தினசரி தொகுப்புகள்: December 26, 2020

விஷ்ணுபுரம் விருது விழா-2020

இந்தமுறை கோவிட் தொற்று காரணமாக விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா இருக்காது என்று முன்னரே முடிவுசெய்திருந்தோம். குமரகுருபரன் விருது வழங்கப்பட்டதுபோல அந்த ஊரிலிருப்பவர்களே சென்று வாழ்த்துவழங்கி மீள்வதே திட்டமாக இருந்தது. ஆனால் மதுரையில்தான் விஷ்ணுபுரம்...

சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படம்

https://youtu.be/u5mP6g_3S04 சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு 2020 ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டதை ஒட்டி விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் எடுக்கப்பட்ட ஆவணப்படம். இயக்கம் கே.பி.வினோத். ஒளிப்பதிவு ஆனந்த் குமார். இசை ராஜன் சோமசுந்தரம்.

குறைவாகச் சொல்லும் கதைசொல்லிக்கு வாழ்த்து

இலக்கியம் என்பதே நுரைத்து வாழ்வின் இடைவெளிகளை எல்லாம் நிறைப்பது. வாழ்க்கையைவிட பொங்கி மேலெழுவது. ஆனால் செவ்வியலும் கற்பனாவாதமும் யதார்த்தவாதமும் பேரிலக்கியங்களை உருவாக்கியபின் அதன் தொடர்ச்சியாகவும் எதிர்வினையாகவும் குறைத்துச் சொல்லும் அழகியல் ஒன்று உருவாகியது....

நுண்கதைசொல்லியும் தொடர்பவர்களும்

சுரேஷ்குமார இந்திரஜித் தமிழ் இலக்கியத்தின் ஒரு காலகட்டத்தின் இலக்கிய நுட்பம் ஒன்றின் பிரதிநிதி. குறைத்துச் சொல்லுதல், முடியுமென்றால் சொல்லாமலேயே இருந்துவிடுதல், என்னும் கலைப்பாணி அது. அவரது அலையும்சிறகுகள் என்னும் முதல்சிறுகதைத்தொகுதி எண்பதுகளின் தொடக்கத்தில்...