தினசரி தொகுப்புகள்: January 4, 2021
மலை மாதேஸ்வரர் கோயில்
மீண்டும் ஈரட்டியில் மூன்றுநாட்கள் இருந்தேன். திருச்சியில் இருந்து பச்சைமலை வழியாக ஈரோடு சென்று அங்கிருந்து ஈரட்டி பங்களா சென்றோம். என்னுடன் கதிர்முருகன், ஜெயராம், யோகேஸ்வரன், அந்தியூர் மணி ஆகியோர் இருந்தார்கள்.
ஈரட்டியில் மழைக்காலம் இன்னும்...
வல்லினம் சிறுகதைச் சிறப்பிதழ்
வல்லினம் இணைய இதழ் ஒவ்வொரு ஆண்டும் முதல் இதழை சிறுகதைச் சிறப்பிதழாக கொண்டுவருகிறது. சென்ற ஆண்டு என்னுடைய யாதேவி என்னும் சிறுகதை வெளியாகியது. அது ஒரு தொடக்கம், அந்தப் பயணம் நூறுகதைகளில் முடிந்தது....
பனிமனிதன் சிறுமியின் விமர்சனம்
https://youtu.be/4EOpB6272eY
அன்புள்ள ஜெ,
இணையத்தில் பனிமனிதன் நாவல் பற்றிய இச்சிறுமியின் காணொளி கண்டேன். என்னுடைய சூழலில் இருந்து இவ்வாறான வரவுகள் நிகழ்வது மகிழ்வைத்தருகிறது.
அன்புடன்
அனோஜன்
***
அன்புள்ள அனோஜன்
அருமையான ஈழத்தமிழ்.
எந்த தனி உச்சரிப்பு என்றாலும் அதை பெண்களோ குழந்தைகளோ பேசும்போதுதான் அழகு
ஜெ
வெண்முரசில் போர்க்கலை
வணக்கம் சார்,
நலமா? வெண்முரசு படிக்க ஆரம்பித்த பிறகு வீரக்கலை சார்ந்த குறிப்புக்கள் வரும்போது அதை தனியா குறித்து வைக்க ஆரம்பித்தேன். இப்போது அதை தனியாக வெளியிடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால் நான்...