி -முடிவாக
வணக்கம் ஜெ
வெற்றி சிறுகதை வாசித்தேன். கதை வாசிக்கும் உணர்வே இன்றி மடமடவென சென்றுவிட்டது. ரங்கப்பர், நமச்சிவாயம், லதா இவர்களில் யார் வென்றது? ஒரு வகையில் பார்த்தல் மூவரும்தான் என்று தோன்றுகிறது. யார்...
கம்பராமாயணம் வாசிக்க…
கம்பன் மொழி
கம்பன் எழுதாதவை
கம்பன் நிகழாத களங்கள்
கம்பன் கண்ட மயில்
அன்புள்ள ஜெ
நண்பர்கள் இணைந்து கம்பராமாயணம் வாசிக்க தொடங்கியுள்ளோம். நேற்று இருமணிநேரம் ஒதுக்கி கூட்டுவாசிப்பை மேற்கொண்டோம். சில இடங்களில் பொருள் விளக்க பகுதிகளில் பாடலில் பயின்று...