Daily Archive: May 13, 2020

தேவி [சிறுகதை]

“ஒத்தை ஒரு பொம்புள கேரக்டரா? செரியாவாதே” என்றார் ‘பெட்டி’ காதர். “ஒருநாடகம்னா மினிமம் மூணு பொம்புளை கேரக்டர் வேணும். அதாக்கும் வளமொறை. சும்மா ஆளாளுக்கு தோணின மாதிரி நாடகம்போட்டா நாடகமாயிடுமா?” “இல்ல நாடகம்தானே?” என்று அனந்தன் சொன்னான். “நாடகம்னா? வே, நாடகம்தானேன்னு அம்மைய மகன் பெண்டாள முடியுமா? இல்ல கேக்கேன்” லாரன்ஸ் சூடாகிவிட்டான். “நாடகத்தைப் பத்திப் பேசும்வே. சும்மா வாயில வந்தத பேசப்பிடாது. பகவதி இருக்கப்பட்ட ஊராக்கும்” ‘பெட்டி’ காதர் சற்று தணிந்தார். “இஞ்சபாருங்க. நான் பதிமூணு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131081/

நற்றுணை, கூடு- கடிதங்கள்

நற்றுணை [சிறுகதை] அன்புள்ள ஜெ நற்றுணை கதையைப் பற்றி பேசும்போது எனக்கு நினைவுக்கு வந்தது நீங்களே எழுதிய ஒரு கட்டுரை. அதை தேடிக்கண்டடைய முடியவில்லை. அது மணிமேகலை காவியத்தைப் பற்றியது. அதில் மணிமேகலை ஒரு தாசி என்பதனால் உதயகுமாரன் என்பவன் அவளை தூக்கி வரச்சொல்கிறான். அவனே தேடி வருகிறான். அவள் ஒரு பளிங்கு அறைக்குள் செறு ஒளிந்துகொள்கிறாள். அவளை தேடிவரும் உதயகுமாரன் அவளை கண்டுபிடிக்கமுடியாமல் செல்கிறான் அவள் வெளிவந்து தன் தோழியிடம் அழுகிறாள். நான் இத்தனை தவம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131367/

போழ்வு, சீட்டு- கடிதங்கள்

போழ்வு [சிறுகதை] அன்புள்ள ஜெ, போழ்வு சிறுகதையை ஒரு குறுநாவலாகவே வாசிக்கவேண்டும். அது ஓர் உச்சத்தில் மையம் கொள்கிறது. அது வேலுத்தம்பியின் ஆளுமைப்பிளவு. ஆனால் கதையில் உள்ள சரடுகள் பல. அவர் ராஜா கேசவதாஸின் ஆளுமையில் மயங்கியவர், அவரைப்போலவே ஆக விரும்புபவர். ஆனால் அவர் அவரை தாண்டிச்செல்கிறார். ராஜா கேசவதாஸை கொல்வதுதான் அவர் மருமகனைக் கொல்வது திருவிதாங்கூர் சுரண்டப்படுவதற்கு எதிராக கிளர்ந்து எழுந்தவர். அவரே திருவிதாங்கூரைச் சுரண்ட ஆரம்பிக்கிறார். மெக்காலேயை பயன்படுத்த நினைத்தவர் மெக்காலேயால் பயன்படுத்தப்படுகிறார். அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131371/

அரசன்,சிட்டுக்குருவி- கடிதங்கள்

பித்திசைவு மூன்று வருகைகள். செங்கோலின் கீழ் என் அன்பு ஜெ, காலையில் செய்தித்தாளை புரட்டிவிட்ட பின் ஓர் இனம் புரியாத எதிர்மறை சிந்தனைகள் வந்தது…. இதனை விரட்ட ஜெ வின் தளத்திற்கு சென்று வருவோம் என்று தான் திறந்தேன். “செங்கோலின் கீழ்” என்ற தலைப்பு… சரி எதுவானாலும் பரவாயில்ல, மனுசன் எத எழுதுனாலும் நல்லாத்தானே எழுதுவார் என்றே ஆரம்பித்தேன். படித்து முடிக்கையில் வெடித்து சிரித்துவிட்டேன். என் வீட்டிலிருப்பவர்கள், ஏன்டீ அப்படியொரு சிரிப்பு, லூசா என்றார்கள். நான் நினைத்துக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131386/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–60

பகுதி ஆறு : படைப்புல் – 4 தந்தையே, எங்கு செல்வதென்று முடிவெடுக்க இயலாமல் துவாரகைக்கு வெளியே பாலைநிலத்தில் பதினைந்து நாட்களுக்கு மேல் தங்கியிருந்தோம். பல்வேறு ஓடைகளாக திரண்டு நகரிலிருந்து வெளிவந்தவர்கள் பாலைநிலத்தில் ஒருங்கிணைந்தோம். அங்கே மூத்தவர் ஃபானு அரண்மனைகளைக் கைவிட்டு தன் படையினருடனும் சுற்றத்துடனும் வந்து தங்கினார். அவரைத் தொடர்ந்து வந்த பிரத்யும்னனும் அனிருத்தனும் சற்று அப்பால் தங்கினார்கள். அரசி கிருஷ்ணையும் சாம்பனும் இறுதியாக வந்து தங்கினர். ஒவ்வொருநாளும் என அந்தக் கூட்டம் பெருகிக்கொண்டே சென்றது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131399/